//////வெளி. 20:6 முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தவானுமாயிருக்கிறான்; இவர்கள்மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரமில்லை; இவர்கள் தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக ஆசாரியராயிருந்து, அவரோடேகூட ஆயிரம் வருஷம் அரசாளுவார்கள்.
முதலாம் உயிர்த்தெழுதலுக்கு பங்குள்ள அனைவரும் பரிசுத்தவான்களாக இருப்பார்கள் என இவ்வசனம் கூறுகிறது. பரிசுத்தவான்களாகிய இவர்கள் இயேசுவின் கற்பனைகளை முழுமையாகக் கைக்கொண்டிருக்க வேண்டும். இயேசுவின் கற்பனைகளில் ஏதேனும் ஒன்றை கைக்கொள்ளவிட்டால்கூட, அவர்கள் பரிசுத்தவான்களாக இருக்க முடியாது.
இயேசுவின் கற்பனைகளை முழுமையாகக் கைக்கொண்டு பரிசுத்தவான்களாக விளங்கின இவர்களுக்கு எப்படி முதலாம் மரணம் நேரிட முடியும்? வத்தின் சம்பளம்தானே மரணம்? பாவமே இல்லாமல் பரிசுத்தவான்களாக விளங்கின இவர்களுக்கு எப்படி முதலாம் மரணம் நேரிட முடியும்?////
பரிசுத்த வேதாகமத்தில் பழைய ஏற்பாட்டு புத்தகத்திலும் சரி புதிய ஏற்பாட்டு புத்தகத்திலும் சரி "பரிசுத்தவான்கள்" என்ற சொல் அனேக இடங்களில் பயன்படுத்தபட்டு உள்ளது.
இந்த "பரிசுத்தவான்கள்" என்பவர்கள் ஆண்டவராகிய இயேசுவின் இரண்டாம் வருகையோடு கூட வருவார்கள் என்றும் "பரிசுத்தவான்கள் உலகத்தை நியாயம் தீர்ப்பார்கள்" என்றும் "பரிசுத்தவான்களின் குறைவில் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்" என்றும் இன்னும் அனேக காரியங்கள் "பரிசுத்தவான்"களை பற்றி
வேதத்தில் எழுதப்பட்டுள்ளது.
தெசலோனிக்கேயர் 3:13இவ்விதமாய் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தமது பரிசுத்தவான்கள் அனைவரோடுங்கூட வரும்போது,
I கொரிந்தியர் 6:2பரிசுத்தவான்கள் உலகத்தை நியாயந்தீர்ப்பார்களென்று அறியீர்களா?
ரோமர் 12:13
பரிசுத்தவான்களுடைய குறைவில் அவர்களுக்கு உதவிசெய்யுங்கள்;
ஆண்டவராகிய இயேசுவின் வருகைக்கு முன்னரும் பல பரிசுத்தவான்கள் இருந்தார்கள் என்பதை பழையஏற்பாட்டு வசனங்கள்மூலம் நாம் அறியமுடிகிறது.
II இராஜாக்கள் 4:9அவள் தன் புருஷனை நோக்கி: இதோ, நம்மிடத்தில் எப்போதும் வந்துபோகிற தேவனுடைய மனுஷனாகிய இவர் பரிசுத்தவான் என்று காண்கிறேன்.
சங்கீதம் 50:5பலியினாலே என்னோடே உடன்படிக்கை பண்ணின என்னுடைய பரிசுத்தவான்களை என்னிடத்தில் கூட்டுங்கள் என்பார்.
தானியேல் 4:13நான் படுத்திருக்கையில் என் தலையில் தோன்றின தரிசனங்களைக் காணும்போது, காவலாளனாகிய பரிசுத்தவான் ஒருவன் வானத்திலிருந்து இறங்கக்கண்டேன்.
இந்த வசனங்களை ஆராய்ந்தால் "பரிசுத்தவான்" என்ற சொல் பல்வேறு விதமாக பயன்பட்டுஇருந்தாலும் அதற்க்கு ஒட்டுமொத்தமாக பாவங்கள் நீக்கபட்டவர்கள் என்று பொருள் கொள்ள முடியுமேயன்றி அவர்கள் பாவமே செய்யாதவர்கள் என்றோ இயேசுவின் வார்தைகள்படி வாழ்ந்தவர்கள் என்றோ பொருள்கொள்ள முடியாது!
கீழ்கண்ட வசனங்கள் சொல்லும் பரிசுத்தவான்கள் யாரென்பதை நாம் சற்று கவனிக்கலாம்.
அப்போஸ்தலர் 9:32பேதுரு போய் எல்லாரையும் சந்தித்துவருகையில், அவன் லித்தா ஊரிலே குடியிருக்கிற பரிசுத்தவான்களிடத்திற்கும் போனான்.
II கொரிந்தியர் 1:1தேவனுடைய சித்தத்தினாலே இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பவுலும், சகோதரனாகிய தீமோத்தேயும், கொரிந்து பட்டணத்திலுள்ள தேவனுடைய சபைக்கும், அகாயா நாடெங்குமுள்ள எல்லாப் பரிசுத்தவான்களுக்கும் எழுதுகிறதாவது:
இவ்வசனங்களின்படி பரிசுத்தவான்கள் என்பவர்கள் ஆண்டவராகிய இயேசுவை ஏற்றுக்கொண்டு பரிசுத்தமாக வாழ விளைபவர்களே என்று எடுத்துகொள்ள முடியும்.
எனது கருத்துப்படி இயேசுவை ஏற்றுக்கொண்டு பரிசுத்த ஆவியை பெற்று ஆவியானவரால் நடத்தப்படும் ஒவ்வொருவரும், தேவனின் பரிசுத்த ஆவியை தன்னுள் கொண்டுள்ளதால் அவர்கள் பரிசுத்தவன்களே! என்றே கருதுகிறேன். எந்த ஒரு மனுஷனும் தன் சுய முயற்ச்சியால் பரிசுத்தவான் ஆகிவிட முடியாது! பரிசுத்த ஆவியானவரே ஒருமனுஷனை பரிசுத்தமாக்குகிறவர். அவ்வாறு ஆவியில் நடத்தப்படுகிரவர்களுக்குதான் ஆக்கினைதீர்ப்பு இல்லை என்று வேதம் சொல்கிறது
இவர்களே முதலாம் உயிர்த்தெழுதலுக்கு பாத்திரவான்கள்! இவர்களை குறித்தே தாங்கள் குறிப்பிடும் கீழ்கண்ட வசனம் சொல்கிறது என்பது எனது கருத்து.
வெளி 20:6முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தவானுமாயிருக்கிறான்; இவர்கள்மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரமில்லை. இவர்கள் தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக, ஆசாரியராயிருந்து, அவரோடேகூட ஆயிரம் வருஷம் அரசாளுவார்கள்.
"இவர்களிடம் பாவம்இல்லை" என்பது உண்மையே! ஆனால் இவர்களது பாவங்கள் ஆவியானவரால் நீக்கபட்டதேயன்றி முற்றிலும் இயேசுவின் வார்த்தைகள்படி வாழ்ந்தார்கள் என்று சொல்வதற்க்கில்லை. தேவனாலேயேயன்றி நாம் சுய கிரியயினால் ஒருவரும் பரிசுத்தவனாக முடியாது
அடுத்து வசனத்தின் படியே சரியாக ஆராய்ந்தாலும், பரிசுத்தவான் என்பவர்கள் யார் என்பதை குறித்து கீழ்கண்ட வசனங்கள் சொல்கிறது.
வெளி 14:12தேவனுடைய கற்பனைகளையும் இயேசுவின் மேலுள்ள விசுவாசத்தையும் காத்துக்கொள்ளுகிறவர்களாகிய பரிசுத்தவான்களுடைய பொறுமை இதிலே விளங்கும் என்று கூறினான்.
ஒருவர் இயேசுவின் கற்பனையை கைகொள்ளவில்லை என்றாலும் இயேசுவின் மேலுள்ள விசுவாசத்தையும் தேவனின் கற்பனையையும் காத்துகொண்டால் அவன் பரிசுத்தவான் என்று இங்கு வேதம் சொகிறது. இதில் எங்கும் பரிசுத்தவான்கள் என்பவர்கள் இயேசுவின் கற்பனையை கைகொண்டு வாழ்ந்தவர்கள் என்ற செய்தி இல்லை.
"இயேசுவின் கற்பனையை கைகொள்ளுதல்" என்பது முற்றிலும் மாறுபட்ட ஒரு மேலான நிலை. இயேசுவின் வர்த்தைகள்படி "தனக்குண்டனவற்றை விற்று தரித்திரனுக்கு கொடுக்காதவனை" பாவம் செய்தவன் என்று சொல்லிவிட முடியாது. காரணம் அவனுக்குண்டானத்தை அவன் எப்படி வேண்டுமானாலும் செய்ய அவனுக்கு அதிகாரம் இருக்கிறது என்பதையும் வேறொரு வசனம் சொல்கிறது. ஆனால் பாவம் என்றால் என்னவென்பதை நியாயப்பிரமாணமே சொல்கிறது.
I யோவான் 3:4பாவஞ்செய்கிற எவனும் நியாயப்பிரமாணத்தை மீறுகிறான்; நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம்.
புதிய ஏற்பாட்டு பிரமாணத்தின்படி, பாவம்/ மரணம் என்னும் பிரமாணத்தில் இருந்து நாம் ஏற்கெனவே விடுபட்டு விட்டோம்
இவ்வாறு விடுபட்ட நாம் இயேசுவின் கற்பனையை கைகொள்ளுவது என்பது ஒரு மேலான நிலைக்கு நம்ம கொண்டுசொல்லுமேயன்றி, மீண்டும் நம்மை பாவம் மரணம் என்ற பிரமாணத்துக்குள் கொண்டு செல்லாது. அந்த மேலான நிலையே ஆண்டவராகிய இயேசு குறிப்பிடும் மறுரூபம்ஆகி மரணத்தை காணாத நிலை என்று நான் சொல்கிறேன்.
யோவான் 8:51ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால், அவன் என்றென்றைக்கும் மரணத்தைக் காண்பதில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
இயேசுவின் இரத்தத்தால் பரிசுத்தமாக்கப்பட்ட அனைவரும் பரிசுத்தவான்கள்தான். இதன் அடிப்படையில்தான் நிருபங்களின் ஆரம்பத்தில் "பரிசுத்தவான்களுக்கு எழுதுவதாக" பவுல் குறிப்பிடுகிறார். ஆனால் பரிசுத்தவான்கள் என அழைக்கப்பட்ட அவர்களில் பலர், நடக்கைகளில் பரிசுத்தமாக இல்லை. பின்வரும் வசனங்கள் இதற்கு ஆதாரமாக உள்ளன.
1 கொரி. 5:1 உங்களுக்குள்ளே விபசாரம் உண்டென்று பிரசித்தமாய்ச் சொல்லப்படுகிறதே; ஒருவன் தன் தகப்பனுடைய மனைவியை வைத்துக்கொண்டிருக்கிறானே; அது அஞ்ஞானிகளுக்குள்ளும் சொல்லப்படாத விபசாரமாயிருக்கிறதே. 2 இப்படிப்பட்ட காரியஞ்செய்தவனை நீங்கள் உங்களைவிட்டு நீக்காமலும் துக்கப்படாமலும், இறுமாப்படைந்திருக்கிறீர்கள்.
எபேசியர் 4:17 ஆதலால், கர்த்தருக்குள் நான் உங்களுக்குச் சாட்சியாகச் சொல்லி எச்சரிக்கிறது என்னவெனில், மற்றப் புறஜாதிகள் தங்கள் வீணான சிந்தையிலே நடக்கிறதுபோல நீங்கள் இனி நடவாமலிருங்கள். 22 அந்தப்படி, முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோட்டு, 23 உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி, 24 மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாகச் சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்.
25 அன்றியும், நாம் ஒருவருக்கொருவர் அவயவங்களாயிருக்கிறபடியால், பொய்யைக் களைந்து, அவனவன் பிறனுடனே மெய்யைப் பேசக்கடவன். 26 நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள்; சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது; 27 பிசாசுக்கு இடங்கொடாமலும் இருங்கள். 28 திருடுகிறவன் இனித் திருடாமல், குறைச்சலுள்ளவனுக்குக் கொடுக்கத்தக்கதாகத் தனக்கு உண்டாயிருக்கும்படி, தன் கைகளினால் நலமான வேலைசெய்து, பிரயாசப்படக்கடவன். 29 கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம்; பக்திவிருத்திக்கு ஏதுவான நல்ல வார்த்தை உண்டானால் அதையே கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள். 30 அன்றியும், நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்தஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள். 31 சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும், மற்ற எந்தத் துர்க்குணமும் உங்களைவிட்டு நீங்கக்கடவது. 32 ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.
இப்படி பல வசனங்களைக் காட்டமுடியும். கிறிஸ்துவின் இரத்தத்தால் பரிசுத்தமாக்கப்பட்டவர்கள், தங்கள் நடக்கைகளில் முடிவுபரியந்தம் பரிசுத்தத்தைக் காத்துக் கொண்டால்தான், வெளி. 20:6 கூறுகிற பரிசுத்தவான்களாக அவர்கள் ஆகமுடியும். அவர்கள்தான் கிறிஸ்துவோடுகூட உலகத்தை ஆளுகை செய்யும் பாக்கியத்தைப் பெறமுடியும்.
எனவே நிருபங்களில் கூறப்பட்டுள்ள பரிசுத்தவான்களில் எவர்கள் முடிவுபரியந்தம் பரிசுத்தத்தைக் காத்துக்கொண்டார்களோ, அவர்களையே “பரிசுத்தவான்கள்” என வெளி. 20:6 கூறுகிறது.
பரிசுத்தவான்கள் வேறு, இயேசுவின் கற்பனைகளின்படி வாழ்ந்தவர்கள் வேறு என்கிறீர்கள். உங்களது இக்கருத்து சரியல்ல என்பதற்கு பின்வரும் வசனம் ஆதாரமாயுள்ளது.
வெளி 14:12 தேவனுடைய கற்பனைகளையும் இயேசுவின் மேலுள்ள விசுவாசத்தையும் காத்துக்கொள்ளுகிறவர்களாகிய பரிசுத்தவான்களுடைய பொறுமை இதிலே விளங்கும் என்று கூறினான்.
இவ்வசனத்தை நீங்களும் மேற்கோள் காட்டியுள்ளீர்கள்; ஆனால் இவ்வசனம் தேவனுடைய கற்பனைகளைக் காத்துக்கொள்பவர்களைப் பற்றித்தான் கூறுகிறதேயன்றி கிறிஸ்துவின் கற்பனைகளைக் காத்துக்கொள்பவர்களைப் பற்றி கூறவில்லை என்கிறீர்கள்.
கிறிஸ்துவின் கற்பனைகள் யாவும் தேவனுடைய கற்பனைகளே என்பதை அறியீர்களா சகோதரரே! பின்வரும் வசனத்தைப் படியுங்கள்.
யோவான் 14:24 என்னில் அன்பாயிராதவன் என் வசனங்களைக் கைக்கொள்ளமாட்டான். நீங்கள் கேட்கிற வசனம் என்னுடையதாயிராமல் என்னை அனுப்பின பிதாவினுடையதாயிருக்கிறது.
பழைய ஏற்பாட்டில் தேவன் சொன்ன கற்பனைகள் போக, புதிய ஏற்பாட்டில் இயேசு சொன்ன கற்பனைகளும் தேவனுடைய கற்பனைகளே. அவரது கற்பனைகளையும் இயேசுவின் மீதுள்ள விசுவாசத்தையும் காத்துக்கொண்டவர்கள்தான் பரிசுத்தவான்கள். எனவே வெளி. 20:6 கூறுகிற பரிசுத்தவான்கள் யாவரும் “கிறிஸ்துவின் வார்த்தைகளின்படி வாழ்ந்தவர்களே”.
ஒருவேளை இதை ஒத்துக்கொள்ள உங்களுக்கு மனமில்லையெனில், பின்வரும் வசனங்களையும், அவ்வசனங்களின் அடிப்படையில் நான் எழுப்பியுள்ள கேள்விகளையும் படியுங்கள்.
யோவான் 14:24 என்னில் அன்பாயிராதவன் என் வசனங்களைக் கைக்கொள்ளமாட்டான்.
யோவான் 8:51-ஐச் சுட்டிக்காட்டி, இயேசுவின் வார்த்தையைக் கைக்கொள்பவன் மாமிச மரணத்தைக் காணமாட்டான் என்கிறீர்கள். ஆனால் பேதுரு, பவுல், யோவான் போன்ற அப்போஸ்தலர் அனைவரும் மாமிச மரணத்தைக் கண்டுள்ளனர். இதற்குக் காரணம் அவர்கள் இயேசுவின் வார்த்தைகளை முழுமையாகக் கைக்கொண்டிருக்க மாட்டார்கள் என்கிறீர்கள்; அப்படியானால் அவர்கள் இயேசுவின்மீது முழுமையாக அன்புகூரவில்லை எனச் சொல்லலாமா?
1 யோவான் 2:3 அவருடைய (கிறிஸ்துவினுடைய) கற்பனைகளை நாம் கைக்கொள்ளுகிறவர்களானால், அவரை அறிந்திருக்கிறோமென்பதை அதினால் அறிவோம். 4 அவரை அறிந்திருக்கிறேனென்று சொல்லியும், அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளாதவன் பொய்யனாயிருக்கிறான், அவனுக்குள் சத்தியமில்லை. 5 அவருடைய வசனத்தைக் கைக்கொள்ளுகிறவனிடத்தில் தேவ அன்பு மெய்யாகப் பூரணப்பட்டிருக்கும்; நாம் அவருக்குள் இருக்கிறோமென்பதை அதினாலே அறிந்திருக்கிறோம்.
இயேசுவின் வார்த்தைகளை முழுமையாகக் கைக்கொள்ளாததால் மரித்துப்போன பேதுரு, பவுல், யோவான் ஆகியோர், இயேசுவை முழுமையாக அறியவில்லை என்றும் அவர்கள் பொய்யர்கள் என்றும் கூறமுடியுமா?
யோவான் 14:15 நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்.
இயேசுவின் கற்பனைகளை முழுமையாகக் கைக்கொள்ளாததால் மரித்துப்போன பேதுரு, பவுல், யோவான் ஆகியோர் இயேசுவிடம் அன்புகூரவில்லை எனக் கூறமுடியுமா?
1 யோவான் 3:24 அவருடைய (கிறிஸ்துவினுடைய) கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறவன் அவரில் நிலைத்திருக்கிறான், அவரும் அவனில் நிலைத்திருக்கிறார்; அவர் நம்மில் நிலைத்திருக்கிறதை அவர் நமக்குத் தந்தருளின ஆவியினாலே அறிந்திருக்கிறோம்.
கிறிஸ்து தங்களில் நிலைத்திருப்பதை அறிந்துள்ளதாக யோவான் கூறுகிறாரே; அவ்வாறெனில் கிறிஸ்துவின் கற்பனைகளை யோவான் கைக்கொண்டிருப்பார் அல்லவா? கிறிஸ்துவின் கற்பனைகளைக் கைக்கொண்ட அவர் ஏன் யோவான் 8:51-ன் உங்கள் புரிந்துகொள்தலுக்கு மாறாக மரிக்க நேரிட்டது?
நன்கு சிந்தித்து, இக்கேள்விகளுக்கான பதில் காணுங்கள். அப்போது யோவான் 8:51-ஐ நீங்கள் தவறாகப் புரிந்துகொண்டதை உணர்வீர்கள்.
பாவங்கள் நீக்கப்பட்டவர்களே பரிசுத்தவான்கள் எனப்படுவார்க ளேயன்றி தாங்கள் கருதுவதுபோல் இயேசுவின் வார்த்தையை முழுமையாக கைகொண்டு நடந்தவர்களை "பரிசுத்தவான்' என்ற வார்த்தை குறிப்பிடவில்லை என்பதற்கு ஆதாரமாக நான்
கீழ்கண்ட கருத்துக்களை முன்வைக்க விரும்புகிறேன்.
ஆணடவராகிய இயேசுவின் பிறப்புக்கு முன்னேயே அனேக பரிசுத்த வான்கள் இருந்ததாகவும் இயேசு மரித்தபோது அவர்கள் சரீரங்கள் எழுந்ததாகவும் வேதம் குறிப்பிடுகிறது. இவர்கள் இயேசுவின் வார்த்தைகளை கைகொண்டு நடந்திருக்க முற்றிலும் வாய்ப்புஇல்லை.
ஆனாலும் இவர்களையும் பரிசுத்தவான்கள் என்று வேதம் சொல்கிறது.
மத்தேயு 27:52கல்லறைகளும் திறந்தது, நித்திரை அடைந்திருந்த அநேக பரிசுத்தவான்களுடைய சரீரங்களும் எழுந்திருந்தது. 2. தேவனின் கற்பனையை கைகொள்ளுதலும் இயேசுவின் வார்த்தையை கைகொள்ளுதலும் இரண்டு வேறுபட்ட நிலைகள். இரண்டும் தேவனாலேயே நமக்கு கொடுக்கபட்டிருந்தாலும் அவைகள் கொடுக்கபட்ட நிலைகள் மற்றும் பயன்பாடுகள் என்பது வேறு வேறு. உதாரணமாக B Com பட்ட படிப்பில் படிக்கும் அதே கம்பனி கணக்கை த்தான் M Com படிப்பின்போதும் படிக்கிறோம் ஆனால் முதல் நிலை வேறு இரண்டாம் நிலை வேறு. முதல் நிலையில் படிக்கும் அதே கணக்கை கொஞ்சம் அட்வான்சாக படிப்பதால் மாஸ்டர் என்ற பட்டத்தை பெறமுடிகிறது அதேபோல் பரிசுத்த ஆவியின் வல்லமை இல்லாத நாட்களில் கொடுக்கபட்டிருந்த தேவனின் கற்பனைகள் வேறு. அதைவிட கடினமாக்கப்பட்ட இயேசுவின் கற்பனைகள் வேறு. இரண்டும் தேவனே வழங்கியதாக இருந்தாலும் இரண்டுக்கும் வெவேறு பலன் மற்றும் பயன்பாடு உண்டு. நமது விருப்பத்துக்கேற்றால் போல் இரண்டையும் ஓன்று என்று சொல்லவிட முடியாது.
தேவனின் கற்ப்பனைகளாகிய நியாயப்பிரமாணம் நியாயம் என்பது "பாவம் என்பது என்ன" என்பதை நமக்கு போதிக்கிறது. ஆனால் இயேசுவின் வார்த்தைகளோ "நியாயமாக நமக்கு சேர வேண்டியவை களைகூட பிறருக்காக விட்டுகொடுக்க சொல்லும் ஒரு மேன்மையான நிலையை நமக்கு போதிக்கிறது" இரண்டின் பயன் பாடும் பலன்களும் வேறு வேறு!
3.எந்த ஒரு காரியத்தையும் செய்துகொண்டிருத்தல் எனது வேறு அதை முழுமையாக செய்துமுடித்தல் எனபது வேறு. நானும் நீங்களும் இயேசுவின் கற்பனையை கைகொள்ள பிரயாசம் எடுக்கிறோம் அதை அடுத்தவர்களுக்கு போதிக்கவும் செய்கிறோம் ஆனால் நாம் இயேசுவின் வார்த்தைகளை முழுமையாக நிறைவேற்றினால் மட்டுமே மறுரூபம் ஆகி மரணத்தை ஜெயிக்கமுடியும். ஒருவேளை நாம் மரித்துவிட்டோம் என்றால் நாம் இயேசுவின் கற்பனையை முழுமையாக கைகொள்ள வில்லை என்றதான் பொருளே தவிர இயேசுவின் வார்த்தைகளை பொய் ஆகிவிடாது.
அதுபோல் பவுல், யோவான், போன்றவர்கள் இய்சுவிடத்தில் அன்பாயிருந்து அவரது கற்பனையை கைக்கொண்டனர் பிறருக்கும் கைகொள்ளும்படி போதித்தனர். ஆனால் அது முழுமை அடையும் முன்னர் அவர்கள் மரித்திருக்க வேண்டுமேயன்றி, அவர்கள் மரணத்தை ஜெயித்து மறுரூபம் ஆகவில்லை என்பதற்காக அது முதல் மரணத்தை குறிக்கவில்லை என்ற தங்களின் கருத்து சரியானது அல்ல.
பவுல் இந்த உண்மையை அறிந்து அவர் நித்திரை அடையாமல் மறுரூபம்ஆவதை தான் வாழ்நாளில் திர்பார்த்திருந்தார் என்பதற்கு பல வசனங்கள் சாட்சியுள்ளன ஆனால் அது அவரது வாழ்வில் நிறைவேறாமல் அவர் மரித்துவிட்டார்.
இயேசுவின் வார்த்தைகளை முழுமையாக கைகொண்டு வாழ்வது எனது ஒரு சுலபமான காரியம் அல்ல எல்லோரும் அதை நிறை
வேற்றிவிடுவதர்க்கு. நமது மாம்சம் அதற்க்கு ஒருபோதும் இடம் கொடுப்பது இல்லை. தன்னை ஒரு கன்னத்தில் அடிப்பவனுக்கு மறு கன்னத்தை திருப்பிகொடு என்று இயேசு சொன்னார் ஆனால் ஆனானபட்ட பரிசுத்தவானாகிய பவுலே அவரை ஒருமுறை பிரதான ஆசாரியன் "வாயில் அடியுங்கள்" என்று சொன்னவுடன் கோபம் கொண்டு "வெள்ளயடிக்கபட்ட சுவரே தேவன் உன்னை அடிப்பார்" என்று சொல்கிறார்.
சரி! தாங்கள் சொல்வதுபோல் (யோ 8:51)ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால், அவன் என்றென்றைக்கும் மரணத்தைக் காண்பதில்லை என்று இயேசு சொன்னது இரண்டாம் மரணத்தைத்தான் என்றே எடுத்துகொள்வோம். எனது கீழ்கண்ட கேள்விகளுக்கு சற்று பதில் தாருங்கள்.
1. பாவத்தின் சம்பளமே மரணம் என்று வேதம் சொல்கிறது. ஆதாம் செய்த பாவத்தாலேயே மரணம் என்பது பூமிக்குள் நுழைந்தது இந்நிலையில்:
I யோவான் 1:7இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்
என்றும் வசனம் சொல்கிறது. இப்படி நமக்கு சகல பாவங்களும் சுத்திகரிக்கபட்டுவிட்ட நிலையில் எந்த பாவத்தினிமித்தம் முதல் மரணம் மட்டும் சம்பவித்தே தீரும் என்று சொல்கிறீர்கள் என்பதை அறியதாருங்கள்.
2. முதல் மரணத்தை காணாமல் மறுரூபம் ஆதலை பவுலும் அறிந்திருந்தார் என்றும் அதை அவர் தனது வாழ்நாளில் எதிர்பார்த்தார் என்பதையும் கீழ்கண்ட வசனம் நமக்கு தெரிவிக்கிறது.
I கொரிந்தியர் 15:51ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை; ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம்.
எல்லோரும் முதல் மரணத்தை சந்தித்தே தீரவேண்டும் என்பது தாங்கள் கருத்தானால் இங்கு பவுல் "நித்திரை" என்று குறிப்பிடுவது முதல் மரணத்தை என்பதை அறிவோம் அந்த மரணம் அடையாமல் ஒரு நிமிஷத்திலே மறுரூபம் ஆக்கப்படுவோம் என்று சொல்ல காரணம் என்ன?
3. அனேக உலக சம்பந்தமான எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல், கடந்த
இருபது வருடமாக ஆண்டவராகிய இயேசுவின் வார்த்தைகளையும் தேவனின் கற்பனைகளையும் முழுமையாக கைகொண்டு நடக்க போராடிவரும் நிலையில், பலநேரங்களில் என்னுடய மாம்ச கிரியைகள் என்னை முந்திகொள்வதால் இன்னும் என்னால் அவைகளை முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை இந்நிலையில் "இயேசுவின் வார்த்தையை கைகொண்டவன் மட்டும்தான் இரண்டாம் மரணத்தை காண்பதில்லை" என்றநிலை இருந்தால் எத்தனைபேர் இரண்டாம் மரணத்தில் இருந்து தப்பிக்க முடியும்?
தாங்கள் இயேசுவின் வார்த்தையை முழுமையாக கைகொண்டு நடக்கிறீர்களா ? என்பதை தெரிவிக்கவும்.
-- Edited by SUNDAR on Tuesday 1st of November 2011 11:13:40 AM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
//ஆண்டவராகிய இயேசுவின் பிறப்புக்கு முன்னேயே அனேக பரிசுத்தவான்கள் இருந்ததாகவும் இயேசு மரித்தபோது அவர்கள் சரீரங்கள் எழுந்ததாகவும் வேதம் குறிப்பிடுகிறது. இவர்கள் இயேசுவின் வார்த்தைகளைக் கைக்கொண்டு நடந்திருக்க முற்றிலும் வாய்ப்பு இல்லை. ஆனாலும் இவர்களையும் பரிசுத்தவான்கள் என்று வேதம் சொல்கிறது.//
ஆம், வேதம் சொல்வதை மறுக்கவில்லை; ஆனால் இவர்களில் யாரும் முதலாம் உயிர்த்தெழுதலில் பங்கடையப்போவதில்லை. ஏனெனில், கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் மட்டுமே முதலாம் உயிர்த்தெழுதலில் பங்கடைவார்கள் என வசனம் சொல்கிறது.
1 தெச. 4:16 கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்.
பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் அல்ல (அதாவது கிறிஸ்துவின் வார்த்தைகளின்படி வாழ்ந்து மரித்தவர்களல்ல). எனவே அவர்கள் முதலாம் உயிர்த்தெழுதலில் பங்கடைய மாட்டார்கள். வெளி. 20:6 கூறுகிற பரிசுத்தவான்கள், புதிய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் மட்டுமே. அவர்களைக் குறித்து வசனம் இப்படிச் சொல்கிறது.
வெளி 14:12 தேவனுடைய கற்பனைகளையும் இயேசுவின் மேலுள்ள விசுவாசத்தையும் காத்துக்கொள்ளுகிறவர்களாகிய பரிசுத்தவான்களுடைய பொறுமை இதிலே விளங்கும் என்று கூறினான்.
புதிய ஏற்பாட்டைப் பொறுத்தவரை, தேவனுடைய கற்பனைகள் என்றால் அதில் இயேசுவின் கற்பனைகளும் அடங்கும். இயேசுவின் கற்பனைகளுக்கு செவிகொடாதவனைக் குறித்து தேவன் சொல்வதைச் சற்று கவனியுங்கள்.
உபாகமம் 18:18 உன்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணி, என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன்; நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார். 19 என் நாமத்தினாலே அவர் சொல்லும் என் வார்த்தைகளுக்குச் செவிகொடாதவன் எவனோ அவனை நான் விசாரிப்பேன்.
இவ்வசனத்தில் அறிவிக்கப்பட்டவர் இயேசுவே. அவரது வார்த்தைகளுக்கு செவிகொடாதவனை விசாரிப்பேன் என தேவன் சொல்கிறார்.
நீங்கள் சொல்வதுபோல், வெளி. 20:6 கூறுகிற பரிசுத்தவான்கள் கிறிஸ்துவின் வார்த்தைகளைக் கைக்கொள்ளாமல் இருந்திருப்பார்களெனில், அவர்கள் தேவனால் விசாரிக்கப்படும் நிலையிலல்லவா இருப்பார்கள்? அவர்களை எப்படி கிறிஸ்துவோடுகூட 1000 வருட அரசாட்சியில் ஆள தேவன் அனுமதிப்பார்?
சற்று நிதானமாக சிந்தித்துப் பாருங்கள். அதன் பின்னரும் நான் சொல்வதை ஒத்துக் கொள்ள மனமில்லையெனில், நான் ஏற்கனவே குறிப்பிட்டிருந்த பின்வரும் வசனங்களைப் படித்து அவற்றின் அடிப்படையில் நான் எழுப்பியுள்ள கேள்விகளுக்குப் பதில் தாருங்கள்.
யோவான் 14:24 என்னில் அன்பாயிராதவன் என் வசனங்களைக் கைக்கொள்ளமாட்டான்.
யோவான் 8:51-ஐச் சுட்டிக்காட்டி, இயேசுவின் வார்த்தையைக் கைக்கொள்பவன் மாமிச மரணத்தைக் காணமாட்டான் என்கிறீர்கள். ஆனால் பேதுரு, பவுல், யோவான் போன்ற அப்போஸ்தலர் அனைவரும் மாமிச மரணத்தைக் கண்டுள்ளனர். இதற்குக் காரணம் அவர்கள் இயேசுவின் வார்த்தைகளை முழுமையாகக் கைக்கொண்டிருக்க மாட்டார்கள் என்கிறீர்கள்; அப்படியானால் அவர்கள் இயேசுவின்மீது முழுமையாக அன்புகூரவில்லை எனச் சொல்லலாமா?
