//நான் பிறரை மன்னிப்பதுகூட அவருடைய தயவால்தான். இரக்கம் என்பது தேவனின் பிரதான குணம். அவர் எனக்கு ஒரு நல்ல இரக்கமுள்ள இருதயத்தை கொடுக்காவிட்டால் என்னால் ஒருவரைக்கூட மன்னிக்கமுடியாது. எனவே நான் மன்னித்தாலும் அது தேவனின் தயாள குணத்தைதான் காட்டுமேயன்றி நான் அங்கு ஒன்றுமில்லை.//
தேவன் தான் ஒருவனுக்கு நல்ல இரக்கமுள்ள இருதயத்தைக் கொடுக்கிறாரெனில், இயேசு ஏன் இப்படியாகப் போதித்தார்?
லூக்கா 6:36 உங்கள் பிதா இரக்கமுள்ளவராயிருக்கிறதுபோல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாயிருங்கள்.
உங்களது கூற்றுக்கள் வசனங்களுக்கு இசைவாக இல்லை. தேவன் தான் ஒருவனுக்கு இரக்கமுள்ள இருதயத்தைக் கொடுக்கிறாரெனில், அந்த இருதயத்தை ஏன் ஒருவருக்குக் கொடுத்து மற்றவருக்குக் கொடாதிருக்கிறார்? தேவன் பட்சபாதமுள்ளவரா?
தேவன் தான் ஒருவனுக்கு இரக்கமுள்ள இருதயத்தைக் கொடுக்கிறாரெனில், எல்லோருக்கும் அதைக் கொடுக்கும்படி ஜெபித்தால் போதுமே! அதைச் செய்யாமல், பிதாவைப் போல் இரக்கமுள்ளவர்களாயிருங்கள் என இயேசு ஏன் போதித்தார்?
//இங்கு எந்த இடத்திலும் அந்த ஸ்திரி தான் பாவத்தை உணர்ந்ததாகவோ அல்லது இயேசுவிடம் மன்னிப்பு கேட்டதாகவோ எந்த ஒரு வசனமும் இல்லை. ஆகிவும் இயேசு அவளை தயவோடு மன்னிக்கிறார்.//
ஆம், சரிதான். ஆனால் எந்த இடத்திலும் அந்த ஸ்திரி தன் பாவத்தை உணராததாகவோ அல்லது இயேசுவிடம் அவள் மன்னிப்பு கேட்காததாகவோகூட எந்த வசனமும் சொல்லவில்லை. ஆனால், மற்றொரு வசனம் இப்படியாகச் சொல்கிறது.
1 யோவான் 1:9 நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.
இவ்வசனம் பொய்யல்ல. எனவே இதன் அடிப்படையில் பார்த்தால், அந்த ஸ்திரீ தன் பாவத்தை உணர்ந்ததால்தான் இயேசு அவளை மன்னித்திருப்பார்.
பாவத்தை உணராதவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படும் என எந்த வசனமும் கூறவில்லை. பாவத்தை உணராதவர்களுக்கும் மன்னிப்பு எனும் உங்கள் கருத்து, மற்றவர்களை இடறச் செய்யும் என்பதை அறியுங்கள்.
பாவத்தை உணராதவர்களுக்கும் மன்னிப்பு எனும் உங்கள் கருத்துக்கு ஆதரவான நேரடி வசனத்தைச் சொல்லுங்கள். அப்படி ஒரு வசனத்தை உங்களால் தரமுடியாது என்றே நான் கருதுகிறேன்.
மற்றவர்களுடைய எல்லா பாவங்களையும் நாம் மன்னிக்கவேண்டும் என்பதற்கு நேரடி ஆதாரமாக நீங்கள் தந்துள்ள 2 வசனங்கள்:
மத்தேயு 6:14 மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார்.
யோவான் 20:23 எவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படும், எவர்களுடைய பாவங்களை மன்னியாதிருக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதிருக்கும் என்றார்.
இவ்விரு வசனங்களில் முதல் வசனம், தனிப்பட்ட முறையில் பிறர் நமக்கு விரோதமாக செய்கிற தப்பிதங்களை மட்டுமே குறிக்கும் என்பதை தகுந்த முறையில் ஏற்கனவே நான் கூறியுள்ளேன்; அதற்கு நீங்கள் பதில் எதுவும் தரவில்லை.
2-வது வசனத்தில் ஒரு மாபெரும் பொறுப்போடு கூடிய அதிகாரத்தை தமது மெய்யான சீஷர்களுக்கு இயேசு வழங்கியுள்ளார். அந்த அதிகாரத்தை மிகுந்த பொறுப்புடன் மட்டுமே பயன்படுத்த வேண்டுமேயொழிய, ஏனோதானோவென நம் இஷ்டம்போல் பயன்படுத்தக்கூடாது.
இயேசு தந்த அதிகாரத்தில், பிறரது பாவங்களை மன்னிப்பது மட்டுமல்ல, மன்னியாதிருப்பதும் அடங்கியுள்ளது என ஏற்கனவே நான் சுட்டிக்காட்டியுள்ளேன்.
இயேசுவின் அதிகாரம், சிலரது பாவங்களை மன்னிக்கவும் சொல்கிறது; சிலரது பாவங்களை மன்னியாதிருக்கவும் சொல்கிறது. எவர்களின் பாவங்களை மன்னிப்பது, எவர்களின் பாவங்களை மன்னியாதிருப்பதை என்பதை நிதானித்து அறிந்து செயல்படும் மாபெரும் பொறுப்பு, அந்த அதிகாரத்தைப் பெற்றவர்களுக்கு உள்ளது. ஆனால் அந்த அதிகாரத்தைக் கையிலெடுத்துள்ள நீங்களோ, சரட்டுமேனிக்கு எல்லோரது எல்லா பாவங்களையும் மன்னிப்பேன் என்கிறீர்கள். இதிலிருந்தே தெரிகிறது, அந்த அதிகாரத்தைப் பெற நீங்கள் தகுதியற்றவர் என்பது.
இதற்குமேல் நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. உங்கள் விருப்பப்படி செய்யுங்கள்.
ஆனால், மற்றவர்களின் எல்லா பாவங்களையும் மன்னியாதவர்களை இரக்கமற்றவர்கள் என விமர்சிக்காதீர்கள். அப்படி விமர்சிப்பதாக இருந்தால், அதற்கான தகுந்த வசன ஆதாரத்தைத் தந்துவிட்டு விமர்சியுங்கள்.
மற்றவர்கள் நமக்கு விரோதமாக தனிப்பட்ட முறையில் செய்கிற தப்பிதங்களை மட்டுமே நாம் மன்னிக்க வேண்டும் என மத்தேயு 6:14 மற்றும் 18:35 வசனங்களில் இயேசு சொல்கிறார். அதைத்தான் நாம் செய்யவேண்டும், போதிக்கவும் வேண்டும். எழுதப்பட்டதற்கு மிஞ்சி செயல்பட்டு உங்களை மிஞ்சின நீதிமானாகக் காட்ட வேண்டாம் என மீண்டும் மீண்டுமாகக் கேட்டுக் கொள்கிறேன்.
பிரசங்கி 7:16 மிஞ்சின நீதிமானாயிராதே, உன்னை அதிக ஞானியுமாக்காதே; உன்னை நீ ஏன் கெடுத்துக்கொள்ளவேண்டும்?
இதனால் சகல ஜனங்களுக்கும் தெரிவித்துகோள்வது என்ன வென்றால்,
பூகம்பத்தில் பாதிக்கபட்டு துன்பங்கள் அனுபவித்த ஜனங்களுக்கு இரக்கபட்ட காரணத்திற்க்காகவும் எல்லா ஜனங்களையும் நானும் மன்னித்து தேவனும் மன்னிக்கவேண்டும்என்று விண்ணப்பிக்கும் காரணத்துக்காகவும் சகோ. அன்பு அவர்களின் நீதிமன்றம் நீண்ட விசாரணை மற்றும் அனேக குறுக்கு கேள்விகளுக்கு பிறகு என்னை "மிஞ்சிய நீதிமான்" என்றும் "யார் யாரை மன்னிக்க வேண்டும் என்று தெரியாத தகுதியற்றவன்" என்றும் தீர்ப்பு கூறிவிட்டது. என்பதை வருத்தத்துடன் தெரிவித்துகொள்கிறேன்.
தேவனின் இரக்கங்கள் முடிவில்லாதது என்றும் அப்படிபட்ட அவருடைய முடிவில்லா இரக்கங்களினாலும் கிருபையினாலும் மட்டுமே நாம் இந்நாள்வரை நிர்மூலமாகாமல் இருக்கிறோம் என்று வேதம் சொல்கிறது.
புலம்பல் 3:22நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை.
அப்படிப்பட்ட முடிவில்லாஇரக்கத்துடன் கூடிய தேவ அன்பானது பரிசுத்த ஆவியின் மூலம் நம்முடய இருதயங்களில் ஊற்றப்பட்டு இருப்பதால் நம்மிடமும் அதேபோன்ற இரக்கமும் அன்பும் இருப்பதில் எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை.
ரோமர் 5:5நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது.
அதுபோன்ற ஒரு இரக்கம் இல்லாதவர்கள் மட்டுமே தாங்கள் சரியான ஆவியை பெற்றிருக்கிறோமா என்பதை ஒரு முறைக்கு இருமுறை சரிபார்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது. ஏனெனில் நாம் வாழ்வது புதிய ஏற்பாட்டு காலம்! சத்துருவையே மன்னித்து சிநேகிக்க வேண்டுமானால் மற்றவர்களை மன்னிக்க வேண்டியது எவ்வளவு அவசியம் என்பது சிலருக்கு புரியாமல் இருக்கலாம் ஆனால் இரக்கமும் மன்னிப்பும் என்னுடய இரத்தத்தில் ஊறிப்போன ஓன்று! எனவே என்னுடய நிலையில் எந்த மாற்றமும் இல்லை!
ஆண்டவரின் உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரும்வரை பொறுத்திருந்து பார்க்கலாம்.
-- Edited by SUNDAR on Thursday 17th of November 2011 03:55:05 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
இதனால் சகல ஜனங்களுக்கும் தெரிவித்துகோள்வது என்ன வென்றால்,
திரு.சுந்தர் அவர்களே,
சொன்னால் உங்களுக்கு கோபம் வருகிறதே என்று அமைதியாக இருக்கிறோம், உங்களுடைய எழுத்துக்களிலிருந்து தேவனுடைய அளவற்ற இரக்கமும் மன்னிக்கும் தன்மையும் வெளிப்படுவதைக் காட்டிலும் சுயபெருமையும் சுயநீதியுமே வெளிப்படுகிறது.
யார் மீதும் கசப்போ கோபமோ விரோதமோ இல்லையென்று நீங்கள் சொல்லுவதும் பொய்... ஏனெனில் உங்களுக்கு மாற்று கருத்தை எதிர்கொள்ளும் தைரியமே இல்லாத போது சர்வ வல்ல தேவனின் மன்னிப்பு அன்பு இரக்கம் போன்ற பெரிய பெரிய காரியங்களிலெல்லாம் பயிற்சி இருப்பது போலத் தோன்றவில்லை.அவையனைத்தும் விண்ணகக் காரியங்களல்லவா... நீங்களோ உலகப் பிரகாரமான காரியங்களில் தேவ காரியங்களை சம்பந்தப்படுத்திக்கொண்டிருக்கிறீர்கள்.
நீதிபதி நீதிமன்றம் என்றாலே அங்கு விசாரணையும் தீர்ப்பும் இருக்கும், வேண்டாம் விட்டுடுங்க சார்..!
(இறுதியாக ஒரே ஒரு ஜோக்... திகார் ஜெயிலில் வாடிக்கொண்டிருக்கும் ராஸா உங்களைத் தேடுகிறாராம்,மன்னிக்க.. )
சொன்னால் உங்களுக்கு கோபம் வருகிறதே என்று அமைதியாக இருக்கிறோம், உங்களுடைய எழுத்துக்களிலிருந்து தேவனுடைய அளவற்ற இரக்கமும் மன்னிக்கும் தன்மையும் வெளிப்படுவதைக் காட்டிலும் சுயபெருமையும் சுயநீதியுமே வெளிப்படுகிறது.
யார் மீதும் கசப்போ கோபமோ விரோதமோ இல்லையென்று நீங்கள் சொல்லுவதும் பொய்... ஏனெனில் உங்களுக்கு மாற்று கருத்தை எதிர்கொள்ளும் தைரியமே இல்லாத போது சர்வ வல்ல தேவனின் மன்னிப்பு அன்பு இரக்கம் போன்ற பெரிய பெரிய காரியங்களிலெல்லாம் பயிற்சி இருப்பதுபோலத் தோன்றவில்லை.அவையனைத்தும் விண்ணகக் காரியங்களல்லவா... நீங்களோ உலகப் பிரகாரமான காரியங்களில் தேவ காரியங்களை சம்பந்தப்படுத்திக்கொண்டிருக்கிறீர்கள்.
நீதிபதி நீதிமன்றம் என்றாலே அங்கு விசாரணையும் தீர்ப்பும் இருக்கும், வேண்டாம் விட்டுடுங்க சார்..!
(இறுதியாக ஒரே ஒரு ஜோக்... திகார் ஜெயிலில் வாடிக்கொண்டிருக்கும் ராஸா உங்களைத் தேடுகிறாராம்,மன்னிக்க.. )
HMV அவர்களே இப்படியெலாம் ஏறுக்கு மாறாக இர்ரிடேட்பண்ணி எழுதினால் நான் கோபபட்டு விடுவேன் உங்கள் மேல் கசப்பாகி விடுவேன் என்று எண்ணிவிட வேண்டாம். நான் எப்படிபட்டவன் என்பது என் தேவனுக்கு தெரிந்தால் போதும் உம்போன்ற ஆட்களுக்கு அது தெரியவேண்டிய அவசியம் இல்லை. உங்களால் என்னை தெரிந்து கொள்ளவும் முடியாது. உம்முள் இருந்து என்னை அசைக்க நினைப்பது யாரென்பது எனக்கு தெரியும். அவனால் என்னை அசைக்க முடியாது. உங்களையும் நான் மன்னிக்கிறேன் கர்த்தர் தம்முடைய சித்தபடி உம்மை நடத்த வாழ்த்துகிறேன்.
HMV Wrote:////(இறுதியாக ஒரே ஒரு ஜோக்... திகார் ஜெயிலில் வாடிக்கொண்டிருக்கும் ராஸா உங்களைத் தேடுகிறாராம்,மன்னிக்க////
உங்களுக்கு திடீர் என்று ராசா நியாபகத்துக்கு வருவார் திடீர் என்று மைனர் குஞ்சு நியாபகத்துக்கு வருவார் இன்னும் வேறு யார்யாரெல்லாம் நியாபகத்தில் இருக்கிறார்களோ யார் அறிவர்? (அவரவருக்கு அவரவர்கள் தொடர்புடயவர்கள்தானே நியாபகத்துக்கு வரமுடியும்)
இதுவரை ஒரு விவாதத்தில் கூட உருப்படியாக பங்கெடுக்காத நீங்கள் ஏதோ பெரிய விவாதம் புரிந்துவிட்டமாதிரி நான் தோற்றுப்போன மாதிரி என்னெனவோ எழுதுகிறீர். "நேருக்குநேர் நின்று வாதிட எனக்கு ஞானம் இல்லை" என்று ஒரு பதிவில் சொன்னது நீர்தான். உங்கள் போன்றவர்களிடம் விவாதிப்பதற்கு என்னிடம் ஒன்றுமில்லை!
-- Edited by SUNDAR on Thursday 17th of November 2011 09:32:14 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
ஏதேதோ பேசுகிறீர்களே ஐயா...ஒன்றுமே புரியவில்லை;நான் எப்போதாவது யாரையாவது விவாதத்துக்கு அழைத்தேனா, சொல்லுங்கள்; நீங்கள் எழுதுவதைக் குறித்து என்னுடைய கருத்தை சொல்லுகிறேன், அதுகூட உங்களுக்கு வெறுப்பாக இருக்கிறது; நீங்கள் என்னை அவன் இவன் என்று திட்டவேண்டுமானால் தாராளமாக திட்டலாம், ஐயா...ஆனால் எனக்குள் இன்னொருத்தன் இருப்பதாகவும் அவனைத் திட்டுவதாகவும் மாய்மாலம் செய்யாதீங்க, சரியா...நான் உங்களிடம் இதுவரை எந்த கேள்வியும் கேட்கவில்லை, விவாதிக்கவும் அழைக்கவில்லை; எனக்குள் நான் மட்டுமே இருக்கிறேன், இறையருளை நம்புகிறேன், வேறென்ன வேண்டும் உங்களுக்கு..? ச்சும்மாவேனும் உங்களிடம் முழுக்க முழுக்க கடவுள் ஆவி பொங்கி வழிவதுபோலவும் மற்றவர்களிடம் இன்னொருத்தன் இருப்பது போலவும் கதை பண்ண வேண்டாமைய்யா.... பார்க்கிற மனிதர்களை மனிதர்களாக பார்க்காமல் அவர்களை சாத்தானின் தூதர்களாகப் பார்க்கவைக்கும் சாத்தானின் ஆவியினால் நீங்கள் பீடிக்கப்பட்டிருப்பதை மறைக்கவே எதிராளிகளிடம் இன்னொருத்தன் இருப்பதாக பழிபோடுகிறீர்கள் என்கிறேன்;இது நட்புக்கே இழுக்காகும்; எல்லாரிடத்திலும் எல்லாமும் எப்போதும் இருக்கலாம் வந்துபோகலாம் இல்லாமலும் இருக்கலாம் முழுவதும் தெய்வப்பிறவி யாருமில்லை முழுவதும் சாத்தானின் கூட்டம் யாருமில்லை;வேதத்தை வைத்து வாதிடும் அளவுக்கு நீங்கள் வேதத்தை மாத்திரமே சார்ந்திருப்பவர் அல்லவே.? எனக்கோ 23-ம் சங்கீதத்தைத் தவிர வேறு எதுவும் தெரியாது, நான் என்ன செய்யட்டும்..? ஆமா,உங்களுக்கு 23 ம் சங்கீதம் தெரியுமா, ஐயா..? நீங்க மிரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதைப் போல யாரையோ மனதில் வைத்துக்கொண்டு என்னை எகத்தாளமும் பரியாசமும் செய்கிறீர்கள்... நான் கிறிஸ்தவர்கள் பண்ணும் கூத்தையெல்லாம் கண்டு சலித்துப்போய் இருப்பவன், என்னை சபிக்காதீர்கள், ஐயா..!
அதே நேரத்தில் ...சாத்தனை மாத்திரம் நான் வெறுக்கிறேன். அவன் தலையை தேவன் விரைவில் நசுக்குவார் என்று எதிர்பாக்கிறேன்.//
தடாலடியாகக் கவிழ்வதும் படாரென எழுந்து சீறுவதும் திரு.சுந்தர் அவர்களுக்கு கைவந்த கலை போலும்..! விவாதத்தின் மேற்கண்ட பகுதியிலிருந்து எனக்கு தோன்றியதை எழுதுகிறேன்.
முதலாவது எந்தவொரு நிகழ்ச்சியும் இறைவனின் எச்சரிப்பாகவும் திருஷ்டாந்தமாகவுமே இருக்கிறது என்பதை சுந்தர் அறியாதிருப்பது ஒரு கொடுமை என்றால் சாத்தானின் தலை இன்னும் நசுக்கப்படவில்லை என்று அவர் நினைப்பது மாபெரும் கொடுமை... என்ன வசனம் தெரிந்து என்ன, அதற்குரிய வெளிச்சம் இல்லையே..?
லூக்கா
13 அதிகாரம்
1. பிலாத்து சில கலிலேயருடைய இரத்தத்தை அவர்களுடைய பலிகளோடே கலந்திருந்தான்; அந்த வேளையிலே அங்கே இருந்தவர்களில் சிலர் அந்தச்செய்தியை அவருக்கு அறிவித்தார்கள்.
2. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: அந்தக் கலிலேயருக்கு அப்படிப்பட்டவைகள் சம்பவித்ததினாலே, மற்ற எல்லாக் கலிலேயரைப் பார்க்கிலும் அவர்கள் பாவிகளாயிருந்தார்களென்று நினைக்கிறீர்களோ?
3. அப்படியல்லவென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லாரும் அப்படியே கெட்டுப்போவீர்கள்.
4. சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டுப்பேரைக் கொன்றதே; எருசலேமில் குடியிருக்கிற மனுஷரெல்லாரிலும் அவர்கள் குற்றவாளிகளாயிருந்தார்களென்று நினைக்கிறீர்களோ?
5. அப்படியல்லவென்று உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லாரும் அப்படியே கெட்டுப்போவீர்கள் என்றார்.
சாத்தானின் தலை என்பது ஆளுமை, அதாவது பாவம் மற்றும் மரணத்தின் மீதான அதிகாரம் எனில் அத்ன் கொடூரத்திலிருந்து தப்பிக்க அதன் மீது அதிகாரம் உடையவராக விளங்கும் இயேசுகிறிஸ்துவில் ஒருவன் தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்ளவேண்டும். ஏதோ எனக்குத் தெரிந்ததை சொன்னேன், இதுக்கெல்லாம் வசனம் கேட்காதீங்க ஐயா..!
அன்பு அவர்கள் இத்தனை நிதானமாகவும் பொறுமையாகவும் எழுதுவதையே ஏற்காமல் அவரையே எடுத்தெறிந்து பேசும் உங்களிடம் மாட்டி தப்பிக்கமுடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. நீங்கள் இதுபோன்ற விவாதங்களை வளர்க்கும் நோக்கமே புதுப்புது தலைப்புகளில் சர்ச்சைக்குரிய காரியங்களை எழுதுவதற்காகவே என்பதை இதோ கண்டுகொண்டேன்;நீங்கள் ஒரு கட்டுரையின் பாதிப்பில் பல நூறு கட்டுரைகளுக்கான சர்ச்சைகளைக் கண்டுபிடிக்கிறீர்கள்; இந்த வகையில் நீங்களே வாதநோயினால் பீடிக்கப்பட்ட சாத்தானின் தூதுவனோ என்று ஐயப்படுகிறேன்; நான் உங்களை அவ்வாறு நியாயந்தீர்க்கவில்லை ஆனால் அதுபோல- அந்த வண்ணமாக- அந்த சாயலில் எனக்குத் தோன்றுகிறது, அவ்வளவு தான் ஒருவேளை இது தவறாகக்கூட இருக்கலாம், அதனால் என்ன அதற்கும் ஒரு மன்னிப்பு கேட்டால் போகிறது,என்ன நான் சொல்றது சரிதானே எட்வின்..?
சகோதரர் HMV அவர்களே நீங்கள் எப்பொழுது எப்தாவைபற்றி புதிய ஏற்ப்பாட்டில் எதுவுமே சொல்லப்பட வில்லை என்று அடித்து சொல்லி விட்டு பின்னர் வசனம் இருக்கிறது என்றவுடன் அது அதற்கில்லை
இதற்க்கு என்பதுபோல் மாற்றிக்கொண்டு சொன்னீர்களோ அப்பொழுதே உங்களுக்கு போதிய வேத அறிவோ அல்லது வெளிபாடோ இரண்டும்
இல்லை என்பதை நான் அறிந்து கொண்டேன். நீங்களும் எனக்கு ஞானம் இல்லை என்று ஒத்துக் கொண்டு அதையே சொல்லியிருக் கிறீர்கள். ஆனால் அடுத்த வர்களை குறை கூறுவதில்மட்டும் அதிக ஞானம் இருபது நன்றாகவே தெரிகிறது.
விவாதத்துக்கு நீங்கள் யாரையும் அழைக்கவும் இல்லை அதற்க்கு தேவையான ஞானமும் உங்களிடம் இல்லை என்பதை ஒத்துகொண்ட பிறகு, குறை கண்டுபிடிக்க மட்டும் ஞானம் எங்கிருந்து வருகிறது அல்லது யார் கொடுக்கிறார் என்பது தெரியவில்லை
இங்கும் கூட, தேவன் சத்த்தானை நசுக்குவார் என்பதை நான் பவுல் சொன்ன வசன அடிப்படையிலேயே சொல்லியிருக்கிறேன்.
ரோமர் 16:20சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்ச் சாத்தானை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப்போடுவார்.
இந்த சம்பவம் இனி நடக்கவேண்டிய ஒன்றாக இருக்கிறது எனவேதான் பவுல் அங்கு எழுதியிருக்கிறார். அதைபற்றிய நான் எழுதினேன்.
HMV//அன்பு அவர்கள் இத்தனை நிதானமாகவும் பொறுமையாகவும் எழுதுவதையே ஏற்காமல் அவரையே எடுத்தெறிந்து பேசும் உங்களிடம் மாட்டி தப்பிக்கமுடியும் என்று எனக்குத் தோன்றவில்லை.///
சகோ. அன்பு பொறுமையாகதான் எழுதுகிறார் ஆனால் அவர் கேட்கும் எந்த கேள்விக்கும் நான் நேரடி வசன ஆதாரம் கொடுத்தாலும் அதை ஏற்க்க அவர் தயாராக இல்லை. "அது இதற்காக சொல்லப்படவில்லை" "அவள் மன்னிப்பு கேட்டிருப்பாள்" என்பது போன்ற அவரது சில மறுப்புகளை தெரிவித்து, புதிதாக ஒரு நான்கு கேள்வியை எழுப்புவார். எல்லாவற்றிக்கும் பதில் சொல்ல எனக்கு நேரமும் இல்லை வசதியும் இல்லை.
"கஷ்டப்படும் எல்லா மனுஷன் மேலும் இரக்கபடுவது தவறு" என்று தீர்மானிக்கும் மனிதாபிமானத்தை தள்ளி மதத்தை பெரிது படுத்து மனுஷ கூட்டங்கள் பெருகிவிட்ட நிலையில் என்னுடய கருத்து எங்கும் எடுபடாது.
நான் அவரை எங்கும் எடுத்தெறிந்து பேசவில்லை கோபபட்டு ஒரு வார்த்தையும் எழுதவில்லை. முதலில் உண்மையை எழுதி பழகுங்கள். உங்கள் கம்பனியார் பயன்படுத்து போன்ற மோசமான வார்த்தை எதாவது இந்த தளத்தில் நான் எழுதியிருந்தால் சுட்டி காட்டுங்கள் உடனே நீக்கிவிடுகிறேன்.
நீங்கள் மாற்று பெயரில் ஒளிந்துகொண்டு எழுதும் சகோ. சில்சாம் இல்லை என்பதை கர்த்தருக்குள் உறுதியாக சொன்னால்மட்டுமே இனி உங்கள் பதிவு அனுமதிக்கப்படும். முகாந்திரமில்லாமல் பொத்தம் பொதுவாக எழுதி குழப்பத்தை விளைவித்தால் உங்கள் பயனர் பெயர் முடக்கப்படும்.
-- Edited by SUNDAR on Friday 18th of November 2011 11:28:57 AM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
கஷ்டப்படும் எல்லா மனுஷன் மேலும் இரக்கபடுவது தவறு" என்று தீர்மானிக்கும் மனிதாபிமானத்தை தள்ளி மதத்தை பெரிது படுத்து மனுஷ கூட்டங்கள் பெருகிவிட்ட நிலையில் என்னுடய கருத்து எங்கும் எடுபடாது.
நான் அவரை எங்கும் எடுத்தெறிந்து பேசவில்லை கோபபட்டு ஒரு வார்த்தையும் எழுதவில்லை. முதலில் உண்மையை எழுதி பழகுங்கள். உங்கள் கம்பனியார் பயன்படுத்து போன்ற மோசமான வார்த்தை எதாவது இந்த தளத்தில் நான் எழுதியிருந்தால் சுட்டி காட்டுங்கள் உடனே நீக்கிவிடுகிறேன்.
10. வேதப்புரட்டனாயிருக்கிற ஒருவனுக்கு நீ இரண்டொருதரம் புத்தி சொன்னபின்பு அவனைவிட்டு விலகு.
11. அப்படிப்பட்டவன் நிலை தவறி, தன்னிலேதானே ஆக்கினைத்தீர்ப்புடையவனாய்ப் பாவஞ்செய்கிறவனென்று
அறிந்திருக்கிறாயே.
சகோதரர் சுந்தர் அவர்களே மேலே வசனம் சொல்வது போல
நீங்கள் அவர்களுக்கு வசன ஆதாரத்துடன் சொல்லிவிட்டீர்கள்
அவர்கள் யார் என்று இப்பொழுது உங்களுக்கு தெரிந்து இருக்கும் என்று நினைக்கின்றேன்
நீங்கள் நேற்று இரவு தேவனே இந்த காரியங்களை எனக்கு சொன்னார் என்று 1000 ௦௦ முறை அவர்களுக்கு அழுது
சொன்னாலும் அவர்கள் ஏற்றுகொள்ள மாட்டார்கள் ஏனென்றால் அவர்கள் வேதத்தை மாம்ச பிரகாரமாக புரட்டி பார்த்து கிழித்தவர்கள் எனவே நீங்கள் தேவையில்லாமல் உங்கள் எனர்ஜியை வேஸ்ட் பண்ணுகின்றீர்கள்
சகோ : சுந்தர் அவர்களே நீங்கள் இவர்களுக்கு சொன்ன ஒரு காரியம் கூட தேவன் பார்வையில் தவறாக இருக்காது ஆனால் இவர்களுக்கு
நீங்கள் சொல்லி கொண்டே இருப்பது தான் தேவனுடைய பார்வையில் தவறாக இருக்கும் என்று நான் எண்ணுகின்றேன்
ஞானவானை கடிந்து கொண்டு அவனுக்கு புத்தி சொல்லுங்கள்
மூடனை கடிந்து கொண்டு நீங்கள் கரை பட்டு போகாதிருங்கள்...............
-- Edited by EDWIN SUDHAKAR on Friday 18th of November 2011 11:43:09 AM
__________________
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)
சகோதரர் அன்பு அவர்களே பாவத்துக்கு முளுகாரணமே சாத்தான் என்பவன் தான் என்பதை எனக்கு தெரிந்த பாணியில் விளக்குகின்றேன் நீங்கள் ஏற்று கொள்ள மனதாய் இருந்தால் ஏற்றுகொள்ளுங்கள்
எபேசியர் : 6
11. நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்துநிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்.
12. ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு.
13. ஆகையால், தீங்குநாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும், சகலத்தையும் செய்துமுடித்தவர்களாய் நிற்கவும் திராணியுள்ளவர்களாகும்படிக்கு, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்.
சகோதரர் அன்பு அவர்களே ஒரு மனிதனுக்கு எத்தனை ஆவிகளுடன் போராட்டம் இருக்கின்றது என்று கைவிட்டு எண்ணிப்பாருங்கள்
சுருக்கமாக சொல்கின்றேன் புரிந்து கொள்ளுங்கள்
மேலே சொன்ன அனைத்து ஆவிகளுக்கும் ஒரே ஒருவேளைதான் அந்த வேலை என்னவென்றால் மனிதர்களை பாவத்தில் விளைவிப்பது தான் ஆனால் மனிதனாகிய நமக்கோ இந்த பூமியில் சாத்தானுடைய தந்திரங்களை எதிர்த்து நம்மை பாதுகாப்பது மட்டும் தான் மனிதனின் வேலையை இருந்தால் சரி நீங்கள் சொல்கின்றபடி பாவத்தின் முளுகாரணமே மனிதன் தான் என்று சொல்லலாம்
ஆனால் ஒரு மனிதுனுக்கு பூமியில் எத்தனை வேலை இருக்கின்றது என்பது உங்களுக்கு தெரியும் என்று எண்ணுகின்றேன் இப்படி இருக்க வல்லமையும் ஆவியின் சரீரமும் கண்ணுக்கு தெரியாமல் மறைந்து இருந்து தாக்கும் இவனுக்கும் மனிதனுக்கு எத்தனை வித்யாசம் உள்ளது என்பதை புரிந்து கொள்ளுங்கள்
இப்படி பட்ட ஆவியை ஜெய்க்க வேண்டும் என்றால் உண்மையாகவே தேவனுடிய ஆவியின் துணை கண்டிப்பாக ஒவ்வொரு மனிதனுக்கும் இருந்தால் தான் முடியும்
(1 ) சாத்தானுடைய வேலை மனிதனை பாவத்தில் விளைவிப்பது ஆனால் மனிதனுக்கு சாத்தானின் தந்திரங்களை புரிந்து கொண்டு இருப்பது மட்டும் வேலை அல்ல அவனை காத்து கொள்ளவே குடும்பத்தை நடத்தவே அவனுக்கு பல தேவை இருக்கின்றது
(2 ) சாத்தான் மனிதனை விட வல்லமைவைந்தவன் ஆவி சரிரம் உடையவன் அவனுக்கு பல சேனைகள் உள்ளது அவன் என்ன செய்கின்றான் என்ன செய்ய போகின்றான் என்பது தேவனுக்கு மட்டுமே தெரியும் சாதாரண மனிதனாகிய நமக்கு தெரியாது
இப்பொழுதாவது புரிந்து கொள்ளுங்கள் சாத்தான் பாவத்தில் மனிதர்களை சிக்க வைத்து தண்டனை வாங்கி கொடுப்பது சாத்தானுக்கு எவ்வளவு லேசான காரியம் என்று
இந்த காரணத்தினாலேயே தேவன் மனிதர்கள் மீது அன்பும் இரக்கும் வைத்து மனிதர்கள் செய்த நன்மைக்காக தன் குமாரனை பலியாக கொடுக்காமல் மனிதர்களாகிய நாம் செய்த பாவத்துக்கே தன குமாரனை மரணத்துக்கு ஒப்புகொடுத்து இருக்கின்றார் என்றால் பார்த்து கொள்ளுங்கள் தேவன் அந்த பாவத்திற்கு முழுகாரணம் யார் என்பது அவருக்கு தெரிந்தினாலேயே மனிதன் செய்த பாவத்து தேவன் தன் குமாரனை பலியாக கொடுத்தார்
தேவனே மனிதர்களாகிய நம்மேல் இரக்கும் வைத்து தன் குமாரன் மூலமாய் எல்லோரையும் மன்னிகின்றார் என்றால் மனிதர்களாகிய நாம் எல்லோரும் ஒரே ஆவியினால் உண்டானவர்கள்
நாம் எல்லோரும் சகோதரர்கள் போல என் குடும்பத்திற்கு ஒரு அழிவே அல்லது கஷ்டமே வந்தால் நாம் எப்படி பரிதபித்து தேவனிடத்தில் ஜெபிக்கின்றோமே அதே போலதான் மற்றவர்களையும் நாம் எண்ணி கொள்ளவேண்டும்.
இப்பொழுது இரக்கம் என்ன என்பது உங்கள்ளுக்கு புரிந்து இருக்கும் நினைக்கின்றேன்
விரிவாகவும் தெளிவாகவும் எழுத முடியவில்லை மன்னிக்கவும்......
-- Edited by EDWIN SUDHAKAR on Friday 18th of November 2011 12:34:45 PM
__________________
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)
Bro Anbu, I would like to post the first post of yours in this thread in my face book. Hope that is ok. Your arguments are quite interesting in this thread.
விவாதத்தை முடித்துக்கொண்ட பின்னர் மீண்டும் குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும் சகோ.சுந்தர் அவர்களே!
சுந்தர்:
//நீங்கள் மாற்று பெயரில் ஒளிந்துகொண்டு எழுதும் சகோ. சில்சாம் இல்லை என்பதை கர்த்தருக்குள் உறுதியாக சொன்னால்மட்டுமே இனி உங்கள் பதிவு அனுமதிக்கப்படும். முகாந்திரமில்லாமல் பொத்தம் பொதுவாக எழுதி குழப்பத்தை விளைவித்தால் உங்கள் பயனர் பெயர் முடக்கப்படும்.//
மனிதர்களான நாம் நடத்துகிற இத்தளத்தில் ஒருவர் அனுமதிக்கப்படுவதற்கே சில நிபந்தனைகளை வைக்கிறோம். குறிப்பாக மாற்றுப் பெயரில் ஒளிந்துகொண்டு எழுதுபவர், உண்மையாய் தன்னை வெளிப்படுத்தாவிடில், அவரை தளத்தில் அனுமதிக்க மறுக்கிறோம்.
அப்படியிருக்க, பரலோக தேவனின் ஆளுகைக்குட்பட்ட பரலோக ராஜ்யத்தில், தங்கள் தவறை உணராதவர்களை தேவன் மன்னித்து அனுமதிக்கவேண்டும் என எப்படி எதிர்பார்க்கிறீர்கள்?
“தவறை உணராதவர்களை தேவன் மன்னிக்கத்தான் வேண்டும் என்ற கட்டாயமில்லை, அதை தேவனே தீர்மானித்துக் கொள்ளட்டும்” என நீங்கள் சொல்லலாம். ஆனால் உங்களைப் பொறுத்தவரை: தங்கள் பாவங்களை உணராதவர்களை மன்னிப்பேன் என்கிறீர்கள்; தேவனும் அவர்களை மன்னிக்கும்படி வேண்டுவேன் என்கிறீர்கள். உங்கள் வேண்டுதலின்படி, தேவன் அவர்களை மன்னித்து பரலோக ராஜ்யத்தில் அனுமதித்தால் என்னாகும்?
உங்கள் தளத்தில் “சகோ.HMV” குழப்பம் விளைப்பதாக நீங்கள் கூறுவதுபோல், பாவத்தை உணராத பாவிகள் பரலோக ராஜ்யத்திற்குள் வந்து அங்கு குழப்பத்தைத்தானே விளைவிப்பார்கள்?
உங்கள் தளம் எப்படி குழப்பவாதிகள் இல்லாத தளமாக இருக்கவேண்டுமென எதிர்பார்க்கிறீர்களோ, அதேவிதமாக பரலோக ராஜ்யமும் குழப்பவாதிகள் மற்றும் பாவிகள் இல்லாத ராஜ்யமாக இருக்க வேண்டுமல்லவா? அப்படி இருக்க வேண்டுமெனில், தங்கள் பாவங்களை உணர்ந்து மன்னிப்பு பெற்றவர்கள் மட்டுமே அங்கு பிரவேசிப்பதுதானே சரியாக இருக்கும்? இதைத்தான் வசனமும் சொல்கிறது.
வெளி. 21:27 தீட்டுள்ளதும் அருவருப்பையும் பொய்யையும் நடப்பிக்கிறதுமாகிய ஒன்றும் அதில் (புதிய எருசலேமாகிய நகரத்தினுள்) பிரவேசிப்பதில்லை;
வசனம் இப்படி சொல்லியிருக்க, நீங்களோ “தீட்டுள்ளவன், அருவருப்பையும் பொய்யையும் நடப்பிக்கிறவன் யாராக இருந்தாலும் பரவாயில்லை, அவன் தன் பாவங்களை உணராவிட்டாலும் அவனை மன்னிப்பேன், தேவனும் அவனை மன்னித்து புதிய எருசலேமாகிய நகரத்தினுள் பிரவேசிக்க அனுமதிக்கும்படி (அதாவது நித்திய ஜீவனைப் பெறும்படி) வேண்டுவேன்” என்கிறீர்கள். உங்கள் வேண்டுதல் தேவசித்தத்திற்கு விரோதமானது என இப்போதாவது புரிகிறதா?
இறுதியாக ஒரு கேள்வி: தங்கள் பாவங்களை உணராத எப்பேற்பட்ட பாவிகளையும் நிபந்தனையின்றி மன்னித்து, அவர்கள் நித்திய ஜீவனை சுதந்தரிக்க தேவன் அனுமதிக்க வேண்டும் என வேண்டுகிற நீங்கள், HMV போன்றவர்கள் தங்கள் ஒளிவு மறைவை ஒத்துக்கொள்ளாவிட்டாலும் அவர்களை நிபந்தனையின்றி மன்னித்து உங்கள் தளத்தில் நீங்கள் ஏன் அனுமதிக்கக்கூடாது?
//Bro Anbu, I would like to post the first post of yours in this thread in my face book. Hope that is ok.//
அன்பான சகோதரி!
எனது பதிவை Face Book-ல் போட முன்வந்ததற்கு நன்றி. எனது பத்திரிகை மற்றும் விவாததளம் எதில் வேண்டுமானாலும் நீங்கள் விரும்புகிற பகுதிகளை எந்த “தகவல் தளத்திலும்” பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்காக என்னிடம் அனுமதி வேண்டவும் அவசியமில்லை; எனது பெயரை/தொடுப்பைக் குறிப்பிட வேண்டிய அவசியமுமில்லை.
நான் இன்னமும் Face Book-ல் தீவிரமாக பங்காற்றவில்லை. எனினும் உங்களது உட்பட பலரது சுவற்றை அவ்வப்போது பார்ப்பேன். சற்றும் உணர்ச்சி வசப்படாமல் நறுக்கு தெரித்தாற்போல் தருகிற உங்கள் ஆக்கங்களை மிகவும் விரும்பிப் படிப்பேன்.
சாது.செல்வராஜ் மற்றும் திரித்துவ விஷயங்கள் தவிர மற்ற அனேக விஷயங்களில் உங்கள் கருத்துக்களோடு நான் ஒத்துப்போகிறேன்.
பல தளங்களில் எழுதி Follow-up செய்வது சிரமமென்பதால், Face Book-ல் முழுமையாக நுழைய தயங்கிக் கொண்டிருக்கிறேன். மேலும் ஆங்கிலத்தில் எழுதுவது எனக்கு சற்று சிரமென்பதாலும், தயங்கிக் கொண்டிருக்கிறேன். எனினும் தேவனுக்குச் சித்தமானால் Face Book-லும் எனது பங்கை அளிப்பேன்.
-- Edited by anbu57 on Friday 18th of November 2011 01:42:59 PM