தங்கள் வீட்டில் ஒரு வரம்பெற்ற பாஸ்ட்டரை வரவழைத்து மாதம் ஒருமுறை சிறப்பாக கூட்டம் நடத்தி, கூட்டத்துக்கு வருபவர்களுக்கு உணவளித்து ஆண்டவரின் ஊழியத்தை செய்து வரும் ஒரு ஊழியக்கார சகோதரி ஒருநாள் இன்னொரு விசுவாச சகோதரியிடம் வந்து "சிஸ்டர் நாங்கள் நடத்தும் மாத கூடுகையில் போதிக்க வரும் பாஸ்டர் மீது எனக்கு அதிகம் இச்சையாக இருக்கிறது. நானும் அதை விட்டு வெளியேற எவ்வளவோ முயன்று விட்டேன் ஜெபித்துவிட்டேன் முடியவில்லை அந்த பாஸ்டரை பார்த்தாலே எனக்கு இச்சை வந்துவிடுகிறது. என்று புலம்பியிருக்கிறார்கள்.
இந்த சகோதரிக்கு இரட்சிக்கப்பட்ட நல்ல கணவர் மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. அவ்வாறிருக்க அந்நியன்மேல் அந்த சகோதரிக்கு இச்சையை கொண்டுவருவது சத்துருதான் என்பது தெரிந்த விஷயம் ஆனால் அதை மேற் கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள்.
அந்த சகோதரிக்கு:
ஓன்று நீங்கள் மன்றாடி ஜெபித்து அந்த இச்சையின் ஆவியில் இருந்து விடுபடுங்கள் அது முடியவில்லை என்றால் உங்களுக்குள் இச்சையை தூண்டும் அந்த பாஸ்டர் வருவதை நிறுத்தி விடுங்கள் வேறு ஒரு பாஸ்டரை வைத்து கூட்டத்தை நடத்துங்கள் என்று அவர்களுக்கு ஆலோசனை சொல்லப்பட்டது .
ஆனால் அவர்களோ "அந்த பாஸ்டர் எங்களுக்கு மிகவும்வேண்டியவர் இவ்வளவு நாள் வந்து கூட்டம் நடத்தும் அவரை விட்டு வேறொருவரை வைத்து கூட்டம் நடத்த முடியாது எங்களுக்கு ஊழியம் மிக முக்கியம் என்று மறுத்து விட்டு இன்னும் அதே பாஸ்டர் அதே இச்சையின் ஆவியுடன் தொடர்ந்து கூடுகை
நடத்திகொண்டு இருக்கிறார்கள்.
பலர் இதுபோன்ற இச்சை சம்பந்தமான காரியங்களை மனதிலேயே மறைத்து வைத்து தானும் கெட்டுபோவதொடு மட்டுமலாமல் வரும் பாஸ்டர்களையும் விழவைத்துவிடுவதுண்டு. ஆனால் இந்த சகோதரி அதுபோல் மறைக்காமல் தன்னுடைய நிலைமையை வெளியில் சொல்லிவிட்டதில் இருந்தே அவர்கள் அதிலிருந்து விடுபட நினைக்கிறார்கள் என்பது புரிகிறது.
ஆகினும்
"உன் கண் உனக்கு இடரலை உண்டாக்கினால் அதை பிடுங்கி எறிந்து போடு" என்று நாம் ஆண்டவர் சொல்லியிருக்கிறார். நாம் கண்ணை பிடுங்கி போடாவிட்டாலும் அட்லீஸ்ட் ஏதாவது ஒரு வழியில் நமக்கு இடரலை உண்டாக்கும் காரியங்களை செய்யாமலாவது தவிர்ப்பது நல்லது என்றே கருதுகிறேன்.
ஆனால் இங்கு செய்யப்படும் ஊழியம் என்பது பல ஆத்துமாக்களுக்கு பயனுள்ள ஒரு காரியமாக இருப்பதால் இந்த காரியத்தில் எது முக்கியம்?
ஆத்துமா ஆதாயம் செய்யும் ஊழியமா? அல்லது நம்மை நிலை நிருத்தி கொள்ளும் பரிசுத்தமா?
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
26 மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?
மேலே வசனம் சொல்கிறபடி ஒருவன் அதிகமான ஆத்துமாக்களை ஆதாயபடுத்தி கொண்டு அவனும் உண்மையாய் இருப்பான் எனில் அவன் அதற்கேற்ற பலனை நிச்சயம் பெற்று கொள்வான் ஆனால் அவன் அனேக ஆத்துமாக்களை ஆதாயபடுத்தி அவன் உண்மையாய் இல்லாதவனாய் போனால் அதினால் லாபம் என்ன.
நம்மை நிலை நிருத்தி கொள்ளும் பரிசுத்தமே நமக்கு முக்கியம்
நாம் நம்மை நிலைநிறுத்தி கொல்வதினாலே அனேக ஆத்துமாக்களை ஆதாயம் செய்து கொள்ளலாம்
ஆத்துமா ஆதாயம் என்பது தெரு தெருவாய் சென்று சொல்வது அல்ல அல்லது பல சபைகளில் சென்று சொல்வதும் அல்ல
அதாவது ஒருவன் தேவனுடைய வார்த்தைக்கு முற்றிலுமாய் கீழ்படிந்து தேவன் சொல்கின்றபடி நடந்தால் போதும்
அவன் வேலை செய்கின்ற இடத்தில் அவனுடைய ஒழுக்கத்தை பார்த்து ஆண்டவராகிய கிறிஸ்துவை ஏற்றுகொள்வார்கள்
அவனுடன் பழகுகின்றவர்களை அவன் நடக்கையின் மூலம் ஆண்டவரிடத்தில் ஒருவனை கொண்டு வர முடியும்
மற்றபடி அற்புதங்களை செய்வதால் ஆத்துமாக்கள் அநேகர் வரலாம் இல்லை என்றால் அவர்கள் தேவையின் நிமித்தம் வரலாம் (அது தவறு என்று நான் கூறவில்லை)
அப்படி அற்புதத்தினால் வருகின்றவர்கள் தேவையின் நிமித்தம் வருகின்றவர்கள் அடுத்தமுறையும் அற்புதத்தை தேவையையும் எதிர்பார்த்து கொண்டு இருப்பார்கள் அது நடக்க வில்லை என்றால் முற்றிலுமாக இடற வாய்ப்பு இருக்கின்றது இளைத்து போகவும் வறுத்த படவும் அதிக வாய்ப்பு இருக்கின்றது
ஆனால் தேவன் மேலுள்ள அன்பை எதிர்பார்த்து வருகின்றவர்கள் விழுந்தாலும் வாழ்க்கை சோர்ந்து போனாலும் நிச்சயம் எழுந்து திரும்பவும் தேவனுக்காக எழும்பி நிற்பார்கள் (அந்த அன்பு அவர்களை நெருக்கி ஏவும் விடாது )
ஆத்துமா ஆதாயம் செய்யும் ஊழியமா? அல்லது நம்மை நிலை நிருத்தி கொள்ளும் பரிசுத்தமா? என்று வந்தால்
நம்மை நிலை நிறுத்தி கொள்ளும் பரிசுத்தமே முக்கியம் முக்கியம்
ஊழியத்தைவிட பரிசுத்தமே முக்கியம்என்பது என் கருது
மற்ற சகோதர்கள் கருத்துகளை படிக்க தெரிந்து கொள்ள ஆவலுடன் இருக்கின்றேன்
-- Edited by EDWIN SUDHAKAR on Thursday 9th of December 2010 04:18:22 PM
__________________
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)