//1 தீமோத்தேயு 2:1 நான் பிரதானமாய்ச் சொல்லுகிற புத்தியென்னவெனில், எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் பண்ணவேண்டும்;
பவுலின் இந்த பிரதான புத்திமதி அடிப்படையில் எல்லோருக்காகவும் இரக்கத்துடன் ஜெபிக்கிறோம்.//
எல்லா மனுஷருக்காகவும் பவுல் ஜெபிக்கச் சொன்னார் என்பது சரிதான்; ஆனால் என்ன காரியத்திற்காக ஜெபிக்கச் சொன்னார் என்பதைப் பார்க்க வேண்டாமா? அதைப் பார்க்காமல் சரட்டுமேனிக்கு ஜெபிக்கலாமா?///
சகோதரர் அவர்களே! "எல்லோருக்கும் ஜெபம் பண்ண வேண்டும்" என்று வசனம் சொல்கிறது என்று சொன்னால் அடுத்த வசனத்தை எடுத்து சொல்லி அப்படியல்ல என்று சொல்கிறீர்கள். முதல் வசனம் தனி இரண்டாம் வசனம் தனி! முதல் வசனம் எல்லோருக்காகவும் ஜெபிக்க சொல்கிறது. இரண்டாம் வசனம் சில காரியத்துக்காக இவர்களுக்கும் ஜெபிக்கவேண்டும்என்று முக்கியப்படுத்தி சொல்கிறது. இரண்டாம் வசனம் முதல் வசனத்தை செயல் இழக்க செய்யாது. தாங்கள் கருதுவதுதான் உண்மை எனில் பவுல் முதலிலேயே குறிப்பிட்ட ஆட்களை குறித்து சொல்லி இவர்களுக்காக இதற்காக ஜெபியுங்கள் என்று சொல்லியிருப்பார். மறந்தும்கூட எல்லோருக்கும் ஜெபித்துவிடாதீர்கள் என்று அறிவுரை கூறியிருப்பார்.
வேண்டாம் சகோதரே நாம் முடித்துகோள்ளலாம்! நீங்கள் எப்பொழுது பூகம்பத்தில் மாட்டியவர்களுக்கு ஜெபிக்ககூடாது, டாஸ்மாக் கடையில்
குடிப்பவர்களுக்கு ஜெபிக்கக கூடாது என்று கருத்து கொண்டுள்ளீர்களோ பின்னர் நான் சொல்வதற்கு எதுவும் இல்லை.
"வசனம் சொல்கிறது வசனம் சொல்கிறது" என்று தேவனின் வசனத்தை தங்கள் கையில் நியாயம் தீர்ப்பதற்கு எடுத்து கொண்டுள்ளீர்கள். அது இருபுறமும் வெட்டும் என்பதை கருத்தில் கொள்க! தேவன் மஹா பரிசுத்தர் அவர் எப்படி வேண்டுமானாலும் பிறரை நியாயம் தீர்க்கலாம், தீர்க்கபோவதாக சொல்லலாம். அனால் அநியாயத்தை தண்ணீர்போல குடிக்கும் மனுஷர்கள் அதை கையில் எடுத்து பிறரை நியாயம் தீர்க்க துணிவதில் எனக்கு உடன்பாடு இல்லை.
யோபு 32:1யோபு தன் பார்வைக்கு நீதிமானாயிருந்தபடியினால், அவனுக்கு அந்த மூன்று மனுஷரும் பிரதியுத்தரம் சொல்லி ஓய்ந்தார்கள்.
என்ற வார்த்தைக்கு ஏற்ப, தன் பார்வைக்கு நீதிமானாய் இருப்பவர் களிடம் இதற்க்குமேல் எதுவும் சொல்வதற்கில்லை. காரணம் தங்களின் செயல்பாடுகள் என்னவென்பது எனக்கு சரியாக தெரியாத பட்சத்தில் உங்களை நல்லவன் என்றோ பொல்லாதவன் என்றோ தீர்க்க நான் விரும்பவில்லை. .
ஆனால் என்னை பொறுத்தவரை :
I கொரிந்தியர் 4:4என்னிடத்தில் நான் யாதொரு குற்றத்தையும் அறியேன்; ஆகிலும் அதினாலே நான் நீதிமானாகிறதில்லை; என்னை நியாயம் விசாரிக்கிறவர் கர்த்தரே.
என்ற வசனத்தின் அடிப்படையிலேயே நான் நிற்க விரும்புகிறேன்.
மேலும் நீதிமான் ஒருவராகிலும் இல்லை என்பதை வேதம் பல இடங்களில் சொல்லியிருப்பதால் மனுஷர்களாகிய நாமெல்லாம் நீதிமான்களாக முயற்ச்சிக்கிறோம் அல்லது போராடுகிரோமேயன்றி யாரும் பூரணராகவில்லை என்பதை நாம் அறிய வேண்டும்! அதற்க்காக நாங்கள் மனம்திரும்பாதவர்களோ அல்லது மனம் திரும்ப விரும்பாத பாவிகளோ அல்ல!
நான் பூரணன் அல்லது நீதிமான் என்று உங்களை நீங்களே தீர்த்து கொண்டீர்களானால் அப்படியே இருந்துவிட்டுபோங்கள். பாவிகளுக்காக நாங்கள் ஜெபிபதை தவறு என்று சொல்லவேண்டாம். தேவன் ஒரு வேளை இரங்கி எங்களையும் என்போன்றவர்களையும் ஏற்றுக் கொள்ளலாமே யார் அறிவார்?
ஆனால் தங்கள் போன்றவர்கள் (தேவன் அனுமதித்தால்) அவரிடம்
போய் நின்று இப்படிபட்டவர்களுக்கு தண்டனைகொடுத்தே தீரவேண்டும் என்று வாதிடலாம். ஆனால் எங்கள் தேவன் தங்களை போன்றவர் அல்ல! அவரிடம் இரக்கங்களும் மன்னிப்பும் உண்டு என்று வேதம் சொல்கிறது.
சங்கீதம் 130:4உமக்குப் பயப்படும்படிக்கு உம்மிடத்தில் மன்னிப்பு உண்டு. தானியேல் 9:10ஆனாலும் எங்கள் தேவனாகிய ஆண்டவரிடத்தில் இரக்கங்களும் மன்னிப்புகளும் உண்டு.
அந்த இரக்கம் மற்றும் மன்னிப்பை நம்பியே நாங்கள் வாழ்கிறோம். ஏனெனில் தேவன் எதிர்பார்க்கும் பரிசுத்த நிலையை எட்ட முயற்ச்சிக் கிறோம் ஆனால் முழுமை அடைவது எங்களை கையில் இல்லை அது அவரது ஆவியாலேயே ஆகும்!
லுக் 18: 9. அன்றியும், தங்களை நீதிமான்களென்று நம்பி, மற்றவர்களை அற்பமாயெண்ணின சிலரைக்குறித்து, அவர் ஒரு உவமையைச் சொன்னார். 10. இரண்டு மனுஷர் ஜெபம்பண்ணுபம்படி தேவாலயத்துக்குப் போனார்கள்; ஒருவன் பரிசேயன், மற்றவன் ஆயக்காரன். 11. பரிசேயன் நின்று; தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைப்போலவும் இராததனால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். 12. வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்திவருகிறேன் என்று, தனக்குள்ளே ஜெபம்பண்ணினான்.
13. ஆயக்காரன் தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்துக்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு; தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்றான்.
லூக்கா 18:14அவனல்ல, இவனே நீதிமானாக்கப்பட்டவனாய்த் தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்;
இதில் தன்னை நீதிமான் என்று எண்ணி தேவனின் கிருபையை இழந்து போனவன்போல நான் போக விரும்பவில்லை. தேவனின் பரிசுத்தத் துக்கு முன்னால் நான் பாவி என்று உணருவதால் எனக்காக ஜெபிபதோடு என்போன்றவர்களுக்காகும் நான் ஜெபிக்கிறேன்
கிரிஸ்த்தவத்துக்குள் தங்கள் போன்றவர்கள் எல்லாம் இருப்பதற்காக நான் பெருமைப்படுகிறேன்?!
இந்த தளத்தினுள் எல்லோரையும் எழுத அனுமதிப்பது கருத்து தாங்கள் வாதிடுவதில் எந்த அர்த்தமும் இல்லை. காரணம் இங்கு எழுத அனுமதி க்கபட்டவர்கள் எல்லாம் பரலோகம் போக அனுமதிக்க படுவார்கள் என்று தெரிந்தால் நான் அப்படியே விட்டுவிடுவேன்.
-- Edited by SUNDAR on Monday 21st of November 2011 03:49:34 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
வசனத்தைக் காட்டி அதனடிப்படையில் எனது கருத்தைச் சொன்னால், ஏதோ நான் சுயமாக நியாய்ந்தீர்ப்பதாகச் சொல்கிறீர்கள். இனி உங்கள் பதிவுகளுக்கு எனது சுய வார்த்தைகளில் பதில் தரப்போவதில்லை. வெறும் வசனத்தை மட்டும் பதிலாகத் தருகிறேன். அப்போதாவது நான் நியாயந்தீர்ப்பதாகச் சொல்வதை நிறுத்துவீர்கள் என நம்புகிறேன்.
