ஒரு காரியத்தை செய்யவேண்டும் என்று துணித்து இறங்கியவர்கள் உடலில் உண்டாகும் நோவு, பசி , தூக்கம், அடுத்தவர் சொல்லும் அவமதிப்பான சொற்கள் எதையும் பொருட்படுத்தாது தான் காரியத்தை செய்வதிலேயே கவனமாக இருப்பார். என்பதே!
உலகத்தார் செய்யும் உலகத்து காரியங்களையே ஒருவர் இவ்வளவு கவனமாக எதையும் பொருட்படுத்தாது செய்கிறார் என்றால், ஒப்பில்லா கடவுளின் காரியங்களை செய்யும்நாம் அதற்க்குமேல் அக்கறையாகவும் கவனமாகவும் இருக்க வேண்டும் அல்லவா?
இதே கருத்தை நமது விவிலியம் இவ்வாறு கூறுகிறது.
நீதிமொழிகள் 22:29தன் வேலையில் ஜாக்கிரதையாயிருக்கிறவனை நீ கண்டால், அவன் நீசருக்கு முன்பாக நில்லாமல், ராஜாக்களுக்கு முன்பாக நிற்பான்.
பழிசொற்க்களும் குறைகூருதலும் என்றுமே இருந்துகொண்டு தான் இருக்கும் அதெல்லாம் பொருட்படுத்தாது நமக்கு ஒப்புவிக்கப்ட்டவைகளை நாம் செய்து முடிப்போமாக.