இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தேவனால் எல்லோரையும் இரட்சிக்க முடியுமா?


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
தேவனால் எல்லோரையும் இரட்சிக்க முடியுமா?
Permalink  
 


"எல்லோருக்கும் இரட்சிப்பு " "யார் என்னசெய்தாலும் அவர்களுக்கு நித்தியஜீவன்" என்ற கொள்கையின் அடிபடையில் வாதிடும் சில சகோதரர்களின்  கருத்தில் அனேக  முரண்பட்ட கருத்துக்கள் இருப்பதை நாம் அனைவரும்  அறிவோம் "யார் எப்படியொரு துன்மார்க்க வாழ்க்கை வாழ்ந்தாலும் அவர்களுக்கு நித்திய ஜீவன் உண்டு" என்ற கருத்துக்கள் பலரை நிர்விசாரமாக வாழ தூண்டி அநேகருக்கு இடரல ஏற்ப்படுத்தும் என்பதும் நாம் அறிந்ததே.    

அதற்காக  "தேவனால் எல்லோரையும் இரட்சிக்க முடியாது" என்று நாம் சொல்லி விட முடியாது, சொல்லவும் கூடாது!  
 
மாற்கு 10:27  தேவனாலே எல்லாம் கூடும் என்றார்.
 
யோபு 42:2 தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்
 
"தேவன் சகலத்தையும் செய்யவல்லவர்" "அவரால் எல்லாமே கூடும்" என்று வசனம் சொல்லும் பட்சத்தில் அவரால் செய்யமுடியாதது ஒன்றுமே இல்லை என்று பொருளாகிவிடுகிறது  அதனால்தான் வேதம் அவரை "சர்வ வல்லவர்" என்று சொல்கிறது அதாவது சர்வத்தையும் செய்ய வல்லவர் அவரால் செய்ய முடியாதது எதுவுமே இல்லை! இந்த கருத்தின் அடிப்படையில் 'தேவனால் எல்லோரையும் இரட்சிக்க முடியாது" என்ற வாதம் சரியானது அல்ல. அது தேவனின் சர்வ வல்லமையை மட்டுபடுத்துவதுபோல உள்ளது.  ஏனெனில் தேவனுக்கு முடியாதது என்று ஒன்றும் இல்லை!
 
தேவனால் இது முடியாது என்றுசொல்வதற்கு எத்தனை வசனங்களை சுட்டினாலும் எல்லா வசனத்தையும் "தேவனால் எல்லாம் கூடும்" என்ற ஒரே வசனம் மேற்க் கொண்டுவிடும் என்பதை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.      
 
வசனத்தின் அடிப்படையிலான நம்முடய விசுவாசத்தின்படி, "தேவனால் எல்லோரையும் இரட்சிக்க முடியும் ஆனால் அவர் தன்னுடய வார்த்தைகளாகிய நியமனங்களை மீறி எதுவும் செய்யமாட்டார்"  என்று நமது சொந்த கருத்தை வேண்டுமானால் கூறிக்கொள்ளலாம்:  மற்றபடி "தேவனால் இது முடியாது" என்று திட்டவட்டமாக சொல்வதற்கு எதுவும் இல்லை! 
 
அவரவர் கொண்டுள்ள  விசுவாசம் மற்றும் கிரியையின் அடிப்படையில் அவரவருக்கு நியமிக்கபட்ட  கூலியை எதிர்பாப்பதில் தவறில்லை. எழுதப்பட்ட வசனத்தின் அடப்படையில் வேதம் சொல்லும் ஆக்கினையை எடுத்து  சொல்லத்தான் நமக்கு உரிமை இருக்கிறதேயன்றி,  வசனத்தின் அடிப்படையில் கூட  அடுத்தவருக்கு இப்படிதான் சம்பவிக்க வேண்டும் துன்மார்க்கனே நீ தொலைந்துபோ என்று சொல்லி  தீர்மானிக்க நமக்கு  எந்த உரிமையும்  இல்லை. ஏனெனில் தேவன் தயாளகுணமும்  மிகுந்த இரக்கமும் உள்ளவர் என்று வேதம் சொல்கிறது  அவருக்குண்டானவைகளை அவர் எப்படி வேண்டுமானாலும் கொடுக்க அவருக்கு உரிமை இருக்கிறது!
 
மத்தேயு 20:15 என்னுடையதை என் இஷ்டப்படிச் செய்ய எனக்கு அதிகாரமில்லையா?
  
நாம் எழுதுவதும் விசுவாசிப்பதும் தேவன் எழுதிகொடுத்துள்ள வார்த்தைகள் அடிப்படயிலேயே ஆகினும்,  தேவன் தான் சொல்லிய வார்த்தைகளை பல நேரங்களில் மாற்றியிருக்கிறார் என்றும் அவ்வாறு மாற்றுவதற்கு அவருக்கு அதிகாரம் இருக்கிறது என்பதையும் நாம் வேதபுத்தகததில் பல இடங்களில் வாசிக்கிறோம். எனவே  துன்மார்க்கனுக்கு நியமித்த தண்டனை அல்லது அவர்களது இரட்சிப்பு பற்றிய விஷயத்தில் நாம் ஒரு முடிவுக்குவராமல், சர்வவல்ல தேவனின்
சித்தத்துக்கு ஒப்புகொடுத்து ஜெபிப்பதே சிறந்தது என்று கருதுகிறேன்.
 
அதாவது "சர்வவல்ல தேவனால் எல்லோரையும் இரட்சிக்க முடியும் "ஆனால் அதை செய்வதும் செய்யாதிருப்பதும் முழுக்க முழுக்க அவருடைய தனிப்பட்ட விருப்பம்!  இவ் விஷயத்தில் அவரது வல்லமையை யாரும் மட்டுபடுத்த முடியாது!


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

கிரியின் அவசியத்தை அதிகமதிகமாக அறிந்தவன் நான். என்னுடய அனேக பதிவுகளில் கிரியின் அவசியத்தை  குறித்து  திரும்ப திரும்ப எழுதியிருக்கிறேன். இயேசுவின் வார்த்தைகளை அப்படியே கொண்டு வாழ முயற்ச்சிக்க  வேண்டும் என்பது மட்டுமல்ல தேவனின் கற்பனைகள் மற்றும் நீதி நியாயங்களையும்கூட  கைகொண்டு நடக்கவேண்டும் என்று அனேக வசன ஆதாரங்களுடன் பல கட்டுரைகளை நான் பதிவிட்டிருக்கிறேன் 
 
 
ஆனால் என்னுடய கிரியயிநிமித்தம் நான் தேவனுக்கு  முன்பாக  மேன்மை பாராட்டுவதைவிட நான் சாகிறது  எனக்கு  நலமாக  இருக்கும் என்றே  கருதுகிறேன். என்னுடய கிரியை  எல்லாமே  தேவனுடய  பார்வைக்கு ஒன்றுமில்லை, வெறும்  அழுக்கான  கந்தைகள்  போன்றதே  என்னுடய நீதியும். 
 
கிரியை முக்கியமானதுதான் ஆனால் அந்த கிரியை வைத்துகொண்டு தேவனுக்கு முன்னால் மேன்மை பாராடுவது தவறு!  
 
ரோமர் 4:2 ஆபிரகாம் கிரியைகளினாலே நீதிமானாக்கப்பட்டானாகில் மேன்மைபாராட்ட அவனுக்கு ஏதுவுண்டு; ஆகிலும் தேவனுக்கு முன்பாக மேன்மைபாராட்ட ஏதுவில்லை.
 
தேவன் கழுதையை பேசவைத்து கிரியை செய்ய வைப்பார், கல்லை எடுத்து அதை ஆபிரகாமுக்கு பிள்ளைகளாக்கி  காரியங்களை நடப்பிப்பார் இந்நிலையில் மாம்சமான  யாருமே  தேவனுக்கு  முன்னால் மேன்மை பாராட்ட  ஒன்றுமில்லை  
 
II கொரிந்தியர் 10:17 மேன்மைபாராட்டுகிறவன் கர்த்தரைக்குறித்தே மேன்மைபாராட்டக்கடவன்.
 
கலாத்தியர் 6:14 நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறொன்றையுங் குறித்து மேன்மைபாராட்டாதிருப்பேனாக;
 
என்று வேதம் திரும்ப திரும்ப சொல்லும் பட்சத்தில், தவறான கருத்துடைய ஒருவருக்கு பதில் சொல்கிறோம் என்று நினைத்துகொண்டு  இவ்வுலகில்  எல்லா காரியங்களையும் நடப்பிக்கிற தேவனால் எல்லாம் கூடாது ஆனால்  என்னுடய கிரியையினால் அது கூடிவிடும் என்று எழுதப்படும் வார்த்தைகள் நிச்சயம்
சரியான கருத்துக்கள் அல்ல. அதை கிறிஸ்த்தவர்கள் என்று சொல்லும்
கூட்டத்தாரும் ஆமோதிப்பது முறையல்ல!  யாரையோ தாக்கவேண்டும் என்பதற்காக தேவனை மட்டுபடுத்துவது முறையல்ல! 
  
 
SUNDAR wrote:
அதாவது "சர்வவல்ல தேவனால் எல்லோரையும் இரட்சிக்க முடியும் " ஆனால் அதை செய்வதும் செய்திருப்பதும் முழுக்க முழுக்க அவருடைய தனிப்பட்ட விருப்பம்!  இவ்விஷயத்தில்  அவரது வல்லமையை யாரும் மட்டுபடுத்த முடியாது!
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
aryadasan wrote:
//////இதைவிட குழப்பமான ஒரு கொள்கையை எந்த மதத்தவரும் வெளியிடவே முடியாது என்பது சத்தியம், சத்தியம், சத்தியம். நல்லா தான் சொல்லி கொடுக்கிறீர்கள்.////
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------  
 
குழப்பம் என்னுடைய கருத்தில் இல்லை சகோதரரே நீங்கள் புரிந்துகொண்ட விதத்தில்தான் இருக்கிறது. நீங்கள் சொல்லியுள்ள உதாரணத்தின்படியே நான்
வருகிறேன். 
 
aryadasan wrote:
////நான் கொஞ்சம் சொல்லட்டுமா, எங்க அம்மா விடுமுறை நாட்களில் நல்ல விருந்து செய்வாங்க, நாங்களோ விடுமுறை தானே என்று நன்றாக தூங்கிக்கொண்டிருப்போம், அம்மா சொல்லுவாங்க,"குளிச்சுட்டு வாங்கடா, சாப்பிடலாம்..." என்பதாக;நாங்கள் சொல்லுவோம், பசிக்குதம்மா, சாப்பிட்டுவிட்டு குளிக்கிறோம் என்பதாக,அம்மா சொல்லுவாங்க,"குளிச்சா தான் சாப்பாடு.." என்பதாக.
 
இப்போது சொல்லுங்க பெரியவங்களே, எங்கம்மா எங்களுக்கு விருந்து சமைக்க இயலாதவங்களா..?///
 
"குளித்துவிட்டு சாப்பிடு" என்று சொல்லும் உங்கள் தாயாருக்கு சமைக்க தெரியாது என்றோ அல்லது "குளிக்காத பிள்ளைகளுக்கு அந்த உணவை கொடுக்கமுடியாது" என்றோ நாம்  நிச்சயம் கூற முடியாது.  அவர்களால் செய்ய முடியும், ஆனால் அவர்களின் சொல்லிய  கட்டளையிநிமித்தம்  அவர்கள்  செய்வதற்கு மறுக்கிறார்கள் என்பதே அதன் பொருள்.
 
அதைதான் நானும் இங்கு சொல்ல வருகிறேன்!
 
