இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கருமமே கண்ணாயினார்!


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
கருமமே கண்ணாயினார்!
Permalink  
 


இந்த பாடல் குமார குருபரர் என்பவர் எழுதியதும் எனக்கு மிகவும் பிடிததுமான பாடல்!
 
மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்

இதன் பொருள்:
 
ஒரு காரியத்தை செய்யவேண்டும் என்று துணித்து  இறங்கியவர்கள் உடலில் உண்டாகும் நோவு, பசி , தூக்கம், அடுத்தவர் சொல்லும் அவமதிப்பான சொற்கள் எதையும் பொருட்படுத்தாது தான் காரியத்தை செய்வதிலேயே  கவனமாக இருப்பார். என்பதே!
 
உலகத்தார் செய்யும் உலகத்து காரியங்களையே ஒருவர் இவ்வளவு கவனமாக எதையும் பொருட்படுத்தாது செய்கிறார்  என்றால், ஒப்பில்லா  கடவுளின் காரியங்களை செய்யும்நாம் அதற்க்குமேல் அக்கறையாகவும் கவனமாகவும்  இருக்க வேண்டும் அல்லவா?
 
இதே கருத்தை  நமது விவிலியம் இவ்வாறு கூறுகிறது.
 
நீதிமொழிகள் 22:29 தன் வேலையில் ஜாக்கிரதையாயிருக்கிறவனை நீ கண்டால், அவன் நீசருக்கு முன்பாக நில்லாமல்,  ராஜாக்களுக்கு முன்பாக நிற்பான்.
 
பழிசொற்க்களும்  குறைகூருதலும் என்றுமே இருந்துகொண்டு தான் இருக்கும் அதெல்லாம் பொருட்படுத்தாது நமக்கு ஒப்புவிக்கப்ட்டவைகளை நாம் செய்து முடிப்போமாக.
  


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard