14. ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார்; இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள்.
15. தீமையை வெறுத்து நன்மையைத் தெரிந்துகொள்ள அறியும் வயதுமட்டும் அவர் வெண்ணெயையும் தேனையும் சாப்பிடுவார்.
7. வெட்டாந்தரை தண்ணீர்த்தடாகமும், வறண்ட நிலம் நீரூற்றுகளுமாகும், வலுசர்ப்பங்கள் தாபரித்துக் கிடந்த இடங்களிலே புல்லும் கொறுக்கையும் நாணலும் உண்டாகும்.
8. அங்கே பெரும்பாதையான வழியும் இருக்கும்; அது பரிசுத்த வழி என்னப்படும்; தீட்டுள்ளவன் அதிலே நடந்துவருவதில்லை; அந்த வழியில் நடக்கிறவர்கள் பேதையாயிருந்தாலும் திசைகெட்டுப் போவதில்லை.
சகோ சுந்தர் அவர்கள் கூறிய படி நேரடியாக 'தன் வினை தன்னை சுடும்' என்கிற வாசனைப்பு இல்லாவிட்டாலும் நான் அறிந்த பின் வரும் வசனங்கள் அந்த நடையிலே அமைந்தவையாக இருக்கின்றன..
சங்கீதம் 7:15 குழியை வெட்டி, அதை ஆழமாக்கினான்; தான்வெட்டின குழியில் தானே விழுந்தான்.
யோபு 3:25 நான் பயந்த காரியம் எனக்குநேரிட்டது; நான் அஞ்சினது எனக்கு வந்தது.
எண்ணாகமம் 16:38தங்கள் ஆத்துமாக்களுக்கே கேடுண்டாக்கின அந்தப் பாவிகளின் தூபகலசங்களைப் பலிபீடத்தை மூடத்தக்க தட்டையான தகடுகளாய் அடிக்கக்கடவர்கள்; அவர்கள் கர்த்தருடைய சந்நிதியில் அவைகளைக் கொண்டுவந்ததினால் அவைகள் பரிசுத்தமாயின; அவைகள் இஸ்ரவேல் புத்திரருக்கு ஒரு அடையாளமாயிருக்கும் என்றார்.
II நாளாகமம் 26:16 அவன் பலப்பட்டபோது, தனக்குக்கேடுண்டாகுமட்டும், அவனுடைய மனம்மேட்டிமையாகி, தன் தேவனாகிய கர்த்தருக்குவிரோதமாக மீறுதல் செய்து தூபபீடத்தின்மேல் தூபங்காட்ட கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசித்தான்.
எஸ்தர் 7:10 அப்படியே ஆமான்மொர்தெகாய்க்கு ஆயத்தம்பண்ணின தூக்குமரத்தில் ஆமானையே தூக்கிப்போட்டார்கள்; அப்பொழுது ராஜாவின் உக்கிரம் தணிந்தது.
எரேமியா 13:22 இவைகள் எனக்குநேரிட்டது ஏதென்று நீ உன் இருதயத்தில் சொன்னாயாகில், உன் திரளான அக்கிரமத்தினிமித்தமே உன் ஓரங்கள் விலக்கப்பட்டு, உன் பாதங்கள் பலவந்தஞ்செய்யப்படுகின்றன.
II பேதுரு 2:20கர்த்தரும் இரட்சகருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவினாலே உலகத்தின் அசுத்தங்களுக்குத் தப்பினவர்கள் மறுபடியும் அவைகளால் சிக்கிக்கொண்டு ஜெயிக்கப்பட்டால், அவர்களுடைய பின்னிலைமை முன்னிலைமையிலும் கேடுள்ளதாயிருக்கும்.
II பேதுரு 3:16 எல்லா நிருபங்களிலும் இவைகளைக்குறித்துப் பேசியிருக்கிறான்; அவன் சொன்னவைகளில் சில காரியங்கள் அறிகிறதற்கு அரிதாயிருக்கிறது; கல்லாதவர்களும் உறுதியில்லாதவர்களும் மற்ற வேதவாக்கியங்களைப் புரட்டுகிறதுபோலத் தங்களுக்குக்கேடுவரத்தக்கதாக இவைகளையும் புரட்டுகிறார்கள்.
ஓசியா 13:9 இஸ்ரவேலே, நீ உனக்குக் கேடுண்டாக்கிக்கொண்டாய்; ஆனாலும் என்னிடத்தில் உனக்குச் சகாயம் உண்டு.
நம் வேதத்தில் புலவர்கள் என்ற வார்த்தை ஒரே ஒருமுறை தான் குறிபிடப்பட்டுள்ளது அந்த புலவர்கள் என்ற வார்த்தை எந்த அதிகாரத்தில் குறிபிடப்பட்டுள்ளது என்பதை தள சகோதரர்கள் கண்டுபிடித்து பதிவிடுமாறு கேட்டுகொள்கின்றேன்.
கணினி (COMPUTER ) உதவியின்றி கண்டுபிடிக்கவும், உங்களை நான் நம்புகின்றேன்....
-- Edited by EDWIN SUDHAKAR on Thursday 21st of March 2013 05:27:59 PM
__________________
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)
வேதத்தில் தாங்கள் கூறுவது போல ஒரேயொரு தரம் மாத்திரம் வரும் 'புலவர்கள்'/'poets 'என்று வருகிற வசனம் 'அப்போஸ்தலரருடைய நடபடிகள்' புத்தகத்தில் தான் உள்ளது..
அதிகாரம் 17,வசனம் 28..
தாங்கள் நம்பினபடி, கணணி தேடலில் உபயோகிக்கப்படுத்தப்படவில்லை.