இயேசுவை ஏற்றுக்கொண்டு பரிசுத்தமாக வாழ்ந்தால்,  இயேசுவழியேதான் இரட்சிப்பு என்பது தேவ நியமணம் அனால்  தேவன் நினைத்தால்  எல்லோரையும் இரட்சிக்க முடியும்! ஏனெனில் அந்த நியமணத்தை ஏற்ப்படுத்தியவரும் இயேசுவை பூமிக்கு அனுப்பியவரும் தேவனே!  இங்கு தேவனால் முடியாது என்று ஒரு காரியத்தை சொல்வோமாகில் அவரை "சர்வ வல்லவர்" என்று வேதம் சொல்வது பொருந்தாது.   
 
தேவனால் எல்லாம் கூடும் ஆனால் இயேசுவின் வழியாக வந்தால் மட்டுமே அவர் ஏற்றுக்கொள்வார் என்று வேண்டுமானால் சொல்லிகொள்ளலாம்.  
 
aryadasan wrote:
///தன் மெய்வருத்த கூலி தரும் என்பது போல மனிதனுடைய முயற்சியில்லாமல் இறையருளைப் பெறவே இயலாது;///  
 
மெய்வருத்த கூலிதரும் என்பது வள்ளுவர் வாக்கு. மெய் வருத்துவோருக்கு கூலி நிச்சயம் உண்டுன்பது உண்மையே. ஆனால கிறிஸ்த்தவத்தில் ' இயேசுவை விசுவாசித்தால்  இரட்சிப்பு உண்டு" என்பது வேத வாக்கு. அதற்க்கு மெய்வருத்த வேண்டிய அவசியம் இல்லை. 
 
ரோமர் 10:9 என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.

இங்கு மெய் என்ற உடம்பு  அல்ல இருதய விசுவாசமே  பிரதான இடம்பெறும்!
  
aryadasan wrote:
 ///இறைச்சித்தம் எப்போதும் நமக்கு ஆதரவாகவே இருந்தாலும் மனிதனுடைய கீழ்ப்படியாமையினால் அது நடைபெறாமலும் போகிறது என்பதே உண்மை.///
 
தேவன் தந்துள்ள  எல்லா கட்டளைகளுக்கும் எல்லா நேரத்திலும் கீழ்படிந்து நடந்தவன் எவரும் இல்லை!
 
பிரசங்கி 7:20 ஒரு பாவமும் செய்யாமல், நன்மையையே செய்யத்தக்க நீதிமான் பூமியிலில்லை.
 
aryadasan wrote:
///எனவே அனைவருக்கும் முக்தி என்று சிலர் நினைத்துக்கொண்டிருப்பது இலவு காத்த கிள்ளையின் நிலைமைக்கே மனிதனைத் தள்ளிவிடும் என்று நினைக்கிறேன்.///
 
எல்லோரும் இரட்சிப்படைய வேண்டும் என்பது தேவனின் சித்தமாயிருக்கிறது.
 
I தீமோத்தேயு 2:4 எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.
அவருடய சிந்தையே நாமும் கொண்டிருப்போம்/வாஞ்சிப்போம்.  அதற்க்கு மேல் என்ன நடக்க வேண்டும் என்பதை தேவன் பார்த்துகொள்வார். தேவனின்
சித்தத்துக்கு விரோதமாக முடிவெடுக்க நாம் அவரைவிட பெரியவர்கள் அல்ல!   
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

ஒரு மனுஷனின் இரட்சிப்பு அவனது கிரியை மிக மிக அவசியம் என்ற கருத்தை  குறித்து நான் இங்கு எந்த எதிர் கருத்தும் எழுத விரும்பவில்லை. 
 
ஆனால்  "மனுஷனால் கூடாதுதான் அது  தேவனால் கூடும் அல்லது தேவனுடன் சேர்ந்தால் மனுஷனால் கூடும்" என்று வசனம் சொல்லும் போது  "தேவனால் சிலது முடியவே முடியாது அனால் மனுஷனுடைய  கிரியையினால் கூடும்" என்பது போன்று ஒரு கருத்தை நம்மால் ஏற்க்க முடியாது!
 