1 யோவான் 2:3 அவருடைய (கிறிஸ்துவினுடைய) கற்பனைகளை நாம் கைக்கொள்ளுகிறவர்களானால், அவரை அறிந்திருக்கிறோமென்பதை அதினால் அறிவோம். 4 அவரை அறிந்திருக்கிறேனென்று சொல்லியும், அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளாதவன் பொய்யனாயிருக்கிறான், அவனுக்குள் சத்தியமில்லை. 5 அவருடைய வசனத்தைக் கைக்கொள்ளுகிறவனிடத்தில் தேவ அன்பு மெய்யாகப் பூரணப்பட்டிருக்கும்; நாம் அவருக்குள் இருக்கிறோமென்பதை அதினாலே அறிந்திருக்கிறோம்.
இயேசுவின் வார்த்தைகளை முழுமையாகக் கைக்கொள்ளாததால் மரித்துப்போன பேதுரு, பவுல், யோவான் ஆகியோர், இயேசுவை முழுமையாக அறியவில்லை என்றும் அவர்கள் பொய்யர்கள் என்றும் கூறமுடியுமா?
யோவான் 14:15 நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்.
இயேசுவின் கற்பனைகளை முழுமையாகக் கைக்கொள்ளாததால் மரித்துப்போன பேதுரு, பவுல், யோவான் ஆகியோர் இயேசுவிடம் அன்புகூரவில்லை எனக் கூறமுடியுமா?
1 யோவான் 3:24 அவருடைய (கிறிஸ்துவினுடைய) கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறவன் அவரில் நிலைத்திருக்கிறான், அவரும் அவனில் நிலைத்திருக்கிறார்; அவர் நம்மில் நிலைத்திருக்கிறதை அவர் நமக்குத் தந்தருளின ஆவியினாலே அறிந்திருக்கிறோம்.
கிறிஸ்து தங்களில் நிலைத்திருப்பதை அறிந்துள்ளதாக யோவான் கூறுகிறாரே; அவ்வாறெனில் கிறிஸ்துவின் கற்பனைகளை யோவான் கைக்கொண்டிருப்பார் அல்லவா? கிறிஸ்துவின் கற்பனைகளைக் கைக்கொண்ட அவர் ஏன் யோவான் 8:51-ன் உங்கள் புரிந்துகொள்தலுக்கு மாறாக மரிக்க நேரிட்டது?
நன்கு சிந்தித்து, இக்கேள்விகளுக்கான பதில் காணுங்கள்.
சுந்தர்:
//சரி! தாங்கள் சொல்வதுபோல் (யோ 8:51) ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால், அவன் என்றென்றைக்கும் மரணத்தைக் காண்பதில்லை என்று இயேசு சொன்னது இரண்டாம் மரணத்தைத்தான் என்றே எடுத்துகொள்வோம். எனது கீழ்கண்ட கேள்விகளுக்கு சற்று பதில் தாருங்கள்.//
அடுத்த பதிவில் உங்கள் கேள்விகளுக்குப் பதில் தருகிறேன்.
தங்களின் கேள்விகளுக்குப் பதில் தரத்தான் நினைத்திருந்தேன். ஆனால் “பூகம்ப இடிபாடுகளுக்குள் மாட்டிய மனுஷர்கள்!” எனும் திரியில் நீங்கள் என்னை தனிப்பட்ட முறையில் மீண்டும் மீண்டும் விமர்சித்ததால், மீண்டும் அம்மாதிரி விமர்சனத்திற்குள்ளாகாதபடிக்கு, உங்களுடன் விவாதம் செய்வதை தவிர்க்க நினைக்கிறேன். எனவே தற்போதைக்கு உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்வதை ஒத்தி வைக்கிறேன். ஆகிலும் சில வேதவசனங்களுக்கு நீங்கள் தந்துள்ள விளக்கம் பற்றி எனது விமர்சனத்தை சொல்வது அவசியம் எனக் கருதுகிறேன்.
இத்தளத்தில் எழுத வேண்டாம் என ஏற்கனவே ஓரிருமுறை நீங்கள் சொல்லியுள்ளதால், இங்கு எழுதுவதற்கு எனக்கு முழு மனதில்லை. ஆகிலும் உங்களுக்காக இல்லாவிட்டாலும், இத்தளத்திற்கு வருகை புரிபவர்களுக்காகவாவது இங்கு எழுத ஆசிக்கிறேன்.
உங்கள் பதிவுகளில் நிறைய முரண்பாடுகள் உள்ளன. அவற்றில் ஒரு முரண்பாட்டை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.
//தேவனும் அவரது வார்த்தையும் மாறுபாடான காரியங்களை போதிக்குமோ? ஒருநாளும் கிடையாது! தேவன் சொன்னது எதுவோ அதைத்தான் அவர் வார்த்தையாகிய இயேசுவும் நமக்கு சொன்னார்.
யோவான் 8:28 நான் என் சுயமாய் ஒன்றும் செய்யாமல், என் பிதா எனக்குப் போதித்தபடியே இவைகளைச் சொன்னேன் என்றும் அறிவீர்கள்.
எனவே இயேசுவின் வார்த்தைகள் எல்லாம் பிதாவின் வார்த்தைகளே அவ்வாறிருக்க, இன்று தேவனையும் அவர் வார்த்தையையும் பிரிக்க நினைப்பது சாத்தானின் சதியல்லாமல் வேறு என்ன இருக்க முடியும்?//
இத்திரியில் நீங்கள் எழுதியது:
//தேவனின் கற்பனைகளாகிய நியாயப்பிரமாணம் நியாயம் என்பது "பாவம் என்பது என்ன" என்பதை நமக்கு போதிக்கிறது. ஆனால் இயேசுவின் வார்த்தைகளோ "நியாயமாக நமக்கு சேர வேண்டியவைகளைக்கூட பிறருக்காக விட்டுக்கொடுக்க சொல்லும் ஒரு மேன்மையான நிலையை நமக்கு போதிக்கிறது" இரண்டின் பயன்பாடும் பலன்களும் வேறு வேறு!//
தேவனும் அவரது வார்த்தையாகிய இயேசுவும் மாறுபாடான காரியங்களைப் போதிக்கமாட்டார்கள் என ஒரு திரியில் கூறிவிட்டு, இத்திரியில் அவர்களின் போதனைகளிலும் அவற்றிற்கான பலன்களிலும் பெரும் வித்தியாசம் இருப்பதாகக் கூறுகிறீர்கள். இது உங்களது முரண்பாடான நிலையைக் காட்டுகிறது.
இயேசுவின் போதனைக்கும் தேவனின் கற்பனைக்கும் உள்ள வித்தியாசத்திற்கு ஓர் உதாரணமாக, “உனக்குண்டானதை விற்று தரித்திரக்குக் கொடு” எனும் இயேசுவின் கட்டளையைக் கூறுகிறீர்கள். இக்கட்டளைப்படி நடக்காதது பாவமல்ல என்றும், இக்கட்டளைப்படி நடப்பதென்பது ஒரு மேன்மையான நிலையை மட்டும் தரும் என்றும் நீங்க சொல்கிறீர்கள். உங்கள் கருத்து சரியா தவறா என்பதை பின்வரும் எனது விளக்கத்திற்குப் பின்னர் தீர்மானியுங்கள்.
ஆதியில் காயீனிடம் தேவன் இப்படிக் கூறினார்.
ஆதி. 4:6 அப்பொழுது கர்த்தர் காயீனை நோக்கி: உனக்கு ஏன் எரிச்சல் உண்டாயிற்று? உன் முகநாடி ஏன் வேறுபட்டது? 7 நீ நன்மைசெய்தால் மேன்மை இல்லையோ? நீ நன்மைசெய்யாதிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்; அவன் ஆசை உன்னைப் பற்றியிருக்கும், நீ அவனை ஆண்டுகொள்ளுவாய் என்றார்.
நன்மை செய்யாதிருப்பது பாவமென ஆதியிலேயே தேவன் சொல்லி விட்டார். வேதாகமம் முழுவதிலும் இதே கருத்து பல இடங்களில் கூறப்பட்டுள்ளது.
பிறருக்கு நன்மை செய்தல் என்றால் என்ன? பார்வையற்றவரை கைபிடித்து வழி நடத்துவது போன்ற உதவிகளைச் செய்வது மட்டுந்தானா? பசித்தவனுக்கு உன் ஆகாரத்தைக் கொடுத்தல் என்பது போன்ற பல கற்பனைகளை எசேக்கியேல் 18:1-9; ஏசாயா 58:5-10 மற்றும் பல வசனங்களில் தேவன் சொல்லியுள்ளாரே! இவையெல்லாம் பிறருக்கு நன்மை செய்தல் சம்பந்தமானவைகள்தானே? இவற்றைச் செய்யாவிட்டால் அது பாவம் தானே?
பிறருக்கு நன்மை செய்வதற்கு நாம் எந்தப் பணத்தை/சொத்தை செலவளிக்க முடியும்? கடன் வாங்கியா, அல்லது பிச்சை எடுத்தா? நம் சம்பாதிக்கிற பணத்தை, அல்லது நமக்கு சொந்தமான சொத்தை விற்று அதைக்கொண்டு தானே நன்மை செய்ய முடியும்?
ஆனால் நீங்களோ, நாம் சம்பாதிக்கிற பணத்தை நம் இஷ்டப்படி செலவளிக்க நமக்கு அதிகாரம் உள்ளது என்கிறீர்கள். இதோ உங்கள் பதிவு.
//இயேசுவின் வார்த்தைகளின்படி "தனக்குண்டனவற்றை விற்று தரித்திரனுக்கு கொடுக்காதவனை" பாவம் செய்தவன் என்று சொல்லிவிட முடியாது. காரணம் அவனுக்குண்டானதை அவன் எப்படி வேண்டுமானாலும் செய்ய அவனுக்கு அதிகாரம் இருக்கிறது என்பதையும் வேறொரு வசனம் சொல்கிறது.//
வேறொரு வசனம் இருப்பதாகச் சொல்லும் நீங்கள், அது எந்த வசனம் எனச் சொல்லவில்லை. நீங்கள் சொல்லவரும் வசனம் பின்வரும் வசனங்களில் ஒன்றாக இருக்கலாம்.
மத்தேயு 20:15 என்னுடையதை என் இஷ்டப்படி செய்ய எனக்கு அதிகாரமில்லையா? நான் தயாளனாயிருக்கிறபடியால், நீ வன்கண்ணனாயிருக்கலாமா?
பிரசங்கி 5:18 இதோ, உயிரோடிருக்கும்படி தேவன் அருளிச்செய்த நாளெல்லாம் மனுஷன் புசித்துக் குடித்து, சூரியனுக்குக் கீழே தான் படும் பிரயாசம் அனைத்தின் பலனையும் அநுபவிப்பதே நலமும் உத்தமுமான காரியமென்று நான் கண்டேன், இதுவே அவன் பங்கு.
இவ்விரு வசனங்களும், நாம் சம்பாதிப்பதை நம் இஷ்டப்படி செலவளிக்க நமக்கு அதிகாரத்தைக் கொடுக்கவில்லை. அப்படி கொடுத்திருந்தால், “பிறருக்கு நன்மை செய், நன்மை செய்யாவிட்டால் அது பாவம்” என வேதாகமம் சொல்வது அர்த்தமற்றதாக இருக்கும்.
மேலேயுள்ள வசனங்களில், முதல் வசனம் எந்த அதிகாரத்தைச் சொல்கிறது? தனக்குரியதை தன் இஷ்டப்படி பொன்னையும் பொருளையும் சொத்தையும் விலையுயர்ந்த வஸ்திரங்களையும் வாங்குவதையுமா குறிப்பிடுகிறது? இல்லை சகோதரரே! பிறருக்குக் கொடுப்பதில் தயாளனாய் இருப்பதையே குறிப்பிடுகிறது.
அடுத்த வசனம், நம் பிரயாசத்தின் பலன் மூலம் நம் இஷ்டப்படி பொன்னையும் பொருளையும் சொத்தையும் விலையுயர்ந்த வஸ்திரங்களையும் வாங்கி அநுபவிப்பதையா கூறுகிறது? இல்லை சகோதரரே! நம் பிரயாசத்தின் பலன் மூலம் நல்ல முறையில் புசித்துக் குடித்து அநுபவிப்பதையே கூறுகிறது. ஆம், நம் பிரயாசத்தின் பலன் மூலம் திருப்தியாக புசித்துக் குடிக்கலாம்; வாகனம் போன்ற வசதிகளையும் அநுபவித்துக் கொள்ளலாம். ஆனால் மிஞ்சினதை யாருக்கும் பயனற்ற வகையில் பொன்/பொருள்/ஆஸ்தியாக சேர்த்து வைக்க அதிகாரமில்லை. ஒருவேளை நம் முன்னோர்களின் சொத்தான ஆஸ்தி இருந்தால், அதை பிறருக்கு நன்மை செய்வதற்காக விற்றுக் கொடுக்க வேண்டும் என்பதே இயேசுவின் கட்டளை.
இயேசு அக்கட்டளையைச் சொன்ன வாலிபனிடம் யாருக்கும் பயனில்லாத வகையில் மிகுந்த ஆஸ்தி இருந்தது. அதாவது “வைக்கோல் படப்பைக் காத்த நாய்” மாதிரி தானும் அநுபவியாமல், பிறருக்கும் கொடுக்காமல் பயனற்ற விதத்தில் ஆஸ்தி வைத்திருந்தான். அப்படி வைத்திருப்பது நிச்சயமாக பாவமே என்பதால்தான், அவனுக்குண்டான அந்த ஆஸ்தியை விற்று தரித்திரருக்குக் கொடுக்கும்படி இயேசு கூறினார். அப்படிச் செய்யத்தவறிய அவன் பாவி அல்ல என நியாயந்தீர்த்து, அவனுக்கு நித்திய ஜீவன் உண்டு என்றா இயேசு கூறினார்? வசனத்தைப் படியுங்கள்.
மத்தேயு 19:22 அந்த வாலிபன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனாயிருந்தபடியால், இந்த வார்த்தையைக் கேட்டபொழுது, துக்கமடைந்தவனாய்ப் போய்விட்டான். 23 அப்பொழுது, இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: ஐசுவரியவான் பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பது அரிதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 24 மேலும் ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப்பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
ஐசுவரியவானாகிய அந்த வாலிபனைப் போன்றவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது (நித்திய ஜீவனை சுதந்தரிப்பது) மிகவும் கடினம் என்றே இயேசு கூறினார். உடனே “மனுஷரால் இது கூடாது, தேவனால் எல்லாம் கூடும்” எனும் வசனத்தைச் சொல்லாதீர்கள். வசனம் அப்படிச் சொல்லவில்லை. “மனுஷருடன் செயல்பட்டால் இது கூடாது, தேவனோடு செயல்பட்டால் எல்லாம் கூடும் (With man this is impossible, but with God all things are possible.)” என்றே வசனம் கூறுகிறது.
எனவே "தனக்குண்டனவற்றை விற்று தரித்திரனுக்கு கொடுக்காதவனை பாவம் செய்தவன் என்று சொல்லிவிட முடியாது” என்பது போன்ற சுயநீதியான கருத்துக்களைக் கூறாதீர்கள்.
பொக்கிஷங்களையும் பொன்னையும் சேர்த்து வைத்துக்கொள்வதை பழைய ஏற்பாட்டில் தேவனின் போதனையும் ஆதரிக்கவில்லை, புதியஏற்பாட்டில் இயேசுவின் போதனையும் ஆதரிக்கவில்லை.
பழையஏற்பாட்டில் தேவன் சொன்னது:
ஏசாயா 2:6 யாக்கோபின் வம்சத்தாராகிய உம்முடைய ஜனத்தைக் கைநெகிழ்ந்தீர்; அவர்கள் கீழ்த்திசையாரின் போதகத்தால் நிறைந்து, பெலிஸ்தரைப்போல் நாள்பார்க்கிறவர்களாயிருந்து, அந்நிய புத்திரர்மேல் பிரியப்படுகிறார்களே.
7 அவர்கள் தேசம் வெள்ளியினாலும் பொன்னினாலும் நிறைந்திருக்கிறது; அவர்கள் பொக்கிஷங்களுக்கு முடிவில்லை; அவர்கள் தேசம் குதிரைகளாலும் நிறைந்திருக்கிறது; அவர்கள் இரதங்களுக்கும் முடிவில்லை.
8 அவர்கள் தேசம் விக்கிரகங்களாலும் நிறைந்திருக்கிறது; தங்கள் கைகளின் கிரியையையும், தங்கள் விரல்கள் உண்டுபண்ணினதையும் பணிந்துகொள்ளுகிறார்கள். 9 சிறியவனும் குனிகிறான், பெரியவனும் பணிகிறான்; ஆகையால் அவர்களுக்கு மன்னியாதிருப்பீர்.
ஏசாயா 55:2 நீங்கள் அப்பமல்லாததற்காகப் பணத்தையும், திருப்திசெய்யாத பொருளுக்காக உங்கள் பிரயாசத்தையும் செலவழிப்பானேன்?
எசேக்கியேல் 7:19 தங்கள் வெள்ளியைத் தெருக்களில் எறிந்துவிடுவார்கள்; அவர்களுடைய பொன் வேண்டாவெறுப்பாயிருக்கும்; கர்த்தருடைய சினத்தின் நாளிலே அவர்கள் வெள்ளியும் அவர்கள் பொன்னும் அவர்களை விடுவிக்கமாட்டாது; அவர்கள் அதினால் தங்கள் ஆத்துமாக்களைத் திருப்தியாக்குவதும் இல்லை, தங்கள் வயிறுகளை நிரப்புவதும் இல்லை; அவர்கள் அக்கிரமமே அவர்களுக்கு இடறலாயிருந்தது.
உபாகமம் 15:4 எளியவன் உனக்குள் இல்லாதிருக்கும்படியாக இப்படிச் செய்யவேண்டும்; 7 உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தின் எந்த வாசலிலும் உன் சகோதரரில் எளியவனான ஒருவன் இருந்தால், எளியவனாகிய உன் சகோதரனுக்கு உன் இருதயத்தை நீ கடினமாக்காமலும், உன் கையை மூடாமலும், 8 அவனுக்கு உன் கையைத் தாராளமாய்த் திறந்து, அவனுடைய அவசரத்தினிமித்தம் அவனுக்குத் தேவையானதைக் கடன்கொடுப்பாயாக. 9 விடுதலை வருஷமாகிய ஏழாம் வருஷம் கிட்டியிருக்கிறதென்று சொல்லி, உன் இருதயத்திலே பொல்லாத நினைவு கொண்டு, உன் ஏழைச் சகோதரனுக்குக் கொடாமல் மறுத்து, அவன்மேல் வன்கண் வைக்காதபடிக்கும், அவன் உன்னைக் குறித்துக் கர்த்தரை நோக்கி அபயமிடாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு; அப்படிச் செய்வாயானால் அது உனக்குப் பாவமாயிருக்கும். 10 அவனுக்குத் தாராளமாய்க் கொடுப்பாயாக; அவனுக்குக் கொடுக்கும்போது உன் இருதயம் விசனப்படாதிருப்பதாக; அதினிமித்தமாக உன் தேவனாகிய கர்த்தர் உன்னுடைய எல்லாக் கிரியைகளிலும், நீ கையிட்டுச் செய்யும் எல்லாக் காரியங்களிலும் உன்னை ஆசீர்வதிப்பார். 11 தேசத்திலே எளியவர்கள் இல்லாதிருப்பதில்லை; ஆகையால் உன் தேசத்திலே சிறுமைப்பட்டவனும் எளியவனுமாகிய உன் சகோதரனுக்கு உன் கையைத் தாராளமாய்த் திறக்கவேண்டும் என்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன்.
இவ்வசனங்களைப் படித்த பின்னரும், நாம் சம்பாதிப்பதை நம் இஷ்டம்போல் செலவளிக்க நமக்கு அதிகாரம் உள்ளது என்றுதான் சொல்லப்போகிறீர்களா?
சங்கீதக்காரன் மூலம் தேவன் சொன்னது:
சங்கீதம் 17:14 மனுஷருடைய கைக்கும், இம்மையில் தங்கள் பங்கைப் பெற்றிருக்கிற உலகமக்களின் கைக்கும் உம்முடைய கரத்தினால் என்னைத் தப்புவியும்; அவர்கள் வயிற்றை உமது திரவியத்தினால் நிரப்புகிறீர்; அவர்கள் புத்திரபாக்கியத்தினால் திருப்தியடைந்து, தங்களுக்கு மீதியான பொருளைத் தங்கள் குழந்தைகளுக்கு வைக்கிறார்கள். 15 நானோ நீதியில் உம்முடைய முகத்தைத் தரிசிப்பேன்; நான் விழிக்கும்போது உமது சாயலால் திருப்தியாவேன்.
சங்கீதம் 112:9 வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்; அவன் கொம்பு மகிமையாய் உயர்த்தப்படும்.
தான் சம்பாதிப்பதில் தனக்குப் போக மீதியானதை நம் பிள்ளைகளுக்கு சொத்துக்களாக வைப்பதை விரும்பாமல், அவற்றை வாரியிறைத்து ஏழைகளுக்குக் கொடுப்பதுதான் தேவநீதி என சங்கீதக்காரன் மூலம் தேவன் கூறுகிறார். இந்த தேவநீதிக்கு விரோதமாக, நாம் சம்பாதிப்பதை நம் இஷ்டம்போல் செலவளிக்க அதிகாரம் உள்ளது என்றுதான் இன்னமும் சொல்லப்போகிறீர்களா?
புதிய ஏற்பாட்டில் இயேசுவும் பவுலும் சொன்னது:
மத்தேயு 6:19 பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கவேண்டாம்; இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள். 20 பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவையுங்கள்; அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை; அங்கே திருடர் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை.
1 தீமோ. 6:19 இவ்வுலகத்திலே ஐசுவரியமுள்ளவர்கள் இறுமாப்பான சிந்தையுள்ளவர்களாயிராமலும், நிலையற்ற ஐசுவரியத்தின்மேல் நம்பிக்கை வையாமலும், நாம் அனுபவிக்கிறதற்குச் சகலவித நன்மைகளையும் நமக்குச் சம்பூரணமாய்க் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைக்கவும், 18 நன்மைசெய்யவும், நற்கிரியைகளில் ஐசுவரியவான்களாகவும், தாராளமாய்க் கொடுக்கிறவர்களும், உதாரகுணமுள்ளவர்களுமாயிருக்கவும், 19 நித்திய ஜீவனைப் பற்றிக்கொள்ளும்படி வருங்காலத்திற்காகத் தங்களுக்கு நல்ல ஆதாரத்தைப் பொக்கிஷமாக வைக்கவும் அவர்களுக்குக் கட்டளையிடு.
சகோ.சுந்தர் அவர்களே! நம் சம்பாத்தியம் மற்றும் ஆஸ்தியைக் கொண்டு பிறருக்குத் தாராளமாய்க் கொடுப்பதுதான் நித்திய ஜீவனுக்கான ஆதாரம் எனப் பவுல் சொல்கிறார். அச்செயலைச் செய்யக் கட்டளையிடும்படி தீமோத்தேயுவிடம் பவுல் கூறுகிறார். நீங்களோ நாம் சம்பாதிப்பதை நம் இஷ்டம்போல் செலவளிக்க நமக்கு அதிகாரம் உள்ளது என்றும் அது பாவமல்ல என்றும் சொல்லி, உங்கள் தளத்திற்கு வருபவர்கள் நித்திய ஜீவனைப் பெறவிடாதபடிக்கு அவர்களுக்கு இடறலாக இருக்கிறீர்கள்.
முதலாவது உங்கள் தளத்தினர் நித்திய ஜீவனை பெறுவதற்கான கற்பனைகளைப் போதியுங்கள்; அதையடுத்து, அவர்கள் முதலாம் உயிர்த்தெழுதலுக்கு பங்கடையும் பரிசுத்தவான்களாகும்படி போதியுங்கள்; இறுதியாக, வெற்றியாளன் ஒருவன் வந்தால்தான் தேவதிட்டம் நிறைவேறும் எனும் உங்கள் கருத்தின்படி வெற்றியாளன் உருவாகப் போதியுங்கள்.
நம்மிடம் இருப்பதை பிறருக்குக் கொடுத்து இரக்கமாயிருக்க வேண்டிய அவசியமில்லை, அது பாவமுமில்லை எனக் கூறும் நீங்கள், எங்கோ இடிபாடுகளுக்குள் கிடந்து தவிப்போர் மீது மிகுந்த இரக்கமுற்று அவர்களுக்காக ஜெபிக்க வேண்டும் என்றும் அவர்கள் அப்படி வேதனைப்படுவதற்கு சாத்தான்தான் காரணமென்றும் சொல்கிறீர்கள். அதற்கு சாத்தான் காரணமல்ல என்றும் மனிதர்களின் பல துன்பங்களுக்கு மனிதர்களே காரணம் என்றும் நான் சொன்னால், நான் இரக்கமில்லாதவன், தேவ அன்பு இல்லாதவன் என்று சொல்லி என்னை நியாயந்தீர்க்கிறீர்கள்.
இன்னும் தேவனைக் குறித்து பின்வருமாறு எழுதி, தேவன் பட்சபாதமுள்ளவர், சர்வாதிகாரி என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கி, தேவனை அநீதியானவராகக் காட்டும் உங்களது பின்வரும் பதிவுக்கு விரைவில் பதில் தருவேன். அதன்பின் நீங்கள் அனுமதித்தால் உங்கள் தளத்தில் பதிவைத் தருவேன்; இல்லாவிடில் நிரந்தரமாக விலகிவிடுவேன்.
//பாவம் செய்தவனுக்கு நிச்சயம் தண்டனை உண்டு! ஆகினும் அதை நிறைவேற்றுவதோ அல்லது அதை மன்னிப்பதோ முற்றிலும் தேவனின் விருப்பத்திற்கு ஏற்றாற்போல் இருக்கும்.
உதாரணமாக பிறன் மனைவியை எடுத்துகொண்டு அவளது கணவனைக் கொன்றுபோட்ட தாவீதுக்குத் தண்டனையுடன் கூடிய மன்னிப்பு கிடைத்தது, ஆனால் சாதாரணமாக, தேவன் அழித்துவிட சொன்ன மிருக ஜீவன்களை கர்த்தருக்கு பலியிட வேண்டும் என்ற எண்ணத்தில் உயிரோடு வைத்திருந்த சவுலுக்கோ மன்னிப்பில்லை அவன் மரிக்க நேர்ந்தது.
நமது ரட்சகர் கூடவே இருந்துவிட்டு பின்னர் தெரியவே தெரியாது என்று மறுதலித்த பேதுருவுக்கு மன்னிப்பு கிடைத்தது ஆனால் தங்கள் சொந்த சொத்தை விற்ற கிரயத்தில் ஒருபாதியை எடுத்துகொண்டு பொய் சொன்ன அனனியா சப்பீராளுக்கு மன்னிப்பு கிடைக்கவில்லை. மரிக்க நேர்ந்தது.
எனவே, எந்த பாவத்துக்கு எவ்வளவு தண்டனை வழங்குவது அதை எவ்வாறு நிறைவேற்றவேண்டும் அல்லது அதை எதன் அடிப்படையில் மன்னிக்கவேண்டும் என்பதெல்லாம் முடிவெடுக்க தேவன் ஒருவர்க்கே உரிமை உண்டு. அதில் நாம் தலையிடுவது முற்றிலும் சரியானதல்ல.//
-- Edited by anbu57 on Saturday 5th of November 2011 09:05:52 AM
/////இயேசுவின் வார்த்தைகளின்படி "தனக்குண்டனவற்றை விற்று தரித்திரனுக்கு கொடுக்காதவனை" பாவம் செய்தவன் என்று சொல்லிவிட முடியாது. காரணம் அவனுக்குண்டானதை அவன் எப்படி வேண்டுமானாலும் செய்ய அவனுக்கு அதிகாரம் இருக்கிறது என்பதையும் வேறொரு வசனம் சொல்கிறது////
என்று நான் எழுதிய ஒரு வார்த்தையை பிடித்து கொண்டு நான் ஏதோ நன்மை செய்யவேகூடாது என்று எழுதிக்கொண்டு இருபது போல தீர்த்து இங்கு இத்தளத்துக்கு வருபவர்களுக்கு இடறல் உண்டாக்கு கிறேன் அது இது என்று என்னென்னவோ எழுதிக்கொண்டு போகிறீர்கள்.
ANBU Wrote:
///நீங்களோ நாம் சம்பாதிப்பதை நம் இஷ்டம்போல் செலவளிக்க நமக்கு அதிகாரம் உள்ளது என்றும் அது பாவமல்ல என்றும் சொல்லி, உங்கள் தளத்திற்கு வருபவர்கள் நித்திய ஜீவனைப் பெறவிடாதபடிக்கு அவர்களுக்கு இடறலாக இருக்கிறீர்கள்////
நான் எந்த பொருளில் தனக்குண்டான வைகளை விற்று தரித்திரனுக்கு கொடுக்கவில்லை என்றால் பாவம் இல்லை என்று எழுதினேன் என்பதை இங்கு விளக்குகிறேன் ஒருவேளை அது தவறாக இருக்குமாயின் திருத்திக்கொள்ள வாஞ்சிக்கிறேன்.
ஆண்டவராகிய இயேசு தான் உழிய நாட்களில் இவ்வார்த்தையை பிரசங்கித்துள்ளதை நாம் கீழ்கண்ட வசனத்தில் அறிகிறோம்!
இதற்க்கு ஒத்த அல்லது இந்த கருத்தை குறித்த விளக்கமான வசனம் ஓன்று நித்திய ஜீவனை அடையவேண்டும் என்று இயேசுவை தேடி வந்த வாலிபனிடம் இயேசு சொன்னதாக இன்னொரு வசனமும் வேதத்தில் உள்ளது.
மாற்கு 10:21இயேசு அவனைப் பார்த்து, அவனிடத்தில் அன்புகூர்ந்து: உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு; நீ போய், உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றிவா என்றார்.
நமக்கு உள்ளவைகளை விற்று பிச்சை கொடுக்கவேண்டும் என்று போதித்த இயேசு, அதை தொடர்ந்து உண்டாக்கு உண்டானவைகளை எல்லாம் விற்று தரித்திரருக்கு கொடுக்கும்படியும் போதித்திருக்கிறார்.
இந்த வசனத்தின்படி இயேசு குறிப்பிடும் " உனக்கு உண்டானவை களையெல்லாம்"என்ற வார்த்தைஎந்த நிபந்தனைக்கும் அப்பாற்பட்டது. உனக்கு "உண்டானவைகளையெல்லாம்"எல்லாவற்றையுமே குறிக்குமேயன்றி, தாங்கள் நினைப்பதுபோல் நமக்கு தேவையான கார்/ பங்களா/ வீடு தோட்டம்/வயற்காடு போன்ற வற்றை வைத்து கொண்டு அதற்க்கு அதிகமாக இருப்பதை விற்று கொடுப்பது என்று பொருள் ஆகாது என்று கருதுகிறேன்.
உண்மையில் இந்த கட்டளையை கைகொண்டு நடக்கவிரும்புவோர் இயேசு சொன்ன வார்த்தைபடியே தனக்குண்டான எல்லாவற்றையும் விற்று தரித்திரருக்கு கொடுத்துவிட்டு ஒன்றும் இல்லாமல் இயேசுவை பின்பற்றி அவர் வாழ்ந்ததுபோல் யோவான் 14:30 இந்த உலகத்தின் அதிபதி வருகிறான் அவனுக்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை. என்று சொல்லும் நிலையில் வாழ வேண்டும். நமது இஸ்டத்துக்கு நமக்கு தேவையான அனேகபொருட்களை வைத்துகொண்டு சில பொருட்களை மாத்திரம் துறந்துவிட்டு, நான் விற்று பிச்சை போட்டுவிட்டேன் என்று சொல்வது வசனத்துக்கு புறம்பானது.
ஒருவர் பத்து பொருட்களை தனக்கு தேவை என்று வைத்திருக்கலாம் இன்னொருவர் 20௦ பொருட்களை தனக்கு தேவை என்று வைத்திருக் கலாம். அவர் சம்பாதித்ததில் அவருக்கு தேவையானதை வைத்து கொள்ள அவருக்கு அதிகாரம் இருக்கிறது என்பதே எனது கருத்து. இங்கு பத்து பொருட்களை வைத்திருப்பவர் 20 பொருட்களை வைத்திருப்பவரை பார்த்து குற்றவாழி என்று தீர்த்துவிட முடியாது. அவர் தீர்த்த தீர்ப்பே அவருக்கும் தேவனால் திரும்ப கிடைக்கும் என்றே நான் கருதுகிறேன்.
இவ்வாறு ஒருவேளை "தனக்குண்டான எல்லாவற்றையும் விற்று கொடுக்காததும் பாவம்தான்" என்று தாங்கள் கருதினால் அதை நான் ஏற்க்க தயார். அதையும் உடனடியாக என்னால் கைகொள்ள முடியும் ஏனெனில் எனக்கு விற்று கொடுப்பதற்கு கார் பங்களா வீடு நிலம் போன்ற வசதியெல்லாம் கிடையாது.
ஆனால் உங்கள் விருப்பபடி "இதுவெல்லாம் வைத்துகொள்ளலாம், அதற்க்கு மேல்தான் வைக்க கூடாது" என்று நீங்களாக ஒரு வரையறையை நிர்ணயித்து அடுத்தவர்களை அதன் அடிப்படையில் தீர்க்கவேண்டாம். "எல்லாவற்றையும்" என்பதில் எல்லாம் அடங்கும்.
அடுத்து இது நான் எழுதியது:
///எந்த பாவத்துக்கு எவ்வளவு தண்டனை வழங்குவது அதை எவ்வாறு நிறைவேற்றவேண்டும் அல்லது அதை எதன் அடிப்படையில் மன்னிக்கவேண்டும் என்பதெல்லாம் முடிவெடுக்க தேவன் ஒருவர்க்கே உரிமை உண்டு. அதில் நாம் தலையிடுவது முற்றிலும் சரியானதல்ல.///
இந்த வார்த்தயை எப்படியோ புரிந்துகொண்டு என்னை நான் தேவனை அநீதிக்காரராக காட்டுவதுபோல் நியாயம் தீர்த்திருக்கிரீர்கள்.
ANBU Wrote:
////இன்னும் தேவனைக் குறித்து பின்வருமாறு எழுதி, தேவன் பட்சபாதமுள்ளவர், சர்வாதிகாரி என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கி, தேவனை அநீதியானவராகக் காட்டும் உங்களது பின்வரும் பதிவுக்கு விரைவில் பதில் தருவேன்////
உபாகமம் 32:35பழிவாங்குவதும் பதிலளிப்பதும் எனக்கு உரியது;
என்று கர்த்தர் சொல்லியிருப்பதால் அவர் வார்த்தையின் அடிப்படையில் அவருக்கே உரிய அந்த காரியத்தில் நாம் தலையிட முடியாது என்றே இங்கு எழுதியிருக்கிறேன். அடுத்து இன்னும் கூட ஒருவசனம் இவ்வாறு சொல்கிறது:
இந்த வசனத்தின் அடிப்படையில் நாம் தேவனை நோக்கி "நீர் ஏன் இவன்மேல் இரக்கமாயிருக்கிரீர் இவனை மட்டும் ஏன் மன்னித்தீர்"என்றெல்லாம் கேள்வி கேட்க முடியாது என்று எழுதினேன். இதில் எதுவும் தவறுபோல் எனக்கு தெரியவில்லை சகோதரரே உங்கள் புரிதலில்தான் தவறு இருக்கிறது.
தன்னை யாரும் அனுமானத்தின் அடிப்படையில்கூட தீர்க்க கூடாது என்று கருதுகிற தாங்கள் அடுத்தவர்களையும் அவ்வாறு தீர்க்க கூடாது அல்லவா? நானும் வசனத்தை அடிப்படையாக கொண்டு தானே எழுதுகிறேன்?
-- Edited by SUNDAR on Wednesday 9th of November 2011 09:28:47 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
//நான் எழுதிய ஒரு வார்த்தையை பிடித்துக் கொண்டு நான் ஏதோ நன்மை செய்யவேகூடாது என்று எழுதிக்கொண்டு இருப்பது போல தீர்த்து, இங்கு இத்தளத்துக்கு வருபவர்களுக்கு இடறல் உண்டாக்குகிறேன் அது இது என்று என்னென்னவோ எழுதிக்கொண்டு போகிறீர்கள்.//
அன்பான சகோதரரே!
நீங்கள் “நன்மைசெய்யக்கூடாது” என எழுதினதாக நான் கூறவில்லை. ஆனால் உங்களது கீழ்காணும் பதிவு, நாம் நன்மை செய்யாவிட்டாலும் அது பாவமல்ல எனும் கருத்தை மறைமுகமாகச் சொல்வதாக நான் கூறியிருந்தேன்.
//இயேசுவின் வார்த்தைகளின்படி "தனக்குண்டனவற்றை விற்று தரித்திரனுக்கு கொடுக்காதவனை" பாவம் செய்தவன் என்று சொல்லிவிட முடியாது. காரணம் அவனுக்குண்டானதை அவன் எப்படி வேண்டுமானாலும் செய்ய அவனுக்கு அதிகாரம் இருக்கிறது என்பதையும் வேறொரு வசனம் சொல்கிறது.//
“நமக்குண்டானதை என்ன வேண்டுமானாலும் செய்ய நமக்கு அதிகாரம் உள்ளது” எனும் உங்கள் கூற்றுக்கு என்ன அர்த்தம் என்பதை சற்று விளக்கமாக எழுதுங்கள்; அதன்பின் உங்கள் கூற்று எப்படி இடறலாக உள்ளது என்பதை நான் சொல்கிறேன்.
//ஒருவேளை "தனக்குண்டான எல்லாவற்றையும் விற்று கொடுக்காததும் பாவம்தான்" என்று தாங்கள் கருதினால் அதை நான் ஏற்க தயார். அதையும் உடனடியாக என்னால் கைகொள்ள முடியும். ஏனெனில் எனக்கு விற்று கொடுப்பதற்கு கார் பங்களா வீடு நிலம் போன்ற வசதியெல்லாம் கிடையாது.//
எல்லாவற்றையும் என்றால் “எல்லாவற்றையும்தான்” என்கிறீர்கள். உங்கள் வரையறைப்படியே வருகிறேன். உங்களிடம் கார், பங்களா, வீடு, நிலம் இல்லை. நல்லது. இவை மட்டுமா “எல்லாவற்றிலும்” அடங்கும்? உங்கள் வீட்டில் வேறு பொருட்களே இல்லையா? நாற்காலி, மேசை, பாத்திரம், அடுப்பு, கடிகாரம், செல் போன் போன்றவை உங்களிடம் உள்ளதா? ஆம் என்றால் இவையெல்லாம் “எல்லாவற்றிலும்” அடங்காதா? இன்னும் நூல் பிடித்தாற்போல் சொல்ல வேண்டுமானால், உங்கள் அடுத்த வேளைக்கான உணவு, அணிந்திருக்கும் உடை, செருப்பு போன்றவைகளும் “எல்லாவற்றிலும்”அடங்காதா எனக் கேட்க வேண்டியதிருக்கும். இவையெல்லாம் அடங்காது எனில் ஏன் அடங்காது என்பதை விளக்குங்கள். அதன் பின்னர்தான் மாற்கு 10:21-ஐ நாம் சரியாகப் புரிந்துகொள்ள முடியும்.
//ரோமர் 9:15 அவர் மோசேயை நோக்கி: எவன்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன்மேல் இரக்கமாயிருப்பேன், எவன்மேல் உருக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன்மேல் உருக்கமாயிருப்பேன் என்றார்.
இந்த வசனத்தின் அடிப்படையில் நாம் தேவனை நோக்கி "நீர் ஏன் இவன்மேல் இரக்கமாயிருக்கிரீர் இவனை மட்டும் ஏன் மன்னித்தீர்" என்றெல்லாம் கேள்வி கேட்க முடியாது என்று எழுதினேன். இதில் எதுவும் தவறுபோல் எனக்கு தெரியவில்லை சகோதரரே உங்கள் புரிதலில்தான் தவறு இருக்கிறது.//
ஒவ்வொரு பதிவிலும் ஒவ்வொரு அடிப்படையைச் சொல்கிறீர்கள். இப்பதிவில் ரோமர் 9:15-ன் அடிப்படையில் என்கிறீர்கள்; ஆனால் பழைய பதிவில் வேறு உதாரணங்களைச் சொல்லியுள்ளீர்கள். உங்கள் பழைய பதிவை சற்று படித்து பாருங்கள்.
//பாவம் செய்தவனுக்கு நிச்சயம் தண்டனை உண்டு! ஆகினும் அதை நிறைவேற்றுவதோ அல்லது அதை மன்னிப்பதோ முற்றிலும் தேவனின் விருப்பத்திற்கு ஏற்றாற்போல் இருக்கும்.
உதாரணமாக பிறன் மனைவியை எடுத்துகொண்டு அவளது கணவனை கொன்றுபோட்ட தாவீதுக்கு தண்டனையுடன் கூடிய மன்னிப்பு கிடைத்தது, ஆனால் சாதாரணமாக, தேவன் அழித்துவிட சொன்ன மிருக ஜீவன்களை கர்த்தருக்கு பலியிட வேண்டும் என்ற எண்ணத்தில் உயிரோடு வைத்திருந்த சவுலுக்கோ மன்னிப்பில்லை அவன் மரிக்க நேர்ந்தது.
நமது ரட்சகர் கூடவே இருந்துவிட்டு பின்னர் தெரியவே தெரியாது என்று மறுதலித்த பேதுருவுக்கு மன்னிப்பு கிடைத்தது ஆனால் தங்கள் சொந்த சொத்தை விற்ற கிரயத்தில் ஒருபாதியை எடுத்துகொண்டு பொய் சொன்ன அனனியா சப்பீராளுக்கு மன்னிப்பு கிடைக்கவில்லை. மரிக்க நேர்ந்தது.
எனவே, எந்த பாவத்துக்கு எவ்வளவு தண்டனை வழங்குவது அதை எவ்வாறு நிறைவேற்றவேண்டும் அல்லது அதை எதன் அடிப்படையில் மன்னிக்கவேண்டும் என்பதெல்லாம் முடிவெடுக்க தேவன் ஒருவர்க்கே உரிமை உண்டு. அதில் நாம் தலையிடுவது முற்றிலும் சரியானதல்ல.//
இப்பதிவுக்கு பதில் தருகிறேன் எனச் சொல்லியிருந்தேன். அதற்குள் ரோமர் 9:15-ஐ எடுத்துக் காட்டி விளக்கம் சொல்கிறீர்கள். அதிலும் உங்கள் மனம்போல் வார்த்தையைக் கூட்டுகிறீர்கள். ரோமர் 9:15-ல் இரக்கம் எனும் வார்த்தை மட்டும்தான் உள்ளது. நீங்கள் அதோடுகூட மன்னிப்பு எனும் வார்த்தையையும் சேர்த்துக் கொண்டீர்கள்.
ரோமர் 9:15-ன் context-ஐ ஒதுக்கிவிட்டு, வெறுமனே அவ்வசனத்தை மாத்திரம் படித்தால், அதன் அர்த்தத்தை நாம் சரியாகப் புரிந்துகொள்ள முடியாது. ரோமர் 9:15-க்கு தனியாக நீண்ட விளக்கம் சொல்ல வேண்டும்.
ரோமர் 9:15 அடங்கியுள்ள அதே வேதாகமத்தில், தேவன் பட்சபாதமுள்ளவரல்ல, தேவன் நீதிபரர் எனும் வசனங்களும் அடங்கியுள்ளன. எல்லா வசனங்களையும் balance செய்துதான் கருத்து சொல்லவேண்டும். நீங்கள் பொறுமையாகக் கேட்கத் தயாரெனில் நான் சொல்லத் தயார்.
anbu57 wrote:எல்லாவற்றையும் என்றால் “எல்லாவற்றையும்தான்” என்கிறீர்கள். உங்கள் வரையறைப்படியே வருகிறேன். உங்களிடம் கார், பங்களா, வீடு, நிலம் இல்லை. நல்லது. இவை மட்டுமா “எல்லாவற்றிலும்” அடங்கும்? உங்கள் வீட்டில் வேறு பொருட்களே இல்லையா? நாற்காலி, மேசை, பாத்திரம், அடுப்பு, கடிகாரம், செல் போன் போன்றவை உங்களிடம் உள்ளதா? ஆம் என்றால் இவையெல்லாம் “எல்லாவற்றிலும்” அடங்காதா? இன்னும் நூல் பிடித்தாற்போல் சொல்ல வேண்டுமானால், உங்கள் அடுத்த வேளைக்கான உணவு, அணிந்திருக்கும் உடை, செருப்பு போன்றவைகளும் “எல்லாவற்றிலும்”அடங்காதா எனக் கேட்க வேண்டியதிருக்கும். இவையெல்லாம் அடங்காது எனில் ஏன் அடங்காது என்பதை விளக்குங்கள். அதன் பின்னர்தான் மாற்கு 10:21-ஐ நாம் சரியாகப் புரிந்துகொள்ள முடியும்.
சகோதரர் அவர்களே, நான் ஒன்றை நினைத்துகொண்டு எழுத நீங்கள் ஒன்றை நினைத்துகொண்டு எழுத இருவருக்குமே அனேக நேரம் மற்றும் உழைப்பு வியர்த்தமாகிறது எனவேநான் சுருக்கமாக என்னுடய கருத்தை சொல்லி முடிக்கிறேன்.
ஆண்டவராகிய இயேசு சொல்லியிருக்கிறபடிய எனக்கு உண்டான எல்லாவற்றையும் விட்டுவிட்டு என்னிடத்தில் எதுவும் இல்லை என்று சொல்லும் நிலையில் வாழவிரும்பும் எனக்கு, தாங்கள் சொல்வது போல் மனுஷனுக்கு தேவையான அடிப்படை தேவைகளாகிய சில பொருட்களை என்னால் விற்று தரித்திரருக்கு கொடுக்க முடியவில்லை. அதற்காக இயேசு சொன்ன வார்த்தையை நான் மாற்ற விரும்பவில்லை அவர் எல்லாவற்றையும் என்று சொன்னால் எல்லாவற்றையும்தான் குறிக்கும். அதுநம்மால் முடியவில்லை என்பதற்காக அவ்வார்த்தையில் நான் அல்டர்ரேஷன் பண்ண விரும்பாமல், நமக்கு ஆதரவாக வேறு வசனம் ஏதாவது இருக்கிறதா என்று பார்த்தால் தாங்கள் குறிப்பிட்டுள்ள வசனப்படி:
மத்தேயு 20:15என்னுடையதை என் இஷ்டப்படிச் செய்ய எனக்கு அதிகாரமில்லையா?
பிரசங்கி 5:19தேவன் ஐசுவரியத்தையும் சம்பத்தையும் எவனுக்குக் கொடுத்திருக்கிறாரோ, அவன் அதிலே புசிக்கவும், தன்பங்கைப் பெறவும், தன் பிரயாசத்திலே மகிழ்ச்சியாயிருக்கவும் அவனுக்கு அதிகாரம் அளிப்பது தேவனுடைய அநுக்கிரகம்.
என்ற வசனம், நம் சம்பாதித்ததில் நமக்கு தேவையானதை எடுத்து புசிக்கவும் குடிக்கவும் அதிகாரம் தருவதாக தீர்மானித்தேன். அதில்
பாவம் இல்லை என்றும் தீர்மானித்துள்ளேன். அதன் அடிப்படையிலேயே அவ்வாறு எழுதினேன். தங்களிடம் வேறு ஏதாவது கருத்து இருந்தால் தெரிவியுங்கள் அதைகுறித்து ஆராயலாம். ஆனால் நமக்கு ஒருவசனம் ஒத்துவரவில்லை என்றால் அதற்க்கு முன்னும் பின்னும் வார்த்தைகளை சேர்ப்பது சரியான ஒரு காரியம் அல்ல. அதற்க்கு பதில் சொல்லும் வேறு வசனம் மூலம் மட்டுமே நாம் ஒரு முடிவுக்கு வர முடியும்.
உண்மையில், நமக்கென்று எதையுமே எடுக்காமல் இயேசுவைபோல காசை கையில் தொட்டுகூட பார்க்காமல் தேவ ஆவியானவரின் நடத்துதலில் வாழ்வது அதைவிட மேலான நிலை என்பதே எனது தீர்மானம். ஆம்! நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் அது மேன்மையான ஒருநிலையே!ஏனெனில் நான் அதேபோல் எனக்கென்று எந்த ஒன்றையும் வைத்திரமால் மும்பையில் மூன்று நாட்கள் இரவு பகல் சுற்றி இருக்கிறேன். எனக்கு பசியும் எடுத்ததில்லை பணம் வேண்டும் என்று கவலைபட்டதும் இல்லை. ஆனாலும் மிகுந்த தெம்புடனும் சந்தோசத்துடனும்தான் ஓடினேன் நடந்தேன். தேவனால் நடத்தப்படும் அந்நிலை நிச்சயம் மேன்மையான ஒரு நிலையே. அதை அனுபவித்தவர்களுக்குதான் அதன் மேன்மை புரியவரும். காலம் வரும்போது தேவன் என்னை மீண்டும் அந்த நிலைக்கு உயர்த்துவார் என்ற நம்பிக்கையில் இன்று எனக்கு நியமிக்கபட்ட கடமைகளை செய்து கொண்டு இருக்கிறேன்
மற்றபடி தங்கள் எழுதியதுபோல் நன்மை செய்யகூடாது என்ற கருத்தில் நான் எதையும் எழுதவில்லை.
அடுத்ததாக தாவீது/சவுல்/பேதுரு/ அனனியா சப்பீரால் பற்றிய செய்திகளை எழுதியது, தாங்கள் கருதுவதுபோல் தேவன் பட்சபாதம் உள்ளவர் என்று காட்டுவதற்காக அல்ல. அப்படி நான் எங்கும் சொல்ல வில்லை. மாறாக அவர் செய்யும் காரியங்களின் அடிப்படை உண்மைகளை அறியும் அளவுக்கு எனக்கு போதிய ஞானம் இல்லை எனவே அவரை எந்த கேள்வியும் கேட்கமுடியாது என்பதை வலியுறுத்தவே அவ்வாறு எழுதினேன்.
யோபு 37:23சர்வவல்லவரை நாம் கண்டுபிடிக்கக் கூடாது; அவர் வல்லமையிலும் நியாயத்திலும் பெருத்தவர்; அவர் மகாநீதிபரர்;
இதை குறித்து நான் அனேக திரிகளில் எழுதிவிட்டேன். அவர் அடிப்படை நியாயம் இல்லாமல் எதையும் செய்யமாட்டார். ஒருவேளை நமக்கு அதில் உள்ள நியாயங்கள் தெரியாமல் இருக்கலாம்.
மேலும்,
உபாகமம் 32:35பழிவாங்குவதும் பதிலளிப்பதும் எனக்கு உரியது;
என்று கர்த்தர் சொல்வதால், அவருக்கே உரிய காரியமாகிய "பழி வாங்குவதும், பதிலளிப்பது"மாகிய காரியங்களில் நாம் தலையிட முடியாது என்பது எனது கருத்து.
மற்றபடி தேவன் தன் செய்கையில் எங்கும் நீதியுள்ளவர் என்றே கூறி வருகிறேன்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
//சகோதரர் அவர்களே, நான் ஒன்றை நினைத்துகொண்டு எழுத நீங்கள் ஒன்றை நினைத்துகொண்டு எழுத இருவருக்குமே அனேக நேரம் மற்றும் உழைப்பு வியர்த்தமாகிறது எனவேநான் சுருக்கமாக என்னுடய கருத்தை சொல்லி முடிக்கிறேன்.//
அன்பான சகோதரரே!
நம் இருவரின் நேரம் மற்றும் உழைப்பு வியர்த்தமாவதைத் தவிர்க்க, நான் விவாதத்திலிருந்து விலகிக்கொள்ளவே விரும்புகிறேன். என்றாலும் எனது இறுதி முயற்சியாக ஒரேயொரு விளக்கம் மட்டும் கேட்கிறேன்.
இதுவரை நானோ நீங்களோ சொன்ன எந்த கருத்தையும் மேற்கோள் காட்டாமல், மாற்கு 10:21-க்கு தெளிவான விளக்கத்தைத் தரும்படி கேட்கிறேன். குறிப்பாக “எல்லாவற்றையும்” எனும் வார்த்தைக்கான உங்கள் விளக்கத்தை தகுந்த உதாரணங்களுடன் கூறும்படி வேண்டுகிறேன்.
//சகோதரர் அவர்களே, நான் ஒன்றை நினைத்துகொண்டு எழுத நீங்கள் ஒன்றை நினைத்துகொண்டு எழுத இருவருக்குமே அனேக நேரம் மற்றும் உழைப்பு வியர்த்தமாகிறது எனவேநான் சுருக்கமாக என்னுடய கருத்தை சொல்லி முடிக்கிறேன்.//
அன்பான சகோதரரே!
நம் இருவரின் நேரம் மற்றும் உழைப்பு வியர்த்தமாவதைத் தவிர்க்க, நான் விவாதத்திலிருந்து விலகிக்கொள்ளவே விரும்புகிறேன். என்றாலும் எனது இறுதி முயற்சியாக ஒரேயொரு விளக்கம் மட்டும் கேட்கிறேன்.
இதுவரை நானோ நீங்களோ சொன்ன எந்த கருத்தையும் மேற்கோள் காட்டாமல், மாற்கு 10:21-க்கு தெளிவான விளக்கத்தைத் தரும்படி கேட்கிறேன். குறிப்பாக “எல்லாவற்றையும்” எனும் வார்த்தைக்கான உங்கள் விளக்கத்தை தகுந்த உதாரணங்களுடன் கூறும்படி வேண்டுகிறேன்.
சகோதரர் அவர்களே தங்கள் விளக்குவதுபோல் மூல பாஷையில் என்ன உள்ளது என்பதை எனக்கு அறிந்து எழுத முடியவில்லை. என்னுடய புரிதல் மிகவும் சுலபமானது. அதாவது என்ன எழுதி யிருக்கிறதோ அதை அப்படியே ஏற்ப்பதுதான். அதன் அடிப்படையில் "எல்லாவற்றையும்" என்றால் அனைத்தையும்தான். அதாவது மனுஷனின் மானத்தை பாதுகாக்க தேவனாலேயே வழங்கபட்ட உடையை தவிர மற்ற எல்லாமே "எல்லாவற்றையும்" என்ற சொல்லுக்குள் அடங்கும் என்பது எனது கருத்து.
ஆகினும் தங்கள் கேட்டுகொண்டதக்கு ஏற்ப வேறு மொழியில் உள்ள வார்த்தைகளையும் பார்க்கலாம்
10:21 As Jesus looked at him, he felt love for him and said, “You lack one thing. Go, sell whatever you have and give the money35 to the poor,
நீ என்ன வைத்திருக்கிறாயோ அதெயெல்லாம் விற்று ஏழைக்கு கொடு
Whatever means
1. Everything or anything that: Do whatever you please.
2. What amount that; the whole of what: Whatever is left over is yours
21And Jesus, looking at him, loved him, and said to him, "You lack one thing: go, sell all that you have and give to the poor, and you will have treasure in heaven; and come, follow me."
உனக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று ஏழைக்கு கொடு
ALL Means 1. Being or representing the entire or total number, amount, or quantity
தொடர்புடைய பிற வசனங்கள்:
லூக்கா 5:11அவர்கள் படவுகளைக் கரையிலே கொண்டுபோய் நிறுத்தி, எல்லாவற்றையும் விட்டு, அவருக்குப் பின்சென்றார்கள்.
இங்கு சீஷர்களை இயேசு அழைத்தபோது அவர்களின் வாழ்வாதாரமாக இருந்த படகு வலைகள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உடுத்த துணியோடு இயேசுவின் பின் சென்றார்கள் என்று பொருள் கொள்ளலாம்.
எபிரெயர் 3:4எல்லாவற்றையும் உண்டுபண்ணினவர் தேவன்.
இங்கு தேவன் இல்லாமல் எந்த ஒருபொருளும் உண்டாகவில்லை எனவே எல்லாவற்றையும் என்ற வார்த்தை அனைத்து பொருட்களையும் குறிக்கிறது.
சகோதரர் அவர்களே! நமக்கு அடிப்படை தேவனான போருளைகூட எடுக்காமல் எல்லாவற்றையும் விற்று கொடுத்தால் நாம் எப்படி வாழ முடியும்" என்ற கேள்வி உலகத்தார் உள்ளத்தில் எழலாம். ஆனால் தேவனை விசுவாசிப்பவர்கள் உள்ளத்தில் அந்த கேழ்வி எழ முடியாது.
ஒன்றுமே இல்லாவிட்டாலும் தேவனால் நம்மை வாழவைக்க முடியும். ஏனெனில் தேவனின் ஒரே ஒரு வார்த்தைகூட நம்மை வாழவைக்க முடியும்!
உபாகமம் 8:3மனுஷன் அப்பத்தினால் மாத்திரம் அல்ல, கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்
என்ற வார்த்தையின் அடிப்படையில் மனுஷனின் பிழைப்புக்கு தேவனின் வார்த்தை ஒன்றே போதும் மற்ற எல்லாவற்றையுமே நாம் குப்பையாக ஒதுக்கிதள்ளிவிட முடியும். எனவே எல்லாவற்றையும் விட்டுவிட்டு உடுத்திருக்கும் துணியோடு தேவனின்
வார்த்தையை நம்பி போகும் நிலையே மிக உயர்ந்த நிலை. அது நிச்சயம் முடியாத ஒரு நிலை அல்ல. நாம் வார்த்தைகளை விசுவாசித்து துணிந்தால் தேவன் நம்மை தாங்கி நடத்துவார். அற்ப்பவிசுவாசத்தில் பயந்தால் அது முடியாது.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
//எபிரெயர் 3:4 எல்லாவற்றையும் உண்டுபண்ணினவர் தேவன்.
இங்கு தேவன் இல்லாமல் எந்த ஒருபொருளும் உண்டாகவில்லை. எனவே எல்லாவற்றையும் என்ற வார்த்தை அனைத்து பொருட்களையும் குறிக்கிறது.//
அன்பான சகோதரரே!
“எல்லாவற்றையும்” எனும் வார்த்தைக்கான அர்த்தம் எனக்கு நன்றாகவே தெரியும். நான் கேட்டது: மாற்கு 10:21 வசனம் சொல்லப்பட்ட சந்தர்ப்பத்தில் “எல்லாவற்றையும்” எனும் வார்த்தைக்கான விளக்கத்தை. உங்கள் விளக்கத்தை “தகுந்த உதாரணங்களுடன்” சொல்லும்படி கேட்டிருந்தேன்; ஆனால் நீங்கள் சொல்லவில்லை.
அவ்வார்த்தைக்கான எனது விளக்கத்தை உதாரணங்களுடன் கூறியிருந்தேன்; ஆனால் நீங்களோ, “வசனத்தோடு நான் வார்த்தைகளைக் கூட்டுவதாக/குறைப்பதாகக்” கூறிவிட்டீர்கள். அதனால்தான் தெளிவான விளக்கத்தைக் கூறும்படி உங்களிடம் கேட்டேன்; ஆனால் இன்னமும் தெளிவான விளக்கத்தை நீங்கள் தரவில்லை.
மீண்டும் கேட்கிறேன்: அந்த வாலிபன் அல்லது அந்த வாலிபனின் இடத்தில் இருக்கும் நான் எதையெல்லாம் விற்று தரித்திரருக்குக் கொடுக்கவேண்டும்? உதாரணமாக எனது வீடு, மேஜை, நாற்காலி, பாத்திரம், அடுப்பு அத்தனையையும் விற்க வேண்டுமா? அல்லது இன்னும் எதையெதை விற்க வேண்டும்? விற்றுவிட்டு நானும் எனது குடும்பமும் எங்கே போய் தங்க வேண்டும்? எதைச் சாப்பிட வேண்டும்?
அப்பத்தினால் மட்டுமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படும் ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் எனும் வசனத்தை விசுவாசித்து, ஆகாரம் புசியாமல் பட்டினியாய் கிடந்து வாழ வேண்டும் என்கிறீர்களா? பிளாட்பாரத்திலும் காடுகளிலும் தங்கி மழையிலும் வெயிலிலும் காயவேண்டும் என்கிறீர்களா? இதைத்தான் அந்த வாலிபனிடம் இயேசு எதிர்பார்த்தாரா?
“எல்லாவற்றையும்” எனும் வார்த்தைக்கான அர்த்தம் எனக்கு நன்றாகவே தெரியும். நான் கேட்டது: மாற்கு 10:21 வசனம் சொல்லப்பட்ட சந்தர்ப்பத்தில் “எல்லாவற்றையும்” எனும் வார்த்தைக்கான விளக்கத்தை. உங்கள் விளக்கத்தை “தகுந்த உதாரணங்களுடன்” சொல்லும்படி கேட்டிருந்தேன்; ஆனால் நீங்கள் சொல்லவில்லை.மீண்டும் கேட்கிறேன்: அந்த வாலிபன் அல்லது அந்த வாலிபனின் இடத்தில் இருக்கும் நான் எதையெல்லாம் விற்று தரித்திரருக்குக் கொடுக்கவேண்டும்? உதாரணமாக எனது வீடு, மேஜை, நாற்காலி, பாத்திரம், அடுப்பு அத்தனையையும் விற்க வேண்டுமா? அல்லது இன்னும் எதையெதை விற்க வேண்டும்? விற்றுவிட்டு நானும் எனது குடும்பமும் எங்கே போய் தங்க வேண்டும்? எதைச் சாப்பிட வேண்டும்?
அப்பத்தினால் மட்டுமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படும் ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் எனும் வசனத்தை விசுவாசித்து, ஆகாரம் புசியாமல் பட்டினியாய் கிடந்து வாழ வேண்டும் என்கிறீர்களா? பிளாட்பாரத்திலும் காடுகளிலும் தங்கி மழையிலும் வெயிலிலும் காயவேண்டும் என்கிறீர்களா? இதைத்தான் அந்த வாலிபனிடம் இயேசு எதிர்பார்த்தாரா?
எல்லாவற்றையும் விபரமாகத் தெரிவிக்கவும்.
"இயேசு அவரது சீஷர்களை அழைத்தபோது அவர்கள் எப்படி எல்லாவ றையும் விட்டு அவர் பின்சென்றார்களோ அது போல் செல்லவேண்டும்" என்று ஒரு வசன ஆதாரத்துடன் தான் விளக்கம் கூறியிருக்கிறேன். இன்னும் அதில் விளக்க என்ன இருக்கிறது? என்பது எனக்கு பரிய வில்லை சகோதரே.
தாங்கள் எப்படி உறுதியாக "சாத்தானை எதிர்த்து ஜெயிக்க வேண்டும் எந்த சாக்கு போக்கும் சொல்ல கூடாது" என்று உறுதியாக சொல்கிறீர்களோ, அதேபோல் "எல்லாவற்றையும் என்றால் அதில் அனைத்தும் அடங்கும்"
இங்கு மனைவி மக்கள் பிள்ளைகளோடு நாம் வாழ்வது முக்கியம் அல்ல! தேவனின் வார்த்தைகள்படி நடந்து இயேசுவுக்கு பாத்திர வானாகி நித்திய ஜீவனை சுதந்தரிப்பதே முக்கியம் எனவே அவரவருக்கு தங்குதால்போல் வசனங்கள எதையும் மாற்றி பொருள் கொள்ள முடியாது.
இந்த புதிய ஏற்பாட்டுகாலத்தை பொறுத்தவரை நாம் எதை இழக்க துணிகிறோமோ அதைதான் நூறத்தனையாக திரும்ப பெறுவோம் என்று இயேசு சொல்லியிருக்கிறார்.
தன் ஜீவனை முதல்கொண்டு இழக்க துணியவேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது!
லூக்கா 9:24தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான்.
"என்னை பின்பற்ற கடவன்" என்று சொன்ன இயேசு எவ்வாறு வாழ்ந்தார்? அவர் எல்லாவற்றையும் விட்டுவிட்டார் அவரிடம் உடுத்திருந்த துணியை தவற ஒன்றும் இல்லாமல் இருந்ததே!
யோவான் 14:30இந்த உலகத்தின் அதிபதி வருகிறான். அவனுக்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை.
எனவே எல்லா பொருட்கள் மட்டும் அல்ல, தன் ஜீவன் வரை அனைத்தையும் இழக்க துணிவதே இயேசு குறிப்பிடும் எல்லாவற்றையும் விட்டுவிடும் நிலை அல்லது விட துணியும் நிலை. அதுவே ஒரு மேலான நிலை என்று வேதம் சொல்கிறது.
ஆதி திருச்சபையில் இந்த வசனத்தின் அடிபடையிலேயே எல்லா விசுவாசிளும் நிலம் வீடு போன்றவற்றை விற்று அப்போஸ்த்தலர் பாதத்தில் வைத்து தங்களுக்கென்று எதுவும் இல்லாமல் பொதுவாக அனுபவித்தார்கள் என்று வேதம் சொல்கிறது.
34. நிலங்களையும் வீடுகளையும் உடையவர்கள் அவைகளை விற்று, விற்கப்பட்டவைகளின் கிரயத்தைக் கொண்டுவந்து,
35. அப்போஸ்தலருடைய பாதத்தில் வைத்தார்கள். அவனவனுக்குத் தேவையானதற்குத்தக்கதாய்ப் பகிர்ந்துகொடுக்கப்பட்டது; அவர்களில் ஒருவனுக்கும் ஒன்றும் குறைவாயிருந்ததில்லை.
அப்போஸ்தலர் 2:44விசுவாசிகளெல்லாரும் ஒருமித்திருந்து, சகலத்தையும் பொதுவாய் வைத்து அநுபவித்தார்கள்.
அப்போஸ்தலர் 4:32விசுவாசிகளாகிய திரளான கூட்டத்தார் ஒரே இருதயமும் ஒரே மனமுமுள்ளவர்களாயிருந்தார்கள். ஒருவனாகிலும் தனக்குள்ளவைகளில் ஒன்றையும் தன்னுடையதென்று சொல்லவில்லை; சகலமும் அவர்களுக்குப் பொதுவாயிருந்தது.
என்னுடய புரிதல் மிக சுலபமும் நேரடியான பொருள் உள்ளதும் ஆகும். ஆனால் அப்படி வேதம் சொல்லவில்லை என்று தாங்கள்
கருதினால் வசனம் எங்கு "உன் வீடு/வாசல்/ கார்/ நிலம் போன்ற வற்றை வைத்துகொண்டு" மற்றவற்றை விற்று தரித்திரருக்கு கொடு என்று சொல்கிறது என்பதை தாங்களே நிரூபிக்க வேண்டும்
என்னை பொறுத்தவரை அதற்க்கு மேலாக ஒரு மனுஷன் வைத்து கொள்ள தேவன் அனுமதிப்பதற்கு சாதகமான வசனத்தையும் கொடுத்துள்ளேன் ஆனால் அது இரண்டாம் பட்சமான ஒரு நிலைதான்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
//இயேசு அவரது சீஷர்களை அழைத்தபோது அவர்கள் எப்படி எல்லாவற்றையும் விட்டு அவர் பின்சென்றார்களோ அது போல் செல்லவேண்டும்.//
அன்பான சகோதரரே!
இதுதான் உங்கள் விளக்கமெனில், இன்று யாருமே நீங்கள் சொல்கிற பிரகாரம் நடக்க இயலாது. ஏனெனில், அன்றைய சீஷர்களின் கண்முன்னே இயேசு நேரடியாக மாம்சப்பிரகாரமாகத் தோன்றித்தான் அவர்களை அழைத்தார்; அதன்படித்தான் அவர்கள் இயேசுவின் பின்னே அவர் செல்லுமிடமெல்லாம் சென்றனர் (மாம்சப்பிரகாரமாக). அன்று போல் இன்று யார் முன்னேயும் மாம்சப்பிரகாரமாக இயேசு தோன்றி அழைப்பதில்லை என்பது நிச்சயம். அப்படியிருக்க, அன்றைய சீஷர்களைப் போல் எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவின் பின்னே இன்று யார்தான் செல்லமுடியும்?
நான் எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவின் பின்னே செல்லும்படி, இயேசுவை என்முன்னே மாம்சப்பிரகாரமாகக் காட்டுங்கள், நானும் எல்லாவற்றையும் விட்டுவிட்டு அவர் பின்னே செல்கிறேன்.
ஒரு வசனத்துக்கு விளக்கம் கேட்டால் இன்னொரு வசனத்தைச் சொல்கிறீர்கள். நீங்கள் சொல்கிறதை ஏற்றுக்கொண்டால்கூட, இயேசுவின் சீஷர்கள் தங்களுக்குண்டானதை விற்று தரித்திரருக்குக் கொடுத்துவிட்டு, தங்கள் குடும்பத்தாருக்கு வீடு வாசல் பாத்திரம் பண்டம் கூட வைக்காமல் அத்தனையையும் விற்றுவிட்டு இயேசுவின் பின் செல்லவில்லையே!
அவர்கள் தங்கள் குடும்பம் மனைவி மக்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு (கவனிக்கவும், விற்றுவிட்டு அல்ல) இயேசுவின் பின் சென்றனர். அவர்களுக்கு இயேசு சொன்னது தனிப்பட்ட முறையில் அவர்களுக்கு மட்டுமே உரித்தாகும். எவை இயேசுவின் கற்பனைகள், எவை 12 சீஷருக்கு தனிப்பட்ட முறையில் சொல்லப்பட்டவை என்ற வித்தியாமின்றி எல்லாவற்றையும் போட்டு குழப்பிக்கொள்கிறீர்கள்.
இன்னும் சொல்லப்போனால், இயேசுவின் மரணம் வரை மட்டுமே பேதுரு தன் குடும்பத்தைப் பிரிந்து இயேசுவின் பின் சென்றார். இயேசு பரமேறிய பின்னர், பேதுரு தனது மனைவியுடன் இருந்துகொண்டுதான் அப்போஸ்தல பணியைச் செய்தார்.
1 கொரி. 9:5 மற்ற அப்போஸ்தலரும், கர்த்தருடைய சகோதரரும், கேபாவும் செய்கிறதுபோல, மனைவியாகிய ஒரு சகோதரியைக் கூட்டிக்கொண்டு திரிய எங்களுக்கும் அதிகாரமில்லையா? (கேபா என்றால் பேதுரு என அர்த்தம்: யோவான் 1:42).
தன் மனைவியோடுகூட ஊழியம் செய்த பேதுரு, அவர்களை என்ன தெருவிலா தங்க வைத்திருப்பார்?
பவுலுங்கூட ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து இருந்துகொண்டு அப்போஸ்தலப் பணியைச் செய்தார்.
அப்போஸ்தலர் 28:30 பின்பு பவுல் தனக்காக வாடகைக்கு வாங்கியிருந்த வீட்டிலே இரண்டு வருஷமுழுதும் தங்கி, தன்னிடத்தில் வந்த யாவரையும் ஏற்றுக்கொண்டு, 31 மிகுந்த தைரியத்துடனே தடையில்லாமல், தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துப் பிரசங்கித்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைப்பற்றிய விசேஷங்களை உபதேசித்துக்கொண்டிருந்தான்.
அப்படியானால் இருக்கிற வீட்டை விற்றுவிட்டு வாடகை வீட்டில் இருந்துகொள்ளலாம் என்கிறீர்களா? அதேபோல் இருக்கிற வாகனத்தை விற்றுவிட்டு மற்றொருவர் வாகனத்தில் இலவசமாகவோ வாடகைக்கோ பயணம் செய்யலாம் என்கிறீர்களா?
இருக்கிற நகைகளை விற்றுவிட்டு, யாரிடமாவது இலவசமாகவோ வாடகைக்கோ நகைகளை வாங்கி கழுத்து நிறைய போட்டுக்கொள்ளலாம் என்கிறீர்களா? இப்படியே எந்தப் பொருளையும் வாடகைக்கோ இலவசமாகவோ வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம் என்கிறீர்களா?
நீங்களும்கூட உங்களிடம் வீடு இல்லை, கார் இல்லை என்கிறீர்கள்; ஆனால் வாடகை வீட்டில் குடியிருக்கிறீர்கள், பேருந்துகளில் பயணம் செய்கிறீர்கள் அல்லவா?
எழுத்தின்படி நமக்குச் சொந்தமாக ஒரு பொருளும் இல்லாமல் இருந்தால் மட்டும் இயேசுவின் கட்டளைப்படி நடப்பதாக ஆகிவிடுமா? எந்தெந்த பொருட்களை விற்று தரித்திரருக்குக் கொடுக்க வேண்டுமெனச் சொல்கிறீர்களோ அதே பொருட்களை இலவசமாகவோ வாடகைக்கோ பயன்படுத்தவும் கூடாது.
நான் என்னிடம் இருக்கிற அத்தனையையும் விற்று தரித்திரருக்குக் கொடுத்துவிட்டு, அவற்றையெல்லாம் எனது மாத சம்பளத்தில் வாடகைக்கு வாங்கி பயன்படுத்தினால், அதில் எனக்கு என்ன சிரமம் உள்ளது? அப்படிச் செய்தால் இயேசுவின் கட்டளைப்படி நடப்பதாக ஆகிவிடுமா?
இயேசு தமக்குத் தேவையான போது, இராவிருந்துக்காக ஒரு வீட்டின் மாடி அறையை ஏற்பாடு செய்து பயன்படுத்தவில்லையா? பவனிக்காக மற்றொருவரின் கழுதையை கொண்டுவரச் சொல்லி அதில் ஏறிச்செல்லவில்லையா? படகுகளில், கப்பல்களில் பயணிக்கவில்லையா?
வசனம் என்ன நோக்கத்தில் கூறப்பட்டதோ அதன் அடிப்படையில் சிந்தித்து வசனத்துக்குக் கீழ்ப்படிவதுதான் சரியானது. இயேசுவிடம் வந்த வாலிபனிடம் நிறைய ஆஸ்தி (அதாவது சொத்து property) இருந்தது. தனக்கோ அல்லது பிறருக்கோ பயனற்ற வகையில் வைத்திருக்கும் அந்த சொத்துக்களை விற்று தரித்திரருக்குக் கொடுக்க வேண்டும் என்பதே இயேசுவின் கட்டளை. ஆனால் மிகுந்த ஆஸ்தியுடைய அந்த வாலிபனுக்கு, அவற்றை விற்க மனமில்லை. எனவேதான் இயேசுவின் கட்டளைக்குக் கீழ்ப்படிய தவறினான்.
இயேசுவின் கட்டளைப்படி நடக்க வேண்டுமெனில், தனது ஆஸ்திகளையெல்லாம் இழக்கவேண்டுமே என்றுதான் அந்த வாலிபன் கவலைப்பட்டானேயொழிய, நீங்கள் சொல்வதுபோல் தனது வீடு, மேஜை, நாற்காலி, மற்றும் பொருட்களையெல்லாம் விற்றுவிட்டு தெருத்தெருவாக அலைய வேண்டியதிருக்குமே என நினைத்து அவன் கவலைப்படவில்லை.
ஆஸ்தி என்பது நாம் அனுதினமும் பயன்படுத்தும் பொருட்கள் அல்ல. பயன்பாட்டுக்காக இல்லாமல் வைத்திருக்கும் பொன், நிலம், வீடு, வங்கி சேமிப்பு போன்றவைதான் ஆஸ்தி.
//இங்கு மனைவி மக்கள் பிள்ளைகளோடு நாம் வாழ்வது முக்கியம் அல்ல! தேவனின் வார்த்தைகள்படி நடந்து இயேசுவுக்கு பாத்திர வானாகி நித்திய ஜீவனை சுதந்தரிப்பதே முக்கியம்.//
தமது 12 சீஷர்களை எல்லாவற்றையும் விட்டு வரச்சொன்னார் இயேசு. அதன்படி அவர்கள் குடும்பத்தையெல்லாம் விட்டுவிட்டு வந்தனர், ஆனால் இயேசு பரமேறிய பின் குடும்பத்தோடு இணைந்துகொண்டனர். இயேசுவின் ஊழிய நாட்களில் அவர்கள் குடும்பத்தை விட்டு வரவேண்டிய அவசியம் இருந்தது, எனவே அதைச் செய்தனர்; இயேசு பரமேறிய பின் அந்த அவசியமில்லை; எனவே குடும்பத்தோடு சேர்ந்துகொண்டனர்.
//தன் ஜீவனை முதல்கொண்டு இழக்க துணியவேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது!//
ஆம், நிச்சயமாக. ஆனால் யூதாஸ்கூட தன் ஜீவனை இழக்க முன்வந்தான்; அப்படியாக முன்வருவதைத்தான் இயேசு சொன்னாரா? இயேசுவுக்கு சாட்சியாய் வாழ்வதினிமித்தம் நம் ஜீவனை இழப்பதற்கான சந்தர்ப்பம் உண்டானால், அப்போது நம் ஜீவனை இழக்க முன்வந்தால் போதுமானது.
//"என்னைப் பின்பற்ற கடவன்" என்று சொன்ன இயேசு எவ்வாறு வாழ்ந்தார்? அவர் எல்லாவற்றையும் விட்டுவிட்டார், அவரிடம் உடுத்தியிருந்த துணியைத் தவிர ஒன்றும் இல்லாமல் இருந்ததே!//
இயேசு திருமணம் செய்யவில்லை; அப்படியானால் அவரைப் பின்பற்றுகிறவர்கள் திருமணம் செய்யக்கூடாது என்கிறீர்களா? இயேசு தம்மைத் தேவனுடைய குமாரன் எனச் சொன்னார்? அவரைப் பின்பற்றுபவர்களும் அப்படித்தான் சொல்லவேண்டுமா?
இயேசு எல்லாவற்றையும் விட்டுவிட்டார், அவரது சீஷர்களும் எல்லாவற்றையும் விட்டுவிட்டனர் எனில், ஏன்ஒரு சீஷன் பணப்பையை வைத்திருக்க வேண்டும்? அந்த சீஷன் தனக்காக மட்டுமே அந்த பணப்பையை வைத்திருந்தானா, அல்லது எல்லோருக்காகவும் வைத்திருந்தானா?
இன்னுமொரு விஷயம். யூதாஸ் மட்டுமின்றி மற்ற சீஷர்களும் பணப்பை மற்றும் சாமான்பை வைத்திருந்தனர். பின்வரும் வசனங்களைப் படியுங்கள்.
லூக்கா 22:35 பின்னும் அவர் அவர்களை நோக்கி: நான் உங்களைப் பணப்பையும் சாமான்பையும் பாதரட்சைகளும் இல்லாமல் அனுப்பினபோது, ஏதாகிலும் உங்களுக்குக் குறைவாயிருந்ததா என்றார். அவர்கள், ஒன்றும் குறைவாயிருந்ததில்லை என்றார்கள். 36 அதற்கு அவர்: இப்பொழுதோ பணப்பையும் சாமான்பையும் உடையவன் அவைகளை எடுத்துக்கொள்ளக்கடவன்;
ஒரு முறை பணப்பை மற்றும் சாமான்பையை எடுக்க வேண்டாம் எனச் சொன்ன இயேசு; மற்றொரு முறை அவற்றை எடுத்துக்கொள்ளச் சொன்னார். இவற்றில் எந்தக் கட்டளையை நீங்கள் பின்பற்றுவீர்கள்? சீஷர்களுக்கான தனிப்பட்ட கட்டளைகளையும் பொதுவான கற்பனைகளாக நினைத்தால் இப்படித்தான் குழப்பம் உண்டாகும்.
இயேசுவிடம் எதுவுமே இல்லை என்றீர்களே, அவரது சீஷரிடமுள்ள பணப்பை மற்றும் சாமான்பை ஆகியவை அவரது உபயோகத்துக்கும் சேர்த்துதானே?
ஒருவேளை இயேசு அவற்றைப் பயன்படுத்தியிருக்க மாட்டார் என வைத்துக்கொண்டால்கூட, அவரைப் பின்பற்றின அவரது சீஷர்கள் அவற்றைப் பயன்படுத்தினார்களல்லவா? அவற்றை எடுத்துக்கொள்ளும்படி இயேசுவும் சொல்லியுள்ளாரல்லவா?
//யோவான் 14:30 இந்த உலகத்தின் அதிபதி வருகிறான். அவனுக்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை.//
இந்த வசனத்தில் இயேசு சொல்வது, உலகப்பொருட்களைக் குறித்து என நீங்கள் புரிந்துகொண்டுள்ளது எனக்கு மிகவும் ஆச்சரியமாயுள்ளது.
சாத்தான் இயேசுவைக் குற்றப்படுத்தத்தக்கதாக இயேசுவிடம் எந்தவொரு விஷயமும் இல்லை என்பதையே இயேசு அவ்வாறு சொன்னார் என்பதே எனது புரிந்துகொள்தல்.
//எனவே எல்லா பொருட்களை மட்டும் அல்ல, தன் ஜீவன் வரை அனைத்தையும் இழக்கத் துணிவதே இயேசு குறிப்பிடும் எல்லாவற்றையும் விட்டுவிடும் நிலை அல்லது விட துணியும் நிலை. அதுவே ஒரு மேலான நிலை என்று வேதம் சொல்கிறது.//
ஆம். ஆனால் ஒரு சின்ன திருத்தம்.
“எல்லா பொருட்களை மட்டும் அல்ல, தன் ஜீவன் வரை அனைத்தையும் இழப்பதற்கான சந்தர்ப்பம் வருகையில், அவற்றை இழக்கத் துணிவதே இயேசு குறிப்பிடும் எல்லாவற்றையும் விட்டுவிடும் நிலை அல்லது விடத் துணியும் நிலை. அதுவே ஒரு மேலான நிலை என்று வேதம் சொல்கிறது.”
சந்தர்ப்பம் வரும்போது எதையும் இழந்தால் போதுமானது. பணப்பையும் சாமான்பையும் தேவைப்படாத சந்தர்ப்பத்தில் அவற்றை எடுக்கவேண்டாம் எனச் சொன்ன இயேசு, அவை தேவைப்படுங்காலத்தில் அவற்றை எடுத்துக்கொள்ளவும் சொன்னாரல்லவா? எனவே எப்போது ஒரு பொருளை (கிறிஸ்துவினிமித்தம்) இழக்க சந்தர்ப்பம் வருகிறதோ, அப்போது அதை இழந்தால் போதும். எப்போது நம் ஜீவனை (கிறிஸ்துவினிமித்தம்) இழக்க சந்தர்ப்பம் வருகிறதோ, அப்போது அதை இழந்தால் போதும்.
மாறாக, எனது பொருட்கள் ஒன்றுவிடாமல் அனைத்தையும் இப்போதே இழந்துவிடுவேன், என் ஜீவனையும் இப்போதே இழந்துவிடுவேன் எனச் சொல்வது வசனத்தை அனர்த்தமாக்கிவிடும்.
//ஆதி திருச்சபையில் இந்த வசனத்தின் அடிப்படையிலேயே எல்லா விசுவாசிளும் நிலம் வீடு போன்றவற்றை விற்று அப்போஸ்தலர் பாதத்தில் வைத்து தங்களுக்கென்று எதுவும் இல்லாமல் பொதுவாக அனுபவித்தார்கள் என்று வேதம் சொல்கிறது.//
எல்லாவற்றையும் விற்று அப்போஸ்தலரிடம் வைத்த ஆதித்திருச்சபையார், எப்படி வீடுகள்தோறும் அப்பம் பிட்டனர்? அப்படியானால் வீடுகளை அவர்கள் விற்கவில்லையா? 3 மாடி வீடுகூட அவர்களிடம் இருந்ததாக அப். 20:9 சொல்கிறதே!
இதிலிருந்து நாம் என்ன அறிகிறோம்? தாங்கள் குடியிருந்த வீடுபோக அதிகமாக வீடுகள் வைத்திருந்தால் அவற்றை விற்றுக் கொடுத்திருப்பார்கள் என்பதே. வீடுகளை விற்றுக்கொடுத்தவர்கள், மேஜை, நாற்காலி, அடுப்பு, பாத்திரம் போன்றவற்றையுமா விற்றனர்? இல்லையே! தாங்கள் அனுதினமும் பயன்படுத்தாமல் நிரந்தர சொத்துக்களாக வைத்திருந்த நிலங்கள், வீடுகள், காணியாட்சிகள் போன்றவற்றைத்தான் விற்றுக் கொடுத்தனர். இதேவிதமாக விற்றுக் கொடுக்கும்படிதான் அந்த வாலிபனிடமும் இயேசு சொன்னார்.
தங்கள் சொத்துக்களை விற்றுக் கொடுத்த ஆதித்திருச்சபையார், அவற்றை எல்லோருமாக சேர்ந்து அனுபவித்தனர். எனவே இருப்பவன், இல்லாதவன் என்ற வேறுபாடு அவர்களிடையே அகன்று சமநிலை உண்டானது. இந்த சமநிலை உண்டாகவேண்டுமென்பதுதான் இயேசுவின் நோக்கமும். மற்றபடி உடுத்தின உடை தவிர வேறெதையும் நாம் பயன்படுத்தக்கூடாது என்பது இயேசுவின் எண்ணமல்ல/நோக்கமல்ல.
இப்போதுகூட ஒருமனமுள்ளவர்களாக நாம் நம்முடையதை விற்று, நாமெல்லோரும் சரிசமமாக அனுபவித்துக்கொள்ள தடையெதுவுமில்லை. ஆனால் நமக்குள் ஒருமனம் வரவேண்டுமே!
எல்லாவற்றையும் அனுபவிக்க எனக்கு அதிகாரம் உண்டு என்றே பவுல் சொல்கிறார். ஆனால் எல்லாம் தகுதியாயிராது என்றும் சொல்கிறார். இதன் அர்த்தமென்ன? தகுதியான எதையும் நாம் அனுபவித்துக்கொள்ளலாம் என்பதே. ஏதேனும் ஒரு பொருள் வேதவசனத்தின்படி தகுதியற்றதாக இருந்தால் அவற்றை நாம் விலக்கினால் போதுமானது. தகுதியானவற்றை நம் உடைமைகளாக்கியோ அல்லது எல்லோருக்கும் பொதுவாக வைத்தோ நாம் அனுபவித்துக்கொள்ளலாம் என்பதே வேதாகமம் காட்டும் நடைமுறை.
மிக எளிமையான அர்த்தத்தில் இயேசு சொன்ன ஒரு கட்டளையை, கடினமான அர்த்தத்தில் புரிந்துகொண்டு, அதற்கு விளக்கம் கொடுக்கும்படி சம்பந்தமில்லாத வசனங்களை மேற்கோள் காட்டி, இப்படித்தான் நடக்கவேண்டும் என்கிறீர்கள்.
இவ்வுலகத்தில் நமக்கு உபத்திரவம் உண்டு என்பது மெய்தான். ஆனால் நம்மை நாமே வெறுமையாக்கி நாம் உபத்திரவப்படவேண்டும் என வேதாகமம் சொல்லவில்லை.
//என்னுடய புரிதல் மிக சுலபமும் நேரடியான பொருள் உள்ளதும் ஆகும். ஆனால் அப்படி வேதம் சொல்லவில்லை என்று தாங்கள் கருதினால் வசனம் எங்கு "உன் வீடு/வாசல்/ கார்/ நிலம் போன்ற வற்றை வைத்துகொண்டு" மற்றவற்றை விற்று தரித்திரருக்கு கொடு என்று சொல்கிறது என்பதை தாங்களே நிரூபிக்க வேண்டும்.//
உனக்குண்டானதை விற்று தரித்திரருக்குக் கொடு என்ற வசனத்தின் அடிப்படையில்தான், ஆதித்திருச்சபையார் தங்களுடையதை விற்று அப்போஸ்தலர் காலடியில் வைத்து அனைவரும் பொதுவாக அனுபவித்தனர் என்கிறீர்கள். ஆனால் ஆதித்திருச்சபையாரிடம் வீடுகள் இருந்தன என்பதை ஆதாரத்தோடு நிரூபித்துள்ளேன். குடியிருக்கும் வீட்டைப் போன்றவைதான் நாம் பயன்படுத்தும் கார் மற்றும் பயிர்செய்யும் நிலமும்.
எனவே நம் பயன்பாட்டுக்குரிய வீடு, நிலம், மற்றும் பொருட்கள் தவிர மற்றவற்றை விற்று தரித்திரருக்குக் கொடுத்தால் போதுமானது என்பதே ஆதித்திருச்சபையாரின் முன்மாதிரி. அதற்கும் மேலாக விற்றுக்கொடுக்க நினைப்பவர்கள் அப்படியே செய்யலாம், அது அவர்களின் விருப்பம்.
anbu57 wrote:மிக எளிமையான அர்த்தத்தில் இயேசு சொன்ன ஒரு கட்டளையை, கடினமான அர்த்தத்தில் புரிந்துகொண்டு, அதற்கு விளக்கம் கொடுக்கும்படி சம்பந்தமில்லாத வசனங்களை மேற்கோள் காட்டி, இப்படித்தான் நடக்கவேண்டும் என்கிறீர்கள்.
உனக்குண்டானதை விற்று தரித்திரருக்குக் கொடு என்ற வசனத்தின் அடிப்படையில்தான், ஆதித்திருச்சபையார் தங்களுடையதை விற்று அப்போஸ்தலர் காலடியில் வைத்து அனைவரும் பொதுவாக அனுபவித்தனர் என்கிறீர்கள். ஆனால் ஆதித்திருச்சபையாரிடம் வீடுகள் இருந்தன என்பதை ஆதாரத்தோடு நிரூபித்துள்ளேன். குடியிருக்கும் வீட்டைப் போன்றவைதான் நாம் பயன்படுத்தும் கார் மற்றும் பயிர்செய்யும் நிலமும்.
சகோதரர் அவர்களே எல்லாவற்றையும் விற்று கொடுக்கவேண்டும் என்று சொல்லபட்ட கடினமான வசனத்தை மாற்றி தங்களுக்கு ஏற்ப எளிமை ஆ க்கிகொண்டுவிட்டால் அது எழிமையாகதான் தெரியும் அதற்காக இயேசு சொன்னது மாறிவிடுமா? இன்று அநேகர் அப்படிதான் குறுகிய வாசலை லேசாக விரித்து விசாலமாக்கிகொண்டு கிறிஸ்த் தவம் என்பதை லேசாக்கிவிட்டார்கள்.
இயேசு மிக தெளிவாக சொல்லிவிட்டார்:
மாற்கு 10:21 நீ போய், உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்று, தரித்திரருக்குக் கொடு, ....... பின்பு சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றிவா என்றார்.
"உண்டானவைகளையெல்லாம்" என்ற வார்த்தைக்கு பொருள் நமக்கு தெரியும் எல்லாம் என்றால் அதில் எல்லாமே அடங்கிவிடும்.அதக்கு ஏற்ப சீஷர்களை இயேசு அழைத்தபோது அவர்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு அவருக்கு பின் சென்றார்கள்
லூக்கா 5:11 அவர்கள் படவுகளைக் கரையிலே கொண்டுபோய் நிறுத்தி, எல்லாவற்றையும் விட்டு, அவருக்குப் பின்சென்றார்கள்
மத்தேயு 19:27அப்பொழுது பேதுரு அவரை நோக்கி: இதோ, நாங்கள் எல்லாவற்றையும் விட்டு, உம்மைப்பின்பற்றினோமே
அவ்ர்களின் சிலர் பின்னாளில் மனைவிகளை உடையவர்களாக இருந்திருக்கலாம் அதற்க்கு "மனைவியை கண்டடைகிறவன் நன்மையை கண்டடைகிறான்" என்ற வசனத்தின் அடிப்படையிலோ அல்லது வேறு ஒரு வசனத்தின் அடிப்படையிலோ அவர்களுக்கு அது அனுமதிக்க பட்டிருக்கலாம். அதைதான் நானும் சொல்கிறேன்.
அதேபோல் ஆதி சபையார் நிலங்களைவிற்று அப்போஸ்த்தலர் பாதத்தில் வைத்தார்கள் என்று வேதம் சொல்கிறது. இங்கு சிலபேர் நிலங்களையும் எல்லா பொருட்களையும் விற்காமல் தங்களுக்கென்று சில பொருட்களையும் வீடுகளையும் வைத்திருந்தால் அவர்கள் அனனியா சபீறாள் போல இயேசுவின் வார்த்தையை சரியாக பின்பற்றாதவர்கள் என்றுதான் பொருள் கொள்ள முடியுமே யன்றி அவர்களை நாம் முன்னுதாரணமாக எடுத்துகொள்ள முடியாது.
அப்போஸ்தலர் 2:44விசுவாசிகளெல்லாரும் ஒருமித்திருந்து, சகலத்தையும் பொதுவாய் வைத்து அநுபவித்தார்கள்.
அப்போஸ்தலர் 4:32விசுவாசிகளாகிய திரளான கூட்டத்தார் ஒரே இருதயமும் ஒரே மனமுமுள்ளவர்களாயிருந்தார்கள். ஒருவனாகிலும் தனக்குள்ளவைகளில் ஒன்றையும் தன்னுடையதென்று சொல்லவில்லை; சகலமும் அவர்களுக்குப் பொதுவாயிருந்தது
சகலமும் என்றால் எல்லாம் என்றும் பொருள்படும். அநேகர் எல்லாவற்றையும் பொதுவாகவே வைத்து அனுபவித்தனர். சிலர் தங்களுக்கென்று சிலவற்றை மறைத்து வைத்திருக்கலாம், அவர்கள்
இயேசு சொன்ன வார்த்தையை சரியாக கேட்காதவர்கள். மேலும் இங்கு எல்லாமே பொதுவாக இருக்கும் பட்சத்தில் அது நமக்குண்டானது என்று தனியாக சொல்லிவிட முடியாது.
மேலும் வாடகைவீடு அல்லது வாடகை பொருட்கள் அல்லது கம்பனி கொடுக்கும் வண்டி போன்றவைகள் நமக்குண்டானது அல்ல! அவைகளை நாம் நினைத்தாலும் விற்க முடியாது, எனவே அப்படி பட்டவைகளை வைத்திருப்பது இயேசுவின் வார்த்தையின்படி தவறில்லை. அனால் நம்முடய பெயரில் நமக்கென்று தனிப்பட்ட முறயில் வைத்திருக்கும் எல்லாமே "உனக்குண்டானவைகளை எல்லாம்" என்ற வார்த்தையில் அடங்கிவிடும். நமக்கு வசதியில்லை வாடகைக்கு எடுக்க விருப்பம்இல்லை என்பதற்காக இயேசுவின் வார்த்தைகளை நாம் மாற்றிக்கொள்ள முடியாது!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
//மேலும் வாடகைவீடு அல்லது வாடகை பொருட்கள் அல்லது கம்பனி கொடுக்கும் வண்டி போன்றவைகள் நமக்குண்டானது அல்ல! அவைகளை நாம் நினைத்தாலும் விற்க முடியாது, எனவே அப்படிப்பட்டவைகளை வைத்திருப்பது இயேசுவின் வார்த்தையின்படி தவறில்லை.//
இயேசுவின் மாற்கு 10:21 வசனத்துக்கான விளக்கத்தை நன்கு புரிந்துகொண்டேன் சகோதரரே!
சொந்தமாக ஒரேயொரு குடிசை வீடு வைத்திருந்தால் அது மாற்கு 10:21-ன்படி தவறு; ஆனால் மாதம் ரூ.5000 வாடகைக்கு பங்களா வீட்டில் குடியிருந்தால் தவறில்லை.
சொந்தமாக ஒரு சைக்கிள் வைத்திருந்தால் அது மாற்கு 10:21-ன்படி தவறு; ஆனால் தினசரி ரூ.500 வாடகை கொடுத்து வாடகைக் காரில் பயணம் செய்வது தவறல்ல.
சொந்தமாக சிறிய கம்மலும் 2 வளையலும் வைத்திருந்தால் அது மாற்கு 10:21-ன்படி தவறு; ஆனால் ரூ.500 அல்லது அதற்கு மேலே கொடுத்து விரும்பும் நகைகளை ஏராளமாக வாடகைக்கு வாங்கி அணிவதில் தவறில்லை.
சொந்தமாக ஒரு சிறிய ரேடியோ பெட்டி வைத்திருந்தால் அது மாற்கு 10:21-ன்படி தவறு; ஆனால் குடியிருக்கிற வாடகை வீட்டில், ரூ.10000 பெறுமான ஹோம் தியேட்டரை மாதம் ரூ.2000 வாடகை கொடுத்து வாங்கி வைத்து ஜாலியாக இசையை அனுபவிப்பதில் தவறில்லை.
பணம் கொடுத்தால் இவ்வுலகில் வாடகைக்குக் கிடைக்காத பொருள் என ஒன்று இருக்கிறதா என்ன? அணியும் உடை, ஷூ, டை முதல் பயணம் செய்யும் வாகனம் வரை அத்தனையையும் வாடகைக்கு வாங்கி தாராளமாக அனுபவித்துக் கொள்ளலாம்; ஆனால் தப்பிப் தவறி ஒரு குண்டூசியைக்கூட நாம் விலை கொடுத்து வாங்கி சொந்தமாக வைத்திருக்கக்கூடாது. அப்படி வைத்திருந்தால் அது மாற்கு 10:21-ன்படி தவறாகிவிடும். எனவே யாராவது சொந்தமாக குண்டூசி போன்ற பொருட்களை வைத்திருந்தால் அவற்றை உடனடியாக விற்று தரித்திரருக்குக் கொடுத்துவிட்டு, என்னென்ன தேவையாயுள்ளதோ அவற்றையெல்லாம் வாடகைக்கு வாங்கி பயன்படுத்திக்கொள்ளலாம். அப்படிச் செய்தால் போதும், நாம் மாற்கு 10:21-க்குக் கீழ்ப்படிகிறவர்களாகிவிடுவோம்.
அப்புறம் என்ன? நித்திய ஜீவன் நமக்கு நிச்சயம். அதுவும் இயேசுவின் வார்த்தைகளை இப்படியெல்லாம் கைக்கொள்வதால், யோவான் 8:51-ன்படி என்றென்றைக்கும் மரணத்தைக் காணாதிருப்பதற்குக்கூட வாய்ப்புண்டு.
-- Edited by anbu57 on Wednesday 23rd of November 2011 09:14:22 PM