சகோ.சுந்தர்:
//சகோதரர் அவர்களே! "எல்லோருக்கும் ஜெபம் பண்ண வேண்டும்" என்று வசனம் சொல்கிறது என்று சொன்னால் அடுத்த வசனத்தை எடுத்து சொல்லி அப்படியல்ல என்று சொல்கிறீர்கள். முதல் வசனம் தனி இரண்டாம் வசனம் தனி! முதல் வசனம் எல்லோருக்காகவும் ஜெபிக்க சொல்கிறது. இரண்டாம் வசனம் சில காரியத்துக்காக இவர்களுக்கும் ஜெபிக்கவேண்டும்என்று முக்கியப்படுத்தி சொல்கிறது. இரண்டாம் வசனம் முதல் வசனத்தை செயல் இழக்க செய்யாது. தாங்கள் கருதுவதுதான் உண்மை எனில் பவுல் முதலிலேயே குறிப்பிட்ட ஆட்களை குறித்து சொல்லி இவர்களுக்காக இதற்காக ஜெபியுங்கள் என்று சொல்லியிருப்பார்.//
1 தீமோ. 2:1 1 நான் பிரதானமாய்ச் சொல்லுகிற புத்தியென்னவெனில், எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் பண்ணவேண்டும்; 2 நாம் எல்லாப் பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம்பண்ணும்படிக்கு, ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும் அப்படியே செய்யவேண்டும்.
1 Tim 2:1 I urge, then, first of all, that requests, prayers, intercession and thanksgiving be made for everyone- 2 for kings and all those in authority, that we may live peaceful and quiet lives in all godliness and holiness. - NIV
1 Tim 2:1 I exhort therefore, that, first of all, supplications, prayers, intercessions, and giving of thanks, be made for all men; 2 For kings, and for all that are in authority; that we may lead a quiet and peaceable life in all godliness and honesty. - KJV
எண்.15:29 30 அன்றியும் தேசத்திலே பிறந்தவர்களிலாகிலும் அந்நியர்களிலாகிலும் எவனாவது துணிகரமாய் யாதொன்றைச் செய்தால், அவன் கர்த்தரை நிந்திக்கிறான்; அந்த ஆத்துமா தன் ஜனத்தாரில் இராதபடிக்கு அறுப்புண்டுபோகவேண்டும்.
1 சாமுவேல் 2:24 என் குமாரரே, வேண்டாம்; நான் கேள்விப்படுகிற இந்தச் செய்தி நல்லதல்ல; கர்த்தருடைய ஜனங்கள் மீறி நடக்கிறதற்குக் காரணமாயிருக்கிறீர்களே. 25 மனுஷனுக்கு விரோதமாக மனுஷன் பாவஞ்செய்தால், நியாயாதிபதிகள் அதைத் தீர்ப்பார்கள்; ஒருவன் கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்வானேயாகில், அவனுக்காக விண்ணப்பஞ்செய்யத்தக்கவன் யார் என்றான்;
எபிரெயர் 6:4 ஏனெனில், ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரமஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும், 5 தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும், 6 மறுதலித்துப்போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாதகாரியம். 7 எப்படியெனில், தன்மேல் அடிக்கடி பெய்கிற மழையைக் குடித்து, தன்னிடத்தில் பயிரிடுகிறவர்களுக்கேற்ற பயிரை முளைப்பிக்கும் நிலமானது தேவனால் ஆசீர்வாதம் பெறும். 8 முள்செடிகளையும் முள்பூண்டுகளையும் முளைப்பிக்கிற நிலமோ தகாததாயும் சபிக்கப்படுகிறதற்கேற்றதாயுமிருக்கிறது; சுட்டெரிக்கப்படுவதே அதின் முடிவு.
எபிரெயர் 10:26 சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொருபலி இனியிராமல், 27 நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும். 28 மோசேயினுடைய பிரமாணத்தைத் தள்ளுகிறவன் இரக்கம்பெறாமல் இரண்டு மூன்று சாட்சிகளின் வாக்கினாலே சாகிறானே; 29 தேவனுடைய குமாரனைக் காலின்கீழ் மிதித்து, தன்னைப் பரிசுத்தஞ்செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி, கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன் எவ்வளவு கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரவானாயிருப்பான் என்பதை யோசித்துப்பாருங்கள்.
2 பேதுரு 2:20 கர்த்தரும் இரட்சகருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவினாலே உலகத்தின் அசுத்தங்களுக்குத் தப்பினவர்கள் மறுபடியும் அவைகளில் சிக்கிக்கொண்டு ஜெயிக்கப்பட்டால், அவர்களுடைய பின்னிலைமை முன்னிலைமையிலும் கேடுள்ளதாயிருக்கும்.
1 யோவான் 5:16 மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தைத் தன் சகோதரன் செய்ய ஒருவன் கண்டால், அவன் வேண்டுதல்செய்யக்கடவன், அப்பொழுது அவனுக்கு ஜீவனைக் கொடுப்பார்; யாருக்கென்றால், மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தைச் செய்தவர்களுக்கே; மரணத்துக்கு ஏதுவான பாவமுண்டு, அதைக்குறித்து வேண்டுதல்செய்ய நான் சொல்லேன். 17 அநீதியெல்லாம் பாவந்தான்; என்றாலும் மரணத்துக்கு ஏதுவல்லாத பாவமுமுண்டு.
மத்தேயு 12:31 ஆதலால், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: எந்தப் பாவமும் எந்தத் தூஷணமும் மனுஷருக்கு மன்னிக்கப்படும்; ஆவியானவருக்கு விரோதமான தூஷணமோ மனுஷருக்கு மன்னிக்கப்படுவதில்லை. 32 எவனாகிலும் மனுஷகுமாரனுக்கு விரோதமான வார்த்தை சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்; எவனாகிலும் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகப் பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை.
//மேலும் நீதிமான் ஒருவராகிலும் இல்லை என்பதை வேதம் பல இடங்களில் சொல்லியிருப்பதால் மனுஷர்களாகிய நாமெல்லாம் நீதிமான்களாக முயற்ச்சிக்கிறோம் அல்லது போராடுகிரோமேயன்றி யாரும் பூரணராகவில்லை என்பதை நாம் அறிய வேண்டும்! அதற்க்காக நாங்கள் மனம்திரும்பாதவர்களோ அல்லது மனம் திரும்ப விரும்பாத பாவிகளோ அல்ல!
நான் பூரணன் அல்லது நீதிமான் என்று உங்களை நீங்களே தீர்த்து கொண்டீர்களானால் அப்படியே இருந்துவிட்டுபோங்கள். பாவிகளுக்காக நாங்கள் ஜெபிபதை தவறு என்று சொல்லவேண்டாம். தேவன் ஒரு வேளை இரங்கி எங்களையும் என்போன்றவர்களையும் ஏற்றுக் கொள்ளலாமே யார் அறிவார்?//
2 பேதுரு 3:14 ஆகையால், பிரியமானவர்களே, இவைகள் வரக் காத்திருக்கிற நீங்கள் கறையற்றவர்களும் பிழையில்லாதவர்களுமாய்ச் சமாதானத்தோடே அவர் சந்நிதியில் காணப்படும்படி ஜாக்கிரதையாயிருங்கள். 15 மேலும் நம்முடைய கர்த்தரின் நீடிய பொறுமையை இரட்சிப்பென்று எண்ணுங்கள்; நமக்குப் பிரியமான சகோதரனாகிய பவுலும் தனக்கு அருளப்பட்ட ஞானத்தினாலே இப்படியே உங்களுக்கு எழுதியிருக்கிறான்; 16 எல்லா நிருபங்களிலும் இவைகளைக்குறித்துப் பேசியிருக்கிறான்; அவன் சொன்னவைகளில் சில காரியங்கள் அறிகிறதற்கு அரிதாயிருக்கிறது; கல்லாதவர்களும் உறுதியில்லாதவர்களும் மற்ற வேதவாக்கியங்களைப் புரட்டுகிறதுபோலத் தங்களுக்குக் கேடுவரத்தக்கதாக இவைகளையும் புரட்டுகிறார்கள். 17 ஆதலால் பிரியமானவர்களே, இவைகளை முன்னமே நீங்கள் அறிந்திருக்கிறபடியால், அக்கிரமக்காரருடைய வஞ்சகத்திலே நீங்கள் இழுப்புண்டு உங்கள் உறுதியிலிருந்து விலகி விழுந்துபோகாதபடிக்கு எச்சரிக்கையாயிருந்து, 18 நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையிலும் அவரை அறிகிற அறிவிலும் வளருங்கள். அவருக்கு இப்பொழுதும் என்றென்றைக்கும் மகிமையுண்டாவதாக. ஆமென்.
சுந்தர்:
//யோபு 32:1 யோபு தன் பார்வைக்கு நீதிமானாயிருந்தபடியினால், அவனுக்கு அந்த மூன்று மனுஷரும் பிரதியுத்தரம் சொல்லி ஓய்ந்தார்கள்.
என்ற வார்த்தைக்கு ஏற்ப, தன் பார்வைக்கு நீதிமானாய் இருப்பவர் களிடம் இதற்க்குமேல் எதுவும் சொல்வதற்கில்லை. //
யோபு 42:7 கர்த்தர் இந்த வார்த்தைகளை யோபோடே பேசினபின், கர்த்தர் தேமானியனான எலிப்பாசை நோக்கி: உன்மேலும் உன் இரண்டு சிநேகிதர்மேலும் எனக்குக் கோபம் மூளுகிறது; என் தாசனாகிய யோபு பேசினதுபோல், நீங்கள் என்னைக்குறித்து நிதானமாய்ப் பேசவில்லை. 8 ஆதலால் நீங்கள் ஏழு காளைகளையும், ஏழு ஆட்டுக்கடாக்களையும் தெரிந்துகொண்டு, என் தாசனாகிய யோபினிடத்தில் போய், உங்களுக்காகச் சர்வாங்க தகனபலிகளை இடுங்கள்; என் தாசனாகிய யோபும் உங்களுக்காக வேண்டுதல் செய்வான்; நான் அவன் முகத்தைப் பார்த்து, உங்களை உங்கள் புத்தியீனத்துக்குத் தக்கதாக நடத்தாதிருப்பேன்; என் தாசனாகிய யோபு பேசினதுபோல், நீங்கள் என்னைக்குறித்து நிதானமாய்ப் பேசவில்லை என்றார்.
சுந்தர்:
//மேலும் நீதிமான் ஒருவராகிலும் இல்லை என்பதை வேதம் பல இடங்களில் சொல்லியிருப்பதால் மனுஷர்களாகிய நாமெல்லாம் நீதிமான்களாக முயற்ச்சிக்கிறோம் அல்லது போராடுகிரோமேயன்றி யாரும் பூரணராகவில்லை என்பதை நாம் அறிய வேண்டும்!//
1 கொரி. 4:5 ஆனதால், கர்த்தர் வருமளவும் நீங்கள் காலத்துக்குமுன்னே யாதொன்றைக்குறித்தும் தீர்ப்புச்சொல்லாதிருங்கள்;
சுந்தர்:
//நான் பூரணன் அல்லது நீதிமான் என்று உங்களை நீங்களே தீர்த்து கொண்டீர்களானால் அப்படியே இருந்துவிட்டுபோங்கள்.//
2 தெச 2:11 ஆகையால் சத்தியத்தை விசுவாசியாமல் அநீதியில் பிரியப்படுகிற யாவரும் ஆக்கினைக்குள்ளாக்கப்படும்படிக்கு, 12 அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய வஞ்சகத்தைத் தேவன் அவர்களுக்கு அனுப்புவார்.
2 பேதுரு 2:1 அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள்; அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணி, தங்களைக் கிரயத்துக்குக்கொண்ட ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்குத் தீவிரமான அழிவை வருவித்துக்கொள்ளுவார்கள். 2 அவர்களுடைய கெட்ட நடக்கைகளை அநேகர் பின்பற்றுவார்கள்; அவர்கள்நிமித்தம் சத்தியமார்க்கம் தூஷிக்கப்படும். 3 பொருளாசையுடையவர்களாய், தந்திரமான வார்த்தைகளால் உங்களைத் தங்களுக்கு ஆதாயமாக வசப்படுத்திக்கொள்ளுவார்கள்; பூர்வகாலமுதல் அவர்களுக்கு விதிக்கப்பட்ட ஆக்கினை அயர்ந்திராது, அவர்களுடைய அழிவு உறங்காது
//அதாவது ஒரு பாவி புதிய எருசலேமுக்கு வரும்படி சுந்தர் வேண்டுகின்றார் என்று நீங்கள் சொல்கின்றீர்கள் சரிதானே?
ஆனால் என்னவோ தெரியவில்லை, சுந்தர் ஜெபத்தை கர்த்தர் கேட்டார் என்று எண்ணுகின்றேன். ஆம் பாவி கூட புதிய எருசலேமில் இருக்கின்றான். கீழே உள்ள வசனத்தை நன்கு வாசித்து பாருங்கள்.
ஏசாயா : 65
18 நான் சிருஷ்டிக்கிறதினாலே நீங்கள் என்றென்றைக்கும் மகிழ்ந்து களிகூர்ந்திருங்கள்; இதோ, எருசலேமைக் களிகூருதலாகவும், அதின் ஜனத்தை மகிழ்ச்சியாகவும் சிருஷ்டிக்கிறேன்.
19 நான் எருசலேமின்மேல் களிகூர்ந்து, என் ஜனத்தின்மேல் மகிழ்ச்சியாயிருப்பேன்; அழுகையின் சத்தமும், கூக்குரலின் சத்தமும் அதில் இனிக் கேட்கப்படுவதில்லை.
20 அங்கே இனி அற்ப ஆயுசுள்ள பாலகனும், தன் நாட்கள் பூரணமாகாத கிழவனும் உண்டாயிரார்கள்; நூறு வயதுசென்று மரிக்கிறவனும்
வாலிபனென்று எண்ணப்படுவான், நூறு வயதுள்ளவனாகிய பாவியோ சபிக்கப்படுவான்.
சகோ : அன்பு அவர்களே தேவன் புதிய எருசலேமில் பாவியை எதற்காக அனுமதிக்கின்றார் என்பதை எனக்கு தெளிவாக சொல்லுங்கள் தமிழ் வேதத்தில் இருந்து ......................//
சகோ.எட்வின் அவர்களே!
ஜெபித்தது சுந்தர், அவரது ஜெபத்தை கர்த்தர் கேட்டார் எனச் சொல்வது நீங்கள். பின்னர் “புதிய எருசலேமில் பாவியை எதற்காக தேவன் அனுமதிக்கின்றார்” எனும் கேள்வியை என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்? புதிய எருசலேமுக்குள் அனுப்பப்பட்ட பாவியை தேவன் ஏன் சபிக்கிறார் எனும் கேள்வியை சுந்தரிடம் கேட்கவேண்டியதுதானே?
பிரச்சனைக்குரிய ஒரு விஷயத்தைச் சொல்லி, அதற்குத் தீர்வையும் கண்டுபிடிக்காமல், அதற்குள் சுவிசேஷம் சொல்லப் போகலாமா எனும் கேள்வியை எழுப்பிவிட்டீர்கள்.
இத்தளத்திற்கு சுமார் 200-க்கும் அதிகமானபேர் தினசரி வருகின்றனர். அவர்களெல்லாம் உங்கள் கேள்வியால் குழம்பிப்போயிருக்கக்கூடும். எனவே “சுந்தரின் ஜெபத்தைக் கேட்டு” புதிய எருசலேமுக்கு பாவி ஏன் அனுமதிக்கப்படுகிறான், ஏன் சபிக்கப்படுகிறான் எனும் கேள்விகளுக்கு முதலில் பதில் சொல்லுங்கள், அல்லது சுந்தரிடம் பதில் கேட்டுப் பெறுங்கள்.
நான் சொல்லும் பதிலெல்லாம் மாம்சப்பிரகாரமானதாக அற்பமான பதிலாகத்தான் இருக்கும். எனவே ஆவிக்குரிய பிரகாரமாக வெளிப்பாடுகளைப் பெறுகிற நீங்கள் பதில் சொல்லுங்கள், அல்லது சுந்தரிடம் பதிலைக் கேட்டு பெறுங்கள்.
எனக்கு இப்பிரச்சனைக்கு ஒரு முடிவு வேண்டும்; அதன்பின்னர்தான் “சுவிசேஷம் சொல்லப் போகலாமா, வேண்டாமா” என்பதைத் தீர்மானிக்க வேண்டும். ஏனெனில், ஒருவேளை சுந்தரின் ஜெபத்தை தேவன் கேட்டு, எல்லோரையும் புதிய எருசலேமுக்கு அனுமதித்து, எல்லோருக்கும் நித்திய ஜீவனையும் கொடுப்பதாக இருந்தால், நான் சுவிசேஷம் அறிவிக்க வேண்டிய அவசியமில்லையே!
1 மரணத்துக்கு ஏதுவான பாவமுண்டு, அதைக்குறித்து வேண்டுதல்செய்ய நான் சொல்லேன். 17 அநீதியெல்லாம் பாவந்தான்; என்றாலும் மரணத்துக்கு ஏதுவல்லாத பாவமுமுண்டு.
மத்தேயு 12:31 எவனாகிலும் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகப் பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை.
சகோதரர் அவர்களே! தாங்கள் குறிப்பிட்டுள்ள எல்லா வசனமும் வேதாகமத்தில் இருக்கிறது என்பதை நாங்களும் அறிவோம். தேவன் தம்முடைய சித்தப்படி அதை பயன்படுத்துவார் என்பதும் எங்களுக்கு தெரியும். பாவம் செய்த வனுக்கும் துன்மார்க்கனுக்கும் தண்டனை உண்டு அவன் தண்டனை இன்றி தப்பிக்கவே முடியாது என்பதையும் நாங்கள் அறிவோம்! அதையே இங்கு அதிகமாக போதித்தும் வருகிறாம்.
யார் நிலையையும் நியாயம் தீர்க்கும் தகுதி எமக்கு இல்லை எனவே எங்கள் நிலை என்னவென்பதை சுருக்கமாக சொல்லிவிடுக்றோம்:
1. தாங்கள் குறிப்பிட்டுள்ள வசனம் சொல்கிரதுபோல் யார் மரணத்துக்கு ஏதுவான பாவம் செய்தவர்கள், யார் பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமாக தூஷணம் பேசியவர்கள் யார் நித்திய அழிவுக்கு நேராக இருப்பவர்கள் என்பதை நாங்கள் அறியோம். எனவே எல்லோருக் காகவும் ஜெபங்களை எறேடுக்கிறோம்.
1 தீமோத்தேயு 2:1 நான் பிரதானமாய்ச் சொல்லுகிற புத்தி யென்னவெனில், எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங் களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் பண்ணவேண்டும்;
2. யாரையும் குற்றவாழி என்று தீர்க்ககூடாது என்றும் அவ்வாறு தீர்த்தால் அந்த தீர்ப்பே நமக்கு திரும்பி கிடைக்கும் என்று வேதம் திட்டமாக சொல்வதால் யாரையும் அல்லது எந்த மனுஷனையும் அவன் குற்றவாழி என்று தீர்க்காமல் எல்லோருக்காகவும் வேண்டுதல் செய்கிறோம்.
லூக்கா 6:37மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்; அப்பொழுது நீங்களும் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதிருப்பீர்கள்; மற்றவர்களை ஆக்கினைக்குள்ளாகும்படி தீர்க்காதிருங்கள், அப்பொழுது நீங்களும் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதிருப்பீர்கள்;
3. தாங்கள் குறிப்பிட்டுள்ள வசனங்களை சொன்னது ஆவியானவராகிய தேவன். அவர் பரிசுத்தர்! எனவே அவருக்கு அதை சொல்லவும் அதை நிறைவேற்றவும் தகுதியற்றவர்களை தண்டிக்கவும் தகுதியிருக்கிறது. ஆனால் நாம் எல்லோருமே மனுஷர்களே, ஜீவனுள்ள மனுஷர்கள் ஒருவரும் தேவனுக்கு முன்னால் நீதிமான் இல்லாத காரணத்தால், எங்களுக்காகவும் மற்றவர்களுக்காககும் தேவனிடம் இரக்கத்துகாக கெஞ்சுகிறோம்
சங்கீதம் 143:2ஜீவனுள்ள ஒருவனும் உமக்கு முன்பாக நீதிமான் அல்லாததினாலே, அடியேனை நியாயந்தீர்க்கப் பிரவேசியாதேயும்
4. தேவனின் வசனத்தை எடுத்து சொல்லி "தேவன் இப்படி இப்படி யெல்லாம் சொல்லியிருக்கிறார் எனவே எச்சரிப்புடன் வாழவேண்டும்" என்று போதிக்கத்தான் நமக்கு உரிமை இருக்கிறதேயன்றி, பரிசுத்த தேவனின் வசனத்தை கையில் எடுத்து யாரையும் நியாயம் தீர்த்து
இவருக்காக ஜெபிக்க கூடாது என்றோ இவருக்காக இரக்கப்படகூடாது என்றோ சொல்வதற்கு நமக்கு அதிகாரம் இல்லை என்பது எங்கள் கருத்து.
5. தாங்கள் குறிப்பிடுள்ள வசனத்தின் அடிப்படையில் யார் யார் தகுதி
யிழந்தவர்கள் யார்யார் நித்திய ஜீவனிக்கு தகுதியுள்ளவர்கள் என்பதை தேவன் ஒருவரே அறிவார் அதற்க்கு தகுந்தால்போல் அவர் நிச்சயம் செய்வர் எனவே காலம் வரும்போது அவரதுசித்தம் நிறைவேறுவதற்கு விட்டுகொடுக்கிறோம்.
கொரிந்தியர் 4:5ஆனதால், கர்த்தர் வருமளவும் நீங்கள் காலத்துக்கு முன்னே யாதொன்றைக்குறித்தும் தீர்ப்புச்சொல்லாதிருங்கள்
6. நாங்களும் ஒரு காலத்தில் மதுக்கடைகளில் வாங்கி குடித்தவர்கள் தான் ஏதோ தேவனின்பெரிதான கிருபையால் இரட்சிக்கபட்டோம். அதுபோல் டாஸ்மாக் கடையில் குடிப்பவர்களிலும் பூகம்பத்தால் பாதிக்கபட்டவர்களிலும் தகுதியுள்ளவர்கள் யாராவது இருந்தால் தேவன் அவர்களை இரட்சிக்கட்டும் என்று அவர்களுக்காக ஜெபிக்கிறோம்.
இறுதியாக தேவன்சொன்ன வார்த்தைகளை நாங்கள் நன்றாக ஆராய்ந்து படித்து, அதை தேவனுக்கே சுட்டிகாட்டி "துன்மார்க்கனை நீர் அழித்து விடுவேன் என்று நிச்சயமாக சொல்லியிருக்கிறீர் எனவே கண்டிப்பாக அழிக்க வேண்டும் இல்லையேல் நீர் நீதிபரர் அல்ல" என்று நாங்கள் அவருக்கு அறிவுரை சொல்லவோ அல்லது அவரை கட்டாய படுத்தவோ நாங்கள் விரும்பவில்லை. காரணம் எல்லோரும் சததியத்தை அறியவேண்டும் என்றும் தேவன் சித்தம் கொண்டிருப்பதால் அதற்க்கு ஏற்றாற்போல் நாங்களும் ஜெபிக்கிறோம்:
I தீமோ 2:4எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.
தவறு செய்தவர்களை தண்டிப்பதும் பழிவாங்குவதும் பதிலளித்தல் தேவனுக்குறியது அவர் தம்முடய சித்தபடி நிச்சயம் நியாயம் தீர்ப்பார்!
எபிரெயர் 10:30பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றும், கர்த்தர் தம்முடைய ஜனங்களை நியாயந்தீர்ப்பாரென்றும் சொன்னவர் இன்னாரென்று அறிவோம்.
இந்நிலையில் யாரையும் இவன் குற்றவாழி இவன் துன்மார்க்கன் என்று சொல்லி யாரையும் பிடித்து தேவன்கையில் நியாயத்தீர்ப்புக்கு கொடுக்க நாங்கள் விரும்பவில்லை.
எமது நிலைமையை ஒரு சிறிய வேத சம்பவம் மூலம் விளக்கி நிறைவு செய்ய விரும்புகிறேன்:
இஸ்ரவேல் ஜனங்கள் வனாந்திரத்தில் கன்றுக்குட்டியை உருவாக்கி பாவம் செய்தபோது அந்த பாவத்தில் சற்றும் சம்பந்தப்படாத மோசே கர்த்தரிடம் இவ்வாறு ஜெபிக்கிறேன்
யாத்திராகமம் 32:32 தேவரீர் அவர்கள் பாவத்தை மன்னித்தருளு வீரானால் மன்னித்தருளும்; இல்லாவிட்டால் நீர் எழுதின உம்முடைய புஸ்தகத்திலிருந்து என் பேரைக் கிறுக்கிப்போடும் என்றான்.
அதுபோல் ஆண்டவராகிய இயேசு தன்னை சிலுவை அடித்தவர்கள் அவரிடம் எந்த ஒரு மனஸ்தாப படவோ அல்லது மன்னிப்பு கேட்கவோ விரும்பாதபோதும் இயேசு இவ்வாறு ஜெபிக்கிறார்
லூக் 23:34அப்பொழுது இயேசு: பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார்
இயேசுவின் வார்த்தையை கேட்டு அல்லது மோசேயின் வார்த்தையை கேட்டு தேவன் மன்னித்தாரா இல்லையா என்பது வேறு விஷயம். அது தேவனின் சித்தம் என்று நாங்கள் விட்டுவிடுகிறோம். ஆனால் நாங்கள் செய்யும் இந்த காரியங்கள் வேத வசனத்தின் அடிப்படையில் தவறில்லை எனபதை கர்த்தருக்குள் நிச்சயித்து அறிந்திருக்கிறோம்.
வசனத்தை மாற்றிமாற்றி சொல்லிக்கொண்டு இதுஅதற்க்கு சொன்னது அது இதற்க்கு சொன்னது என்று சொல்லப்படும் கருத்துக்களை நாங்கள் ஏற்க்க தயாராக இல்லை. யார் மீதாவது கசப்பைஏற்ப்படுத்தி அல்லது யாரையாவது குற்றவாழி என்று தீர்த்து நாங்களும் குற்றவாழி யாகாதபடிக்கு நாங்கள் எல்லோரையும் மன்னித்து எல்லோருக்காகவும் ஜெபிக்கவே விரும்புகிறோம்.
இவ்வளவு உதாரணம் விளக்கம்கள் சொல்லியும் இதை தவறு என்று கருதுகிறவர்கள், கர்த்தருக்குள் தங்களை நிச்சயத்து கொண்டு உங்களுக்குள் அதை வைத்துகொள்ளுங்கள். இங்கு வந்து நாங்கள் செய்வது தவறு என்று சொல்வது தாங்கள் இடருவதொடு அடுத்த வரையும் இடரசெய்வதர்க்கான ஒரு செய்கையே எனபதே எங்கள் கருத்து.
-- Edited by SUNDAR on Tuesday 22nd of November 2011 11:09:17 AM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
12. மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்குமுன்பாக நிற்கக்கண்டேன்; அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன; ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது; அப்பொழுது அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் தங்கள்கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள்
எல்லோரையும் குழப்புவது நாங்கள் அல்ல நீங்களும் உங்கள் வார்த்தையும் தான் நாங்கள் ஒழுங்காக நல்ல கருத்துகளையும்
நல்ல வார்த்தைகளையும் தான் பதிவித்தோம் ஆனால் குழப்ப வாதிகளை போல சம்பந்தம் இல்லாத இடத்தில பல வசனங்களை போட்டு எங்களையும் குழப்பி மற்றவர்களையும் குழப்பிகிண்றீர்கள்
நீங்கள் தேவன் தண்டிப்பார் என்று ஆயிர வசனம் எடுத்து காட்டினால் நான் கூட தேவன் இரக்கம் உள்ளவர் என்று 1000 வசனங்களை எடுத்து காட்ட முடியும் ஆனால் அதினால் என்ன ப்ரோஜினம் சொல்ல வேண்டியதை ஒழுங்காக சொல்ல வேண்டும் அதுவும் அதிக வார்த்தைகள் இல்லாமல் உங்கள் வார்த்தையை பார்த்தாலே படிப்பத்ர்க்கே யோசனை செய்ய வேண்டி இருக்கின்றது ஈசல் போல உள்ளது
உங்களிடம் ஒன்றும் எழுத கூடாது என்று தான் நினைத்தேன் ஆனால் எதற்கு எடுத்தாலும் வசனம் வசனம் என்று தோற்றத்தி படி சொல்கின்றேர்கள் அந்த ஒரே காரத்தினால் தான் நான் பாவி கூட எருசலேமில் இருப்பான் என்று ஒரு வசனத்தை சுட்டி காட்டினேன்
உங்களை போலவே அந்த வசனத்தில் என்ன எழுதி இருக்கின்றதோ
அதை அப்படியே எழுதிவிட்டேன் நீங்கள் ஒரு வசனத்தை அப்படியே எழுதினால் நாங்கள நம்பவேண்டும் அதே நாங்கள் ஒரு வசனத்தை வேதத்தில் இருப்பது போலவே எழுதினால் நீங்கள் நம்பமாட்டீர்கள் காரணம் பிடிவாதமும் அனுபவும் தடுக்கின்றது
நான் ஏற்கனவே சொன்னது போல உங்களுக்கு கடவுள் நேரடியாக
பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு இவைகளில் இருந்து இயேசு கிறிஸ்துவை பற்றிய வசனங்களை
மிக அருமையாய் பதிவிட்டு இருக்கின்றீர்கள்
உங்களிடம் எனக்கும் என் நண்பர்களுக்கும் பிடித்த ஒன்று நீங்கள் வசனங்களை ஆராய்ந்து பதிவிடும் முறையே//
இத்திரியில் அதே எட்வின்:
//நீங்கள் தேவன் தண்டிப்பார் என்று ஆயிர வசனம் எடுத்து காட்டினால் நான் கூட தேவன் இரக்கம் உள்ளவர் என்று 1000 வசனங்களை எடுத்து காட்ட முடியும் ஆனால் அதினால் என்ன ப்ரோஜினம் சொல்ல வேண்டியதை ஒழுங்காக சொல்ல வேண்டும் அதுவும் அதிக வார்த்தைகள் இல்லாமல் உங்கள் வார்த்தையை பார்த்தாலே படிப்பத்ர்க்கே யோசனை செய்ய வேண்டி இருக்கின்றது ஈசல் போல உள்ளது//
//நான் ஏற்கனவே சொன்னது போல உங்களுக்கு கடவுள் நேரடியாக சொன்னாலும் அவரிடமும் 1000 வசனங்களை சுட்டி காட்டுவீர்கள் //
ஏசாயா 66:2 ஆனாலும் சிறுமைப்பட்டு, ஆவியில் நொறுங்குண்டு, என் வசனத்துக்கு நடுங்குகிறவனையே நோக்கிப்பார்ப்பேன்.
5 கர்த்தருடைய வசனத்துக்கு நடுங்குகிறவர்களே, அவருடைய வார்த்தையைக் கேளுங்கள்; என் நாமத்தினிமித்தம் உங்களைப் பகைத்து, உங்களை அப்புறப்படுத்துகிற உங்கள் சகோதரர், கர்த்தர் மகிமைப்படுவாராக என்கிறார்களே; அவர் உங்களுக்குச் சந்தோஷம் உண்டாகும்படி காணப்படுவார்; அவர்களோ வெட்கப்படுவார்கள்.
சுந்தர்:
//தாங்கள் குறிப்பிட்டுள்ள வசனம் சொல்கிரதுபோல் யார் மரணத்துக்கு ஏதுவான பாவம் செய்தவர்கள், யார் பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமாக தூஷணம் பேசியவர்கள் யார் நித்திய அழிவுக்கு நேராக இருப்பவர்கள் என்பதை நாங்கள் அறியோம். எனவே எல்லோருக் காகவும் ஜெபங்களை எறேடுக்கிறோம்.//
1 சாமுவேல் 2:25 ஒருவன் கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்வானேயாகில், அவனுக்காக விண்ணப்பஞ்செய்யத்தக்கவன் யார்
எரேமியா 6:10 அவர்கள் கேட்கும்படி நான் யாரோடே பேசி எச்சரிப்பேன்? அவர்களுடைய செவி விருத்தசேதனமில்லாதது; அவர்கள் கேட்கமாட்டார்கள்; கர்த்தருடைய வசனம் அவர்களுக்கு நிந்தையாயிருக்கிறது; அதின்மேல் அவர்களுக்கு விருப்பமில்லை.
பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு இவைகளில் இருந்து இயேசு கிறிஸ்துவை பற்றிய வசனங்களை
மிக அருமையாய் பதிவிட்டு இருக்கின்றீர்கள்
உங்களிடம் எனக்கும் என் நண்பர்களுக்கும் பிடித்த ஒன்று நீங்கள் வசனங்களை ஆராய்ந்து பதிவிடும் முறையே//
இத்திரியில் அதே எட்வின்:
//நீங்கள் தேவன் தண்டிப்பார் என்று ஆயிர வசனம் எடுத்து காட்டினால் நான் கூட தேவன் இரக்கம் உள்ளவர் என்று 1000 வசனங்களை எடுத்து காட்ட முடியும் ஆனால் அதினால் என்ன ப்ரோஜினம் சொல்ல வேண்டியதை ஒழுங்காக சொல்ல வேண்டும் அதுவும் அதிக வார்த்தைகள் இல்லாமல் உங்கள் வார்த்தையை பார்த்தாலே படிப்பத்ர்க்கே யோசனை செய்ய வேண்டி இருக்கின்றது ஈசல் போல உள்ளது//
//நான் ஏற்கனவே சொன்னது போல உங்களுக்கு கடவுள் நேரடியாக சொன்னாலும் அவரிடமும் 1000 வசனங்களை சுட்டி காட்டுவீர்கள் //
நீங்கள் இதை எழுதுவீர்கள் என்று எனக்கு எப்பொழுதோ தெரியும்
சகோ : அன்பு அவர்களே நீங்கள் எழுதிய வார்த்தைகளே என்னை நல்லவன் என்று சுட்டி காட்டுகின்றது ஆம் இப்பொழுதாவது என்ன புரிந்து கொள்ளுங்கள் நான் சரி என்றால் சரி என்றும் சரி இல்லை
என்றல் சரி இல்லை என்றும் சொல்கின்றவன் என்று
உங்களை போல விடா பிடியாக நான் பிடித்த முயலுக்கு முனு கால்தான் என்று என்னால் சொல்ல முடியாது
ஏன் இப்பொழுதும் சொல்கின்றேன் கேட்டு கொள்ளுங்கள் என் ஆத்துமாவுக்கு ப்ரோஜினமாய் இருக்கின்றதை நாளை நீங்கள்
எழுதினால் திரும்பவும் சகோ : அன்பு அவர்களே மிக அருமை என்று கூறுவேன்
நீங்கள் எழுதும் வார்த்தைகளின் மேல் தான் எனக்கு
கோபமே தவிர உங்கள் மேல் அல்ல என் சகோதரரே...................
-- Edited by EDWIN SUDHAKAR on Tuesday 22nd of November 2011 07:14:24 PM
__________________
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)
கோபமே தவிர உங்கள் மேல் அல்ல என் சகோதரரே...................
அன்பான எட்வின் அவர்களே,நீங்கள் நட்புக்காகவோ வேறு காரணத்துக்காகவோ சார்புநிலை எடுப்பது தவறல்ல.ஆனால் அன்பு அவர்களைப் போன்றோருக்கு இரட்டிப்பான கனத்தைக் கொடுக்கச் சொல்லி வேதம் சொல்லுகிறது.அவர் சொல்லுவது தவறாக இருந்தாலும் நாம் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்போது அதில் தாழ்மை இருத்தல் வேண்டும்.அன்பு அவர்கள் சுமார் 60 வயதுள்ள பெரியவர் என்பதை அறிவீர்களா..? நீங்கள் இன்னும் திருமணமானவரோ அல்லவோ ஐயா அன்பு அவர்கள் பல திருமணங்களை நடத்தியிருக்கக் கூடிய முதிர்ந்த் அனுபவமுள்ளவர்.நீங்கள் அவருடைய வயதை அடையும்போது உங்கள் அறிவின் நிலைமை என்னவாக இருக்குமோ அதைவிட இன்னும் தெளிவாகவும் பொறுமையாகவும் இந்த வயதில் அன்பு அவர்கள் எழுதி வருகிறார்.அவர் எழுதும் பல விஷயங்களில் நியாயம் இருப்பதை நீங்கள் அறியவில்லை.
இன்னும் ஒரு இரகசியத்தை சொல்லுகிறேன், இன்றைக்கு சுந்தர் அவர்கள் எழுதும் பல காரியங்களின் பிதாமகன் அன்பு அவர்களே.! சுந்தரிடம் என்ன ஒரு நல்ல பழக்கம் என்றால் அவர் எந்தவொரு காரியத்தையும் உடனே ஏற்றுக்கொள்ளுவார் அல்லது எதிர்ப்பார். ஆனால் அதனால் அவர் அடையும் மாற்றத்தை யாரும் அறியாத வண்ணம் மறைக்க முயற்சிப்பார், ஆனால் அதை மறைக்க அவருக்குத் தெரியாது. இருவரையும் தொடர்ந்து வாசித்து வரும் நடுநிலையாளனான எனக்கு இருவரையும் நன்கு தெரியும். சுந்தர் அடித்த பல்டிகள் அநேகம்;ஆனால் அன்பு அவர்களோ இதுவரை நேர்த்தியாகவே எழுதி வருகிறார்.அவர் முன்னுக்குப் பின் முரணாக இதுவரை எழுதியதே இல்லை.
இருவரில் ஐயா அன்பு அவர்களிடமே விஷயம் அதிகம்; சுந்தரிடமோ விஷம் அதிகம். விஷம் இனிப்பாக இருக்கும். மருந்து கசப்பாக இருக்கும் என்பதை கருத்தில் கொள்ளவும்.
HMV wrote:இருவரில் ஐயா அன்பு அவர்களிடமே விஷயம் அதிகம்; சுந்தரிடமோ விஷம் அதிகம். விஷம் இனிப்பாக இருக்கும். மருந்து கசப்பாக இருக்கும் என்பதை கருத்தில் கொள்ளவும்.
நான் பெரிய விஷயம் தெரிந்தவன் என்று எங்கும் சொல்லவில்லை சகோதரரே. நான் பாவி என்றும் தேவனிடம் இறக்கங்களுக்காக கெஞ்சுபவன் என்றே எழுதியிருக்கிறேன்.
இந்த திரியில் விவாதிக்கபட்டு வரும் பூகம்ப இடிபாடுகளுக்குள் மாட்டி கொண்ட மனுஷர்களுக்கு மற்றும் டாஸ்மாக் கடைகளில் குடிப்பவர்களுக்கு ஜெபிக்கலாமா கூடாதா? என்பது குறித்து ஒரு சிறிய கருத்து கூற கூரவிரும்பாத சில்சாம் என்னும் HMV என்னை தனிப்பட்ட
முறையில் குறை சொல்வது அல்லது என்னை தரம் தாழ்த்துவதில் மட்டுமே குறியாக இருக்கிறார். அதாவது என்னை கவிழ்ப்பதற்கு யார்கூட வேண்டுமானாலும் அவர் கூட்டு சேர அவர் தயாராக இருக்கிறார் என்பதை அவர் எழுத்துக்கள் காண்பிக்கிறது.
உண்மையில் இவ்விஷயத்துக்காக நான் பெருமை படுகிறேன். ஒரு பெரிய போதகர் அல்லது ஆவிக்குரிய நிலையில் பெரிய மனுஷர் இப்படி ஒரு சாதாரண தெள்ளுபூச்சு போன்ற என்னை துரத்தி துரத்தி வேட்டையாட வந்துள்ளார் என்றால், என்னுடய எழுத்துக்களில் உண்மைகள் இருக்கிறது அது பலருக்கு சுடுகிறது என்பதை நிச்சயம் உணர முடிகிறது.
விஷம் இனிப்பாக இருக்கும் என்ற உண்மையை உலகுக்கு எடுத்து சொல்லி, என்மேல் ஏதாவது பழிபோடுவதிலேயே குறியாக இருக்கும் அவரை ஆண்டவர் ஆசீர்வதிக்கட்டும்!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
அன்பு அவர்களைப் போன்றோருக்கு இரட்டிப்பான கனத்தைக் கொடுக்கச் சொல்லி வேதம் சொல்லுகிறது.அவர் சொல்லுவது தவறாக இருந்தாலும் நாம் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்போது அதில் தாழ்மை இருத்தல் வேண்டும்.அன்பு அவர்கள் சுமார் 60 வயதுள்ள பெரியவர் என்பதை அறிவீர்களா..?
நீங்கள் அவருடைய வயதை அடையும்போது உங்கள் அறிவின் நிலைமை என்னவாக இருக்குமோ அதைவிட இன்னும் தெளிவாகவும் பொறுமையாகவும் இந்த வயதில் அன்பு அவர்கள் எழுதி வருகிறார்.அவர் எழுதும் பல விஷயங்களில் நியாயம் இருப்பதை நீங்கள் அறியவில்லை.
எல்லா மனிதர்களுக்காகவும் இரக்கப்படுவதும், வேண்டுதல் செய்வதும் நல்ல காரியமே. இவ்வாறான ஒரு பெரிய காரியத்தை செய்யும் நீங்கள் "பூகம்ப இடிபாட்டில் மாட்டின மனிதர்களுக்காக இரக்கப்பட்டேன்" என்று அதை மட்டும் சுட்டி காட்டுவது ஏன்? இருபத்து மணி நேரமும் எங்காவது, எதாவது பிரச்சனைகள் மனிதர்களுக்கு இருந்து கொண்டேதான் இருக்கிறது.
இந்த நிலையில் எல்லா மனிதர்களுக்காகவும் இரக்கப்படும், வேண்டுதல் செய்யும் நீங்கள் அதை எப்படி நிறைவேற்றுகிறீர்கள் என்பதை பகிர்ந்து கொண்டால் பிரயோஜனமாக இருக்கும்.
மன்னித்தலில் இரு வகை உண்டு என அன்பு அவர்கள் சுட்டி காட்டினார். அதில் நீங்கள் மன்னித்தது இயேசு கிருஸ்து மன்னித்தது போன்று அதிகாரபூர்வமானதா, அல்லது அவர்கள் உங்களுக்கு செய்த தப்பிதங்களை மன்னிக்கிறீர்களா? என்பதை நீங்கள் தெளிவாக சொல்லவில்லை.
அதிகாரபூர்வமானது என்றால் அப்படி மன்னிக்க நமக்கு ஏதாவது தகுதி வேண்டுமா? அல்லது எல்லா மனிதர்களும் அதை செய்யலாமா என்பதை தெளிவுபடுத்த வேண்டுகிறேன்.
எனது சார்பாக எழுத முன்வந்தமைக்காக நன்றி. ஆகிலும் என்னை மையமாக வைத்து விவாதம் செய்வதை நான் விரும்பவில்லை. வேத வசனங்களினிமித்தம் சகோ.எட்வின் போன்றவர்களால் நான் எவ்வளவாய் விமர்சிக்கப்பட்டாலும் அது என்னைப் பாதிக்காது என்பதை தாங்கள் அறிவீர்கள் என நம்புகிறேன். இதெல்லாம் எனக்கு மிகமிக சகஜமாகிப் போன ஒன்று. எனவே இத்தோடு விட்டுவிடும்படி அன்புடன் வேண்டுகிறேன்.
தங்களுக்கு ஒரு தகவல். எனது வயது 60 எனச் சொல்லி என்னை மிகவும் பெரியவராக்கி (வயதில்தான்) விட்டீர்கள். எனக்கு 54 வயது மட்டுமே ஆகிறது. நீங்கள் சொன்னதுபோல் எனது மகன் மற்றும் மகள் இருவருக்கும் திருமணம் செய்து வைத்த அனுபவத்தைப் பெற்றுவிட்டேன். அத்தோடு கடந்த ஜூலை 3-ம் தேதி எனது மகளுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதால் நான் தாத்தாவாகவும் ஆகிவிட்டேன்.
ஆகிலும், வேதவசனத்தின் அடிப்படையிலான விவாதம் என்று வந்து விட்டால், எட்வின் சொல்வது போல் அங்கு வயதோ, அனுபவமோ எல்லாம் ஒரு பொருட்டல்ல.
சொல்லப்போனால், வசனம் சொல்கிற பிரகாரம், தேவகட்டளைகளைக் கைக்கொள்வதனிமித்தம் எட்வின் போன்ற வயதில் இளையவர்கள் மூத்தவனான என்னைவிட ஞானம் அதிகமுள்ளவர்களாகத்தான் இருப்பார்கள்.
சகோ.எட்வின் தேவகட்டளைகளைக் கைக்கொண்டு, அதன் காரணமாக அவர் என்னைவிட ஞானமுள்ளவராக இருந்தால், எனக்கு நிச்சயம் சந்தோஷமே!
SUNDAR wrote:சில்சாம் என்னும் HMV என்னை தனிப்பட்ட முறையில் குறை சொல்வது அல்லது என்னை தரம் தாழ்த்துவதில் மட்டுமே குறியாக இருக்கிறார். அதாவது என்னை கவிழ்ப்பதற்கு யார்கூட வேண்டுமானாலும் அவர் கூட்டு சேர அவர் தயாராக இருக்கிறார் என்பதை அவர் எழுத்துக்கள் காண்பிக்கிறது.
உண்மையில் இவ்விஷயத்துக்காக நான் பெருமை படுகிறேன். ஒரு பெரிய போதகர் அல்லது ஆவிக்குரிய நிலையில் பெரிய மனுஷர் இப்படி ஒரு சாதாரண தெள்ளுபூச்சு போன்ற என்னை துரத்தி துரத்தி வேட்டையாட வந்துள்ளார் என்றால், என்னுடய எழுத்துக்களில் உண்மைகள் இருக்கிறது அது பலருக்கு சுடுகிறது என்பதை நிச்சயம் உணர முடிகிறது.
விஷம் இனிப்பாக இருக்கும் என்ற உண்மையை உலகுக்கு எடுத்து சொல்லி, என்மேல் ஏதாவது பழிபோடுவதிலேயே குறியாக இருக்கும் அவரை ஆண்டவர் ஆசீர்வதிக்கட்டும்!
திரு.சுந்தர் அவர்களே, ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் சொல்லுவதால் உண்மையாகிவிடாது என்பதை அறிவீர்கள் என்று எண்ணுகிறேன், உண்மையில் நான் வெறும் வாசகனாக மட்டுமே இருந்திருக்கலாம் போலிருக்கிறது. நான் பயந்து பயந்து எழுதியதை வைத்து இவ்வளவு பெரிய பெரிய பழிகளை என்மீது போடுவீர்கள் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. நீங்கள் உங்களைத் தாழ்த்திக்கொள்ளுவதுபோல தாழ்த்தி மற்றொருவரை முகாந்தரமில்லாமல் தூஷிக்கிறீர்களே இது நியாயமா ? சில்சாம் என்பவரை நீங்கள் நீக்கிவிட்டீர்கள் அல்லவா, பிறகு அவர் எப்படி இங்கு வந்து எழுதுவார் ? அவர் எங்கே தன்னை பெரிய போதகர் என்று சொல்லிக்கொண்டாரோ அறியேன், ஏதோ நீங்கள் சொன்னபிறகே அவருடைய பெருமைகள் தெரிய வருகிறது.
நீங்கள் சரியான நிர்வாகியாக இருந்தால் மூத்த உறுப்பினரான அன்பு அவர்களை சரிநிகர் சமானமாக எழுதும் எட்வின் அவர்களைக் கண்டித்திருக்க வேண்டும்.அவருடைய வயதுக்குரிய மரியாதையை தர மனமில்லாமல் சமவயதுள்ளவரிடம் வாதாடுவது போல அவரோடு நீங்கள் இருவரும் பெருந்தன்மையுடன் அல்ல, பெருமையுடன்- எல்லாம் அறிந்த செருக்குடன் எழுதுவதைக் கண்டு மெய்யாகவே நான் மனவேதனை அடைந்தேன். அவரைப் போல பொறுமையாக எழுத எனக்குத் தெரியவில்லை, நீங்கள் ஏற்கனவே அறிந்தவண்ணமாக எனக்கு ஒன்றும் தெரியாது.
ஆனால் நீங்கள் பல விஷயங்களில் மார்க்க எல்லைகளை மீறி ஏதோ ஒரு ஆவி வந்து எல்லாவற்றையும்- வேதத்தில் இல்லாததைக் கூட போதிக்கிறது என்று அசட்டு தைரியத்தில் எதையெதையோ எழுதி வருகிறீர்கள் என்று மட்டும் தெரிகிறது. முழுவதும் வெள்ளையான ஒரு உடையில் ஒரு சிறிய கறை கூட எளிதாக தெரியும் அல்லவா, அதைப் போல நீங்கள் பொதுவாக நல்லவர் போலத் தெரிந்தாலும் கூர்ந்து கவனித்தால் மட்டுமே உங்களிடம் உள்ள உபதேசப் பிழைகள் தெரிகிறது; அதனை மறுக்கவோ எனக்குத் தெரியவில்லை, என்ன செய்யலாம், சொல்லுங்கள்.
எனவே அன்பு போன்றவர்களை கோபித்துக்கொள்ளாமல் அவரிடம் கேள்விகளாகக் கேட்டு விஷயத்தை அறிந்து பிறகு நீங்கள் அறிந்தவற்றோடு ஒப்பிட்டு பாருங்களேன்.
எட்வின் உங்களுக்கு ஒரு வார்த்தை: நீங்கள் ஐயா அன்பு அவர்களைவிட நீங்கள் புத்திசாலியாக இருந்திருந்தால் முதலில் உங்களுடைய எழுத்துக்களில் பணிவும் தாழ்மையும் இருந்திருக்கும். அது இல்லாத உங்களிடம் எதுவுமே இருக்காது என்று நம்புகிறேன்.
ஆனால் அன்பு அவர்களிடம் அந்த பணிவும் தன்னடக்கமும் இருப்பதால் உங்களுக்கு பொறுமையாக பதிலளிக்கிறார், பாருங்கள்.அவருக்கு உங்களைப் போல கொஞ்சமாவது பெருமையோ சுயமரியாதையோ இருந்திருந்தால், சுந்தர் அவர்கள் அடிக்கடி இங்கே எழுதப்படும் கருத்துக்களில் ஒத்துப்போகாதோர் தாராளமாக வெளியேறலாம் என்பதாக எழுதும்போதே வெளியேறிருப்பார். அவர் பொழுதுபோக்க அல்ல சத்திய வேதத்தை காக்கவே உங்களோடு போராடுகிறார் என்று எண்ணுகிறேன்.
என்னை பொறுத்துக்கொள்ளும் எல்லோருக்கும் நன்றி, நண்பர்களே.
//நீங்கள் இதை எழுதுவீர்கள் என்று எனக்கு எப்பொழுதோ தெரியும்//
ஆனால் உங்களது பின்வரும் பதிவுக்குமுன்னர், இதை எழுதவேண்டும் என நான் சற்றும் நினைத்துப்பார்க்கவில்லை.
//நீங்கள் தேவன் தண்டிப்பார் என்று ஆயிர வசனம் எடுத்து காட்டினால் நான் கூட தேவன் இரக்கம் உள்ளவர் என்று 1000 வசனங்களை எடுத்து காட்ட முடியும் ஆனால் அதினால் என்ன ப்ரோஜினம் சொல்ல வேண்டியதை ஒழுங்காக சொல்ல வேண்டும் அதுவும் அதிக வார்த்தைகள் இல்லாமல் உங்கள் வார்த்தையை பார்த்தாலே படிப்பத்ர்க்கே யோசனை செய்ய வேண்டி இருக்கின்றது ஈசல் போல உள்ளது//
ஒரு காலத்தில் நான் நிறைய வசனங்களை எடுத்துப்போட்டு பதிகையில் அதைப் பாராட்டின நீங்கள், தற்போது நான் வசனங்களை எடுத்துப்போட்டு பதிகையில் அதை ஏளனமாகக் கருதியதால்தான் உங்களது “ஒரு பக்கச் சார்புநிலையை” மற்றவர்கள் புரிந்துகொள்வதற்காக உங்களது பழைய பதிவை எடுத்துப்போட்டேன்.
மாத்திரமல்ல, அன்று நான் பக்கம் பக்கமாக எழுதியபோது அவற்றை சலிப்பின்றி படித்த நீங்கள், தற்போது எழுதுவதை “ஈசல் போல்” கருதும் தங்களது இருவேறு மனோபாவத்தை மற்றவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவும் உங்களது பழைய பதிவை எடுத்துப்போட்டேன்.
எனது பதிவுகள் அன்றும் இன்றும் ஒரேவிதமாகத்தான் உள்ளன. ஆம், அன்றும் ஏராள வசனங்கள் இருந்தனை, வார்த்தைகள் அதிகமாக இருந்தன; இன்றும் ஏராள வசனங்கள் உள்ளன, வார்த்தைகளும் அதிகமாக உள்ளன. ஆனால் அன்றைய பதிவுகள் உங்கள் கருத்துக்கு இசைவாக இருந்ததால் அவற்றை வரவேற்றீர்கள்; தற்போதைய பதிவுகள் உங்கள் கருத்துக்கு எதிராக இருப்பதால், குறிப்பாக உங்களால் எதிர்வாதம் வைக்கமுடியாத அளவுக்கு இருப்பதால், அவற்றை வெறுக்கிறீர்கள். உங்களது இயலாமையின் காரணமாக வெறுப்படைகிறீர்கள்.
உங்களிடம் தாழ்மை இல்லை என சகோ.HMV சொன்னதற்கு முக்கிய காரணம், பின்வரும் உங்கள் வரிதான்.
//சொல்ல வேண்டியதை ஒழுங்காக சொல்ல வேண்டும்//
விவாதத்தில் இயலாமை நிலையை அடைபவர்கள்தான் இப்படிப்பட்ட தனிப்பட்ட விமர்சனங்களை வைப்பார்கள். விவாத நியதிப்படி இம்மாதிரி விமர்சனங்களை ஒருபோதும் வைக்கக்கூடாது. எதிராளி ஒழுங்காக எழுதவில்லை எனில், அதைச் சுட்டிக்காட்ட உங்களுக்கு முழு உரிமை உண்டு. ஆனால், எதிராளி ஒழுங்கற்றவிதமாகச் சொன்னதில் ஒரு வரியையாவது எடுத்துப்போட்டுச் சொல்வதுதான் விவாத இலக்கணமாகும். மாறாக, மொட்டையாக உனது எழுத்தில் ஒழுங்கில்லை எனச் சொல்வது எதிராளியை மிகவும் அவமதிப்பதாகும். அதுவும் உங்களைவிட சுமார் 20 வருடம் மூத்தவரான என்னிடம் ஒழுங்கு பற்றி நீங்கள் சொன்ன அறிவுரை, உங்களை மேட்டிமையானவராகக் காட்டுவதால்தான், உங்களிடம் தாழ்மை இல்லை என HMV சொன்னார்.
இப்போதும் ஒன்றும் கெட்டுப்போகவில்லை. நான் ஒழுங்கற்ற விதமாக எழுதின பதிவுகளில் ஒன்றை எடுத்துக்காட்டி, இப்படியாக இப்பதிவு ஒழுங்கற்றதாக உள்ளது எனச் சொல்லுங்கள். நான் என்னை திருத்திக்கொள்கிறேன், அல்லது விலகிக்கொள்கிறேன்.
இத்திரியை துவக்கியவர் சுந்தர். மனிதர்களின் சரீரப்பிரகாரமான வேதனை சம்பந்தமாக அவரது கருத்தை வைத்தார். அக்கருத்துக்கு எதிராக நான் எனது விவாதத்தை வைத்தேன். இடையில் நீங்கள் புகுந்து, மனிதர்களின் பாவம் சம்பந்தமாக விவாதத்தை திசைதிருப்பி விட்டீர்கள்.
அப்படியே விவாதம் சென்று கொண்டிருக்கையில், மனிதர்களின் எல்லா பாவங்களையும் நாம் மன்னிக்க வேண்டும் என்ற கருத்தை சுந்தர் சொன்னதால், மீண்டும் விவாதம் திசை திரும்பியது. மனிதர்களின் எல்லா பாவங்களையும் நாம் மன்னிக்கவேண்டும் என்பதோடு, தேவனும் அவர்களை மன்னிக்கும்படி ஜெபிக்கவேண்டும் எனச் சொல்லி, ஜெபித்தல் சம்பந்தமாகவும் விவாதத்தை திசை திருப்பி விட்டார் சுந்தர்.
இப்படியாக நீங்கள் இருவரும் விவாதத்தை திசை திருப்பி, விவாதத்தின் ஒழுங்கை குலைத்துப்போட்டுவிட்டு, நான் ஒழுங்காக விவாதம் செய்யவில்லை என்கிறீர்கள்.
மனிதர்களின் துன்பத்துக் காரணம் சாத்தான் தான் எனும் கருத்தைச் சொன்ன சுந்தர், அதே கருத்தின் அடிப்படையில் விவாதம் செய்யாமல் எப்படி எப்படியோ சென்றுவிட்டு, தற்போது இப்படியாகச் சொல்கிறார்.
//இந்த திரியில் விவாதிக்கபட்டு வரும் பூகம்ப இடிபாடுகளுக்குள் மாட்டி கொண்ட மனுஷர்களுக்கு மற்றும் டாஸ்மாக் கடைகளில் குடிப்பவர்களுக்கு ஜெபிக்கலாமா கூடாதா? என்பது குறித்து ...//
யாருக்காகவும் ஜெபிப்பதைக் குறித்து விவாதம் தொடங்கவில்லை. மனிதர்களின் துன்பத்துக்குக் காரணமாக சாத்தானைப் பழிபோடுவதில்தான் விவாதம் தொடங்கியது. ஆனால் விவாதம் திசை திரும்பி இப்படியாக ஆகிவிட்டது.
அதிலும் பூகம்ப இடிபாடுகளுக்குள் மாட்டிக்கொண்ட மனுஷர்களுக்காக ஜெப்பிக்கக்கூடாதென்றோ, குடிப்பவர்களுக்காக ஜெபிக்கக்கூடாதென்றோ நான் எதுவும் சொல்லவில்லை. மனிதர்கள் தேவனுக்கு விரோதமாக செய்கிற பாவங்களை நாம் மன்னிக்கவேண்டியதுமில்லை, அதற்காக தேவனிடம் ஜெபிக்க வேண்டியதுமில்லை என்பதே என் வாதம். டாஸ்மாக் குடிகாரர்கள் பற்றி நான் பதித்த பதிவு:
//உதாராணமாக, “தேவனே டாஸ்மாக் சென்று குடிக்கும் இவனை தயவாக மன்னியும். இவன் குடிப்பதற்கு இவன் காரணமல்ல; டாஸ்மாக்கை திறந்துவிட்ட அரசாங்கமும், டாஸ்மாக் எங்கிருக்கிறது என அறியும் அறிவை நீர் இவனுக்குக் கொடுத்ததும்தான் காரணம். மாத்திரமல்ல, இதற்கெல்லாம் பின்னணியாகச் செயல்படும் சாத்தான்தான் பிரதான காரணம். எனவே இவனை மன்னித்து, இவனை உம்முடைய ராஜ்யத்தில் தயவாய் சேர்த்துக்கொள்ளும். அற்ப மனிதனான நானே இவனுக்காக இத்தனை இரக்கப்படுகையில், இரக்கத்தில் ஐசுவரியவானாகிய நீர் இவன் மீது இரக்கங்கொள்ளக்கூடாதா? எனவே இவனுக்கு மட்டுமல்ல, இவனைப் போன்ற பாவிகள் எல்லாருக்கும் இரங்கும், எல்லாரையும் மன்னியும், எல்லாரையும் உம்முடைய ராஜ்யத்தில் சேர்த்துக்கொள்ளும்” என்றெல்லாம் ஜெபிக்கலாமா?//
இப்படி ஜெபிக்கக்கூடாது என்பதே எனது கருத்து. மற்றபடி, “தேவனே அறிவில்லாத இந்த குடிகாரர்களுக்கு நல்ல புத்தியைக் கொடும்” எனும் விதமாக ஜெபிப்பதுபற்றி நான் எதுவும் சொல்லவில்லை.
ஆகிலும் பின்வரும் வசனத்தை நினைவூட்ட நான் கடமைப்பட்டுள்ளேன்.
வெளி. 22:11 அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும்; அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும். 12 இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.