நான்  ஒரேஒரு கேள்வி கேட்கிறேன்:: நீங்கள் செய்யும் ஒரு நன்மையான காரியம் உங்கள் சுய பெலத்தால் செய்கிறீர்களா அல்லது தேவன் உங்களுக்கு அதை செய்யும் அளவுக்கு  வாய்ப்பை  ஏற்ப்படுத்தியதால் செய்கிறீர்களா?  உங்களை அந்த கிரியைகளை செய்யவைப்பவர் தேவனே என்பதே எனது கருத்து (மனுஷ
பெலத்தினாலோ பராக்கிரமத்தலோ அல்ல, தேவனின் ஆவியாலேயே எல்லாம் ஆகும்)   
 
என் சொந்த பெலத்தால்தான்  கிரியை செய்கிறேன்  அதில் தேவ ஆவியானவரின் தூண்டுதல் இல்லை என்று கருதுவீர்களானால் உங்கள் கருத்தில் நான் தலையிட விரும்பவில்லை.
 
இல்லை தேவனின் தூண்டுதலின் பேரில் என்னுடய விருப்பமும் இணைத்து நன்மை செய்கிறேன் என்று கருதினால்  அனைத்துக்கும் அடிப்படை காரணம் அல்லது அனைத்தையும் செய்பவர் தேவன் என்று ஆகிவிடுகிறது. அவர் மனுஷனுடன் சேர்ந்து எல்லாவற்றையும் செய்து முடித்தாலும் சரி அல்லது மனுஷன் தேவனுடன் சேர்ந்தது எல்லாம் கூடுமானாலும் சரி அங்கு "எல்லாம்" என்ற வார்த்தையில் எல்லோரின் இரட்சிப்பும் அடங்குகிறது. ஆனால் அதை 
அவரவர் தகுதிக்கு ஏற்ப வழங்குவது தேவனின் தனிப்பட்ட தீர்மானத்தின் அடிபடையில் நடக்கும்.  
 
இங்கு   நான் எதிர்ப்பு தெரிவிப்பது "இது தேவனால் முடியாது" என்று எதையும்  சொல்லாதீர்கள் என்பதுதான். ஒரே ஒரு காரியம் அவரால் முடியாது என்றாலும் பின்னர்  "சர்வ வல்லவர்" என்பதன் பொருள் என்ன? 
 
பாதாளத்தில் அவதிப்படும் மனுஷர்களை தேவன் நினைத்தால் நிச்சயம் மீட்க முடியும். ஆனால் அவர் அதற்க்கான திட்டங்களை வகுத்து  அந்த நாட்கள் நிறைவேரும்வரை  காத்திருக்கிறார் அவ்வளவே! (அவரால் முடியாது என்று சொல்ல ஒன்றும் இல்லை). உடனடியாக அவர்களை மீட்க முடியுமா என்றாலும் முடியும்தான். ஆனால் அதன் பின்விளைவுகள் சற்று மோசமாக இருக்கும்
அதனால் மனுஷனுக்குதான் இன்னும் அதிக வேதனை. அதனாலேயே அவர் காலம் நிறைவேறும்வரை பொறுமையாக இருக்கிறார். அவர் பொறுமை காப்பது எல்லாம் மனுஷனுக்காகவே மற்றபடி அவரால் முடியாமல் அல்ல!  
 
ஒரு குழந்தையை பிடித்து வைத்துகொண்டு ஒருவன் பிளாக் மெயில் பண்ணும் போது துப்பாக்கியுடன் நிற்கும் நூறு போலிஸ்காரர்கள் பொறுமைகாப்பது இல்லையா? அது போன்றதுதான் தேவனால் முடியாது என்று சொல்லப்படும் நிலைகளும்
 
மேலும் ஒருகாரியத்தை நான் இங்கு தெரிவித்துகொள்கிறேன். துன்மார்க்கனுக்கு நித்திய அழிவு மட்டும் தான் தண்டனை என்றால் எல்லா துன்மார்க்கனும் முடிந்தஅளவு துன்மாக்கமாக நடந்து வாழும்காலத்தில் எல்லா சுகத்தையும் அனுபவித்து விட்டு, வாழ்ந்து மரித்து பின்னர் தேவனின் நியாயதீர்ப்பின் போது சுலபமாக அழிந்து போவார்கள். இன்று உலகத்தில் துன்மார்க்கமாக நடக்கும்  அநேகர் அப்படி எண்ணத்தில்தான் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள்.  அதைசெய் இதை செய்யாதே என்று ஒவ்வொன்றாக பார்த்து பார்த்து செய்வதை விட முடிந்த அளவு இன்பமாக வாழ்ந்துவிட்டு, சாவு வந்தால் செத்துபோக வேண்டியதுதான் என்பதுதான் பலரின் கருத்து!
 
நானும் கூட ஆண்டவரை அறியாத காலங்களில் அதிகமாக சிகரெட் பிடிப்பவன் யாராவது வந்து என்னிடம் கேன்சர் வரும் நீ சீக்கிரம் செத்துபோவாய் என்று சொன்னால் "இந்த உலகில் இருந்து என்னத்தை கண்டோம் சீக்கிரம் செத்துபோவதே நலம் என்று சொல்லும் நிலையிலேயே இருந்தேன்!    
 
ஆனால் ஆண்டவரை அறிந்து உண்மையை உணர்ந்த பின்னரே அழிவு என்பது அவ்வளவு சுலபமானது அல்லஎன்றும் அவனவன் செய்த துன்மார்க்கத்துக்கு தகுந்த தண்டனையை  அனுபவிக்காமல் ஒருவனாலும்  அழிந்துபோகவும் முடியாது நித்தியத்திலும் பிரவேசிக்க முடியாது! என்பதை அறிந்து கொண்டேன்
 
"துன்மார்க்கனுக்கு அவன் கிரியைக்கு தக்க  தண்டனை உண்டு" என்பதை யாரும் மறுக்க முடியாது! அதை குறித்து அனேக வசனங்கள் வேதத்தில் இருக்கின்றன  ஆனால் அந்த தண்டனை எப்படியிருக்கும்? அழிவு என்பது எதை  குறிக்கும்? என்பதை குறித்து முடிவுசொல்ல நமக்கு அதிகாரம்இல்லை! அப்படியே ஒருவருக்கு அது குறித்து  திட்டமாக தெரிந்தாலும் கூட ஒருபுறம்  ஜனங்களை எச்சரித்து விட்டு மறுபுறம் தேவனிடம் அவர்களின் மீட்புக்காக மன்றாடுவது அவசியம். இந்நிலையில் தேவனாலேயே அது முடியாது என்று தேவனின் வல்லமைக்குமேல் மனுஷனின் கிரியை உயர்த்துவது சரியல்ல!  என்னை பொறுத்தவரை நான் யாரையும் வசனத்தின் அடிப்படையில் கூட நியாயம் தீர்க்க விரும்பவில்லை.    
 
கிறிஸ்த்தவம் என்பது விசுவாசத்தின் அடிப்படையிலான மார்க்கம்! ஒருவர் எப்படி விசுவாசிக்கிறாரோ அதன் அடிப்படயிலேயே அவருக்கு காரியங்கள் நடைபெறும். விசுவாசமற்ற இடங்களில் இயேசுவால் கிரியைசெய்ய முடியவில்லை.  யாருடைய விசுவாசத்திலும் நான் குறுக்கிடவிரும்பவில்லை. "விசுவாசிப்பவனுக்கு எல்லாம் கூடும்" என்பதன் அடிப்படையில் எனது விசுவாசத்தின் அடிப்படையிலான காரியங்களே எனக்கு சம்பவிக்கும்.  
 
என்னுடய வாதத்தின் அடிப்படை கருத்து என்னவெனில்:  ஒரு ஆதாமின் மீறுதல் மற்றும் கீழ்படியாமையால்  எல்லா மனுஷனையும் பாவியாக்கிபோனோம்
(இங்கு நம்முடைய கிரியை எதுவும் இல்லை)  ஒரே ஒரு ஆபிரஹாமின் பலி மூலம் பூமியின் வம்சங்கள் எல்லாம் ஆசீர்வதிக்கபட்டது (இங்கும் நம்முடய கீழ்படிதல் எதுவும் இல்லை)  எவ்வளவோ துன்மார்க்கமாக நடந்து சிறை பட்டுப்போன இஸ்ரவேல் ஜனங்களின் அக்கிரமங்களை எசேக்கியேல் சுமந்தான் என்று வேதம் சொல்கிறது.  அதேபோல்  ஒரு இயேசுவின் கீழ்படிதல் மற்றும் பலியால் எல்லோரும்  இரட்சிப்பை  பெற்றோம் (இங்கும் நம்முடய கிரியை எதுவும் இல்லை) அதேபோல் ஒரு ஒரு மனுஷனின் நீதியான கிரியை மற்றும் கீழ்படிதல் மூலம்  எல்லா மனுஷனையும் மீட்க முடியும்  என்பதே எனது விசுவாசம். 
 
இந்தியாவில் எத்தனை கோடி மனுஷர்கள் இருந்தாலும் அவர்கள் தேர்ந்தெடுத்த மன்மோகன் சிங்  ஒருகருத்தை சொல்லும்போது அது இந்தியாவின் கருத்து என்று ஆகிவிடுகிறது. அதேபோல் மொத்த மனுஷ வர்க்கமும்  ஒரே ஒரு ஆளாகத்தான் REPRESENT பண்ணப்படும். ஏனெனில் ஒரேஒரு ஆவியில் இருந்துதான் எல்லோரும் வந்திருக்கிறோம். ஒருவன் சாத்தானை ஜெயம்கொண்டால் எல்லோருமே அவனை ஜெயம்கொண்ட மாதிரிதான்!  மற்றபடி  துன்மாக்கனுக்கு கொடுக்கப்பட வேண்டிய தணடனையை தேவன் பார்த்துகொள்வார்.  
 
நீங்கள் "இரட்சிப்பை கண்டடைய மாட்டான்" என்று எழுதப்பட்டுள்ள வார்த்தைகள் துன்மார்கனுக்கு என்று கருதுகிறீர்கள். ஆனால் நான்  அது எனக்கு என்றே எடுத்து கொண்டு காரியங்களை செய்ய விளைகிறேன் காரணம் சாத்தானை ஜெயிக்க முடியாதவரை நானும் ஒரு துன்மாக்கனே!    
 
எனவே தேவனை அறிந்து கொண்ட  ஒவ்வொருவரும் அவரவர் அதிக பிரயாசம் எடுத்து  தேவனின் வார்த்தையை சரியாக கைகொண்டு வாழ்ந்து, இயேசுவால் தோற்க்கடிக்கபட்ட நிலையில் இருக்கும் சாத்தானின் அதிகாரத்தை முறியடித்து அவனை ஜெயம்கொள்வதர்க்கான கிரியைகளை செய்வோமாக
 
(சாத்தானின் கிரியை இருக்கும்வரை துன்மார்க்கனும் கள்ள  உபதேசக்கரனும் இருக்கும் அதை சிலர் தொடர்ந்து செய்து கொண்டு தான் இருப்பார்கள் அதை யாராலும் ஒழிக்க முடியாது)   
 
விசுவாசத்துடன் கூடிய கிரியையின் அடிப்படையில் வேத  வசனங்களை கைகொண்டு வாழவந்தான் மூலம் மட்டுமே   சாத்தானை ஜெயம்கொள்ள முடியும். தேவையான அனைத்தையும்  தேவன் எழுதி கொடுத்துவிட்டார்  எனவே அடுத்தவர்களை நியாயம்  தீர்ப்பதை  பின்னுக்கு தள்ளி மேலானவைகளை மாத்திரம் தேடுவோமாக!  
 
மாற்கு 9:23 நீ விசுவாசிக்கக்கூடுமானால் ஆகும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என்றார்.
  
 லூக்கா 11:28  தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்துக்கொள்ளுகிறவர்களே அதிக பாக்கியவான்கள் என்றார்.
 
வெளி 22:14 ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள்.
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard