கிறிஸ்துவர்களான நாம் அனைத்து தேவ நியமங்களையும்,கற்பனைகளையும் கைகொள்ளவேண்டியவர்கள் என்பதில் ஒருவற்கும் மாற்று கருத்து இருக்கலாகாது.
இறுதி காலத்தில் வாழும் நாம் வேதத்தின் கால நியமங்களை அறிந்து கொள்ள ஓய்வு நாளை பற்றி அறியவேண்டியதின் முக்கியத்தை நாம் உணரவேண்டும் என்பது தான் இத்திரி ஆரம்பிக்கப்பட்ட நோக்கம் ..
நம் அநேகரின் மனதில் ஓடும் கேள்விகள் சில தான் இவை...
ஓய்வு நாள் என்றால் என்ன?
புதிய ஏற்பாட்டு காலத்தில் வாழும் நாம் ஓய்வுநாளை கடைபிடிக்க வேண்டுமா?
ஓய்வு நாளை எவ்வாறு அனுசரிக்க/கடைபிடிக்க வேண்டும்?
அணைத்து நாளையும் ஓய்வு நாளை போல் அனுசரிக்கலாமா?
நாம் கைகொள்ளும் நாட்காட்டியானது தேவன் சொல்லிய படியான சந்திரன்,சூரியனை அடிப்படையாககொண்ட காலத்தை அறிவிக்கும் நாள் காட்டியா?
நாம் பின்பற்றும் ஞாயிற்று கிழமை ஓய்வு நாள் தானா??
ஓய்வு நாள் எவ்வளவு முக்கியமானது? அதன் பலன் என்ன??
அறிந்த சகோதரர்கள் பணியிடை ஓய்வு வேளைகளில் கருத்துகளை அறிய தரலாமே!!
GLORY TO GOD
----------------------------------------------
கொலோசெயர் 2 :16 ,17 ஆகையால், போஜனத்தையும் பானத்தையும் குறித்தாவது, பண்டிகைநாளையும் மாதப்பிறப்பையும் ஓய்வுநாட்களையுங்குறித்தாவது, ஒருவனும் உங்களைக் குற்றப்படுத்தாதிருப்பானாக. அவைகள் வருங்காரியங்களுக்கு நிழலாயிருக்கிறது; அவைகளின் பொருள் கிறிஸ்துவைப்பற்றினது.
கிறிஸ்துவர்களான நாம் அனைத்து தேவ நியமங்களையும்,கற்பனைகளையும் கைகொள்ளவேண்டியவர்கள் என்பதில் ஒருவற்கும் மாற்று கருத்து இருக்கலாகாது.
இறுதி காலத்தில் வாழும் நாம் வேதத்தின் கால நியமங்களை அறிந்து கொள்ள ஓய்வு நாளை பற்றி அறியவேண்டியதின் முக்கியத்தை நாம் உணரவேண்டும் என்பது தான் இத்திரி ஆரம்பிக்கப்பட்ட நோக்கம் ..
நம் அநேகரின் மனதில் ஓடும் கேள்விகள் சில தான் இவை...
ஓய்வு நாள் என்றால் என்ன?
யாத்திராகமம் 35:2நீங்கள் ஆறுநாள் வேலைசெய்ய வேண்டும், ஏழாம்நாளோ உங்களுக்குப் பரிசுத்த நாளாய் இருப்பதாக; அது கர்த்தருக்கென்று ஓய்ந்திருக்கும் ஓய்வுநாள்;
லேவி 23:3ஆறுநாளும் வேலை செய்யவேண்டும்; ஏழாம்நாள் பரிசுத்த சபைகூடுதலான ஓய்வுநாள், அதில் ஒரு வேலையும் செய்யவேண்டாம்;
JOHN12 wrote:
////புதிய ஏற்பாட்டு காலத்தில் வாழும் நாம் ஓய்வுநாளை கடைபிடிக்க வேண்டுமா?////
அப் 18:4ஓய்வுநாள் தோறும் அவன் ஜெபஆலயத்திலே சம்பாஷணைபண்ணி, யூதருக்கும் கிரேக்கருக்கும் புத்தி சொன்னான்.
அப்போஸ்தலர் 17:2பவுல் தன் வழக்கத்தின்படியே அவர்களிடத்தில் போய், மூன்று ஓய்வுநாட்களில் வேதவாக்கியங்களின் நியாயங்களை எடுத்து அவர்களுடனே சம்பாஷித்து,
பவுல் ஒய்வு நாளை கைகொண்டாரா இல்லையா என்பது தெளிவாக இல்லாவிட்டாலும் மேலேயுள்ள வசனங்கள் அவர் கைகொண்டிருக்க கூடும் என்று அறிவுறுத்துகிறது அவரது காலத்தில் ஓய்வுநாளை கைகொள்ளும் வழக்கம் இருந்துள்ளது.
அத்தோடு ஆண்டவராகிய இயேசுவிடம் ஓய்வுநாளை குறித்து பரிசேயர்கள் கேள்வி எழுப்பிய போது இயேசு எங்கும் "ஓய்வுநாள் ஓய்ந்து போனது" என்று சொல்லாமல் ஓய்வுநாளில் நன்மை செய்வது நியாயம்தான் என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளார்.
JOHN12 wrote:
//ஒய்வு நாளை எவ்வாறு அனுசரிக்க/கடைபிடிக்க வேண்டும்?//
வேதம் சொல்லும் முக்கிய அனுசரிப்பு முறை இதுதான்:
ஏசாயா 58:13என் பரிசுத்தநாளாகிய ஓய்வுநாளிலே உனக்கு இஷ்டமானதைச் செய்யாதபடி, உன் காலை விலக்கி, உன்வழிகளின்படி, நடவாமலும், உனக்கு இஷ்டமானதைச் செய்யாமலும், உன் சொந்தப்பேச்சைப் பேசாமலிருந்து, ஓய்வுநாளை மனமகிழ்ச்சியின் நாளென்றும், கர்த்தருடைய
பரிசுத்த நாளை மகிமையுள்ள நாளென்றும் சொல்லி, அதை மகிமையாக எண்ணுவாயானால்,
எரேமியா 17:21நீங்கள் ஓய்வுநாளில் சுமைகளை எடுத்து, அவைகளை எருசலேமின் வாசல்களுக்குள் கொண்டுவராதபடிக்கும், எரேமியா 17:22 ஓய்வுநாளில் உங்கள் வீடுகளிலிருந்து சுமையை கொண்டு போகாதபடிக்கும், ஒரு வேலையையும் செய்யாதபடிக்கும், உங்கள் ஆத்துமாக்களுக்காக எச்சரிக்கையாயிருந்து, நான் உங்கள் பிதாக்களுக்குக் கட்டளையிட்டபடி ஓய்வுநாளைப் பரிசுத்தமாக்குங்கள் என்று
கர்த்தர் சொல்லுகிறார்.
மேலும் ஒய்வு நாளில் சபைகூடுதலும் அனுசரிப்பு முறைகளில் ஓன்று:
லேவியராகமம் 23:3ஆறுநாளும் வேலை செய்யவேண்டும்; ஏழாம்நாள் பரிசுத்த சபைகூடுதலான ஓய்வுநாள்,
அப்ர் 13:14அவர்கள் பெர்கே பட்டணத்தைவிட்டுப் புறப்பட்டு,பிசீதியா நாட்டிலுள்ள அந்தியோகியாவுக்கு வந்து, ஓய்வுநாளிலே ஜெபஆலயத்தில் பிரவேசித்து, உட்கார்ந்தார்கள்.
JOHN12 wrote: ///அணைத்து நாளையும் ஓய்வு நாளை போல் அனுசரிக்கலாமா?///
யாத்திராகமம் 20:11கர்த்தர் ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி, ஏழாம்நாளிலே ஓய்ந்திருந்தார்; ஆகையால், கர்த்தர் ஓய்வுநாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.
தேவன் நியமித்த நாளை மட்டுமே ஒய்வுநாளாக ஆசாரிக்க முடியும் என்றே கருதுகிறேன்.
சூரியனை அடிப்படையாககொண்ட காலத்தை அறிவிக்கும் நாள் காட்டியா?///
ஆயிரம் வருடங்களை ஒரு நாளாக பாவிக்கும் தேவனுடைய மேன்மைக்கும் அருகே செல்லும் தகுதி நமக்கில்லை. நம்மை
பொறுத்தவரை " சாயங்காலமும் விடியற்காலமுமாகி முதலாம் நாள் ஆயிற்று" என்ற வார்த்தைபடி சாயங்காலம்
தொடங்கி அடுத்த சாயங்கலாம் வரை ஒரு நாள் என்று எடுத்துகொள்ள முடியும்.
லேவியராகமம் 23:32 ஒன்பதாந்தேதி சாயங்காலம் துவக்கி, மறுநாள் சாயங்காலம்மட்டும் உங்கள் ஓய்வை ஆசரிக்கக்கடவீர்கள் என்றார்.
JOHN12 wrote: . ////நாம் பின்பற்றும் ஞாயிற்று கிழமை ஓய்வு நாள் தானா??
எந்த வசனமும் கிழமைகளை குறித்து சொல்லவில்லை "ஆறுநாள் வேலை செய்யவேண்டும்" அது நமது வசதிக்கு ஏற்றாற்போல் எந்த ஆறு நாளாகவும் இருக்கலாம் ஏழாம்நாள் வேலை செய்யாமல் ஒய்ந்திருப்பது அவசியம்
JOHN12 wrote:
///ஓய்வு நாள் எவ்வளவு முக்கியமானது? அதன் பலன் என்ன??///
நாம் கர்த்தருடைய ஜனங்கள் என்பதை அடையாளம் காட்டுவது இந்த் ஓய்வுநாள்!
யாத்திராகமம் 31:13நீ இஸ்ரவேல் புத்திரரை நோக்கி, நீங்கள் என் ஓய்வுநாட்களை ஆசரிக்க வேண்டும்; உங்களைப் பரிசுத்தப் படுத்துகிற கர்த்தர் நான் என்பதை நீங்கள் அறியும்படி, இது உங்கள் தலைமுறைதோறும் எனக்கும் உங்களுக்கும் அடையாளமாயிருக்கும்
எசேக்கியேல் 20:12நான் தங்களைப் பரிசுத்தம்பண்ணுகிற
கர்த்தர் என்று அவர்கள் அறியும்படிக்கு, எனக்கும் அவர்களுக்கும் அடையாளமாய் இருப்பதற்கான என் ஓய்வுநாட்களையும் அவர்களுக்குக் கட்டளையிட்டேன்
எசே 20:20என் ஓய்வுநாட்களைப் பரிசுத்தமாக்குங்கள்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று நீங்கள் அறியும்படிக்கு அவைகள் எனக்கும் உங்களுக்கும் அடையாளமாயிருக்கும் என்றேன்.
அத்தோடு ஒய்வு நாளானது கர்த்தருடையதும் கர்த்தரால் ஆசீர்வதிக்கபட்டதுமான நாள் அதில் கர்த்தரின் சித்தம்
செய்யும்போது நிச்சயம் மேன்மை உண்டு.
ஏசா 56:2ஓய்வுநாளைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதபடி ஆசரித்து, ஒரு பொல்லாப்பையும் செய்யாதபடி தன் கையைக் காத்துக்கொண்டிருக்கிற மனுபுத்திரனும் பாக்கியவான்.
சகோதரர் ஜான்12 அவர்களின் கேள்விக்கு வசன அடிப்படையில் நான் அறிந்த பதில்கள் தவறு இருந்தால் திருத்தவும்:
-- Edited by SUNDAR on Friday 8th of June 2012 11:04:00 AM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
சகோ.சுந்தர் அவர்களின் விரிவான பதில்களுக்கு நன்றி..
Bro sundar//எந்த வசனமும் கிழமைகளை குறித்து சொல்லவில்லை "ஆறுநாள் வேலை செய்யவேண்டும்" அது நமது வசதிக்கு ஏற்றாற்போல் எந்த ஆறு நாளாகவும் இருக்கலாம் ஏழாம்நாள் வேலை செய்யாமல் ஒய்ந்திருப்பது அவசியம்.. //
நமது வசதிக்கேற்ப ஓய்வு நாளை நாமே நியமித்து அனுசரிக்கலாம் என்கிறீர்கள். அனால்..
Bro.sundar//யாத்திராகமம் 20:11 கர்த்தர் ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி, ஏழாம்நாளிலே ஓய்ந்திருந்தார்; ஆகையால், கர்த்தர் ஓய்வுநாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.
தேவன் நியமித்த நாளை மட்டுமே ஒய்வுநாளாக ஆசாரிக்க முடியும் என்றே கருதுகிறேன். //
தேவன் நியமித்த நாளை தான் ஓய்வு நாளாக ஆசாரிக்க வேண்டும்என்றும் கூறுகிறீர்கள். எவ்வாறு? தயவு செய்து சகோதரர் விளக்கவும்..
முதலாம் நாள் முதற்கொண்டு ஆறாம் நாள் வரை கர்த்தர் செய்ததை நாம் அறிந்திருகிரோமே, முதலாம் நாள் கிரியையை வேறொரு நாளின் கிரியையாக கூற இயலாது. ஆதியில் தேவன் செய்த ஒவ்வொரு நாளின் கிரியையும் தெளிவாய் உள்ளது.. ஆகவே நாமாக ஒருநாளாய் ஓய்வு நாளாக ஆசாரிப்பது சரியாய் இருக்காது என கூற இயலும்.
சூரியனை அடிப்படையாககொண்ட காலத்தை அறிவிக்கும் நாள் காட்டியா?///
ஆயிரம் வருடங்களை ஒரு நாளாக பாவிக்கும் தேவனுடைய மேன்மைக்கும் அருகே செல்லும் தகுதி நமக்கில்லை. நம்மை
பொறுத்தவரை " சாயங்காலமும் விடியற்காலமுமாகி முதலாம் நாள் ஆயிற்று" என்ற வார்த்தைபடி சாயங்காலம்
தொடங்கி அடுத்த சாயங்கலாம் வரை ஒரு நாள் என்று எடுத்துகொள்ள முடியும்.///
சங்கீதம் 104:19சந்திரனைக் காலக்குறிப்புகளுக்காகப் படைத்தார்; சூரியன் தன் அஸ்தமனத்தை அறியும்.
என வேதம் கூறுவதை கண்ணோக்கி,நாம் பின்பற்றும் கிரிகோரியன் நாட்காட்டியின் காரியங்களை ஆராய்ந்தால் அது வேதத்திற்கு புறம்பான அல்லது வேதம் குறிப்பிடாத ஒரு நாளையே ஓய்வு நாள் (ஹொலிடே-சண்டே) என அறிய முடிகிறது..
லாஜிக் ஆக யோசித்தாலும், நமது தற்போதைய நாட்காட்டியின் படி முதல் நாள் ஞாயிறு.ஆனால் அதையே ஓய்வு நாள் என்கிறோம். அதற்காக சனி கிழமை தான் ஓய்வு நாள் என கூற துணியவில்லை.
வேதம் காட்டும் படி நம் தேவனானவர் காலங்களையும் சமயங்களையும் மாற்றுகிறவர்.
இவ்வசனத்தை எழுதிய தானியேலே பின்வரும் ஒருவனை பற்றியும் கூறியுள்ளார்.
தானியேல் 7:25 உன்னதமானவருக்கு விரோதமாக வார்த்தைகளைப் பேசி, உன்னதமானவருடைய பரிசுத்தவான்களை ஒடுக்கி, காலங்களையும் பிரமாணங்களையும் மாற்ற நினைப்பான்; அவர்கள் ஒருகாலமும், காலங்களும், அரைக்காலமும் செல்லுமட்டும் அவன் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவார்கள்.
தேவனை போல தன்னை காண்பிக்க முனையும் மேற்கூறப்பட்ட அந்த நபர், நம் உன்னதமானவருக்கு விரோதமான வார்த்தைகளை பேசும் அந்தி கிறிஸ்துவே.. அவன் அவிசுவாசிகளை ஆதாய படுத்திக்கொள்ள தேவனை போல தம்மை காண்பிக்க மெய் தேவனுக்கு முன்பாக பெருமையானவைகளை பேசி, தேவன் நியமித்த கால பிரமானமானங்களை மாற்ற முனைவான். அவன் காலத்தில் மாற்றுதலில் வெற்றியடைந்தானா அல்லது தொல்வியடைந்தானா என வேதத்தில் தரப்படவில்லை.
ஆனாலும் நாம் பின்பற்றும் நாள் காடியானாது பல மாறுதல்களை சந்தித்துள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. ஓய்வு நாளை சரியாய் ஆராயாமல் ஞாயிறு என நியமித்த கான்ஸ்டடின் எனும் அரசனிடம் தவறா? அல்லது பழம்பெரும் போப்புகளின் தவறா புரியவில்லை..
சிறுபான்மையை கிறிஸ்துவர்களை எதிர்க்கும் மனப்பாங்கு உள்ள நம் தேசத்திலும் இந்த ஞாயிறு-ஓய்வு நாள் கான்செப்ட் உள்ளது.
இதற்க்கு காரணம்
வெள்ளையர் ஆட்சி தான் என நான் கருதவில்லை. எந்த இந்து அமைப்பும் நான் அறிந்த வரையில் ஓய்வு நாளை மாற்ற கூறி அரசிடம்,நீதி மன்றத்திலும் முறையிட்டதும் இல்லை.
காரணம்! எஞ்சி இருக்கும் கொஞ்ச உண்மை கிறிஸ்தவர்களையும் தவறான ஆசாரிப்புகளில் ஈடு படுத்தி அவித்து போடும் சாத்தானின் திட்டமாகவும் இது இருக்கலாம்..
அணைத்து நாளிலும் தேவனை ஆராதிக்க கிருபை பெற்றவர்கள் நாம். ஆனாலும் ஓய்வு நாளை அனுசரிக்க தேவ நியமங்களையும்,காலங்களையும்,பிரமாணங்களையும் தேவ சமூகத்தில் ஆராய்ந்து அறியும் படியான நிலையில் தான் நாம் உள்ளோம் என்பதை சகோதரர்கள் அறிவார்களாக..
கொலோசெயர் 2 :16 ,17 ஆகையால், போஜனத்தையும் பானத்தையும் குறித்தாவது, பண்டிகைநாளையும் மாதப்பிறப்பையும் ஓய்வுநாட்களையுங்குறித்தாவது, ஒருவனும் உங்களைக் குற்றப்படுத்தாதிருப்பானாக. அவைகள் வருங்காரியங்களுக்கு நிழலாயிருக்கிறது; அவைகளின் பொருள் கிறிஸ்துவைப்பற்றினது.
வரும் காலத்தின் நிழலாகவும்,கிறிஸ்துவை பொருளாகவும் கொண்டுள்ள ஓய்வு நாளின் காரியங்களை நாம் எப்படி நமக்குள் நிச்சயித்து ஆசாரிக்கிறோம் என்பதும் முக்கியமல்லவா..
சரியான 'சபாத்' எனபடுகிற நம் தேவனின் ஓய்வு நாள் ஆசாரிப்பை சரியானபடி நியமித்து வேதத்தின் படி கைகொள்ள வேண்டியதை மிக அவசியமாக கருதியே இத்திரியை தொடங்கினேன்..
கர்த்தர் காரியங்களை விளங்கிக்கொள்ள,தம் நியமங்களை கைக்கொள்ளவும் நம் அனைவருக்கும் கிருபை செய்வாராக..
தேவனுக்கு மகிமை உண்டாகுக!!
-- Edited by JOHN12 on Friday 15th of June 2012 07:26:21 PM
////Bro.sundar//யாத்திராகமம் 20:11 கர்த்தர் ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி, ஏழாம்நாளிலே ஓய்ந்திருந்தார்; ஆகையால், கர்த்தர் ஓய்வுநாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.
தேவன் நியமித்த நாளை மட்டுமே ஒய்வுநாளாக ஆசாரிக்க முடியும் என்றே கருதுகிறேன். //
தேவன் நியமித்த நாளை தான் ஓய்வு நாளாக ஆசாரிக்க வேண்டும்என்றும் கூறுகிறீர்கள். எவ்வாறு? தயவு செய்து சகோதரர் விளக்கவும்.////
சதோதரர் அவர்களே தேவன் நியமித்த நாளை மட்டுமே நாம் ஒய்வு நாளாக அனுசரிக்க முடியும் ஆனால் தேவன் எந்த நாளை நியமித்தார் அவர் எந்த நாளில் வானம் பூமியை படைத்தார் என்பது திட்டவட்டமாக நமக்கு தெரியாத பட்சத்தில் வேதம் சொல்வதுபோல் "ஆறு நாள் வேலை செய்துவிட்டு ஏழாம் நாளை ஒய்வுநாளாக அனுசரிப்பதில்" தவறு எதுவும் இருப்பதுபோல் எனக்கு தெரியவில்லை.
நாம் ஆசாரிக்கும் நாள் தவறானதாக இருந்தால் தேவன் அது குறித்த உண்மையை நமக்கு வெளிப்படுத்தி நம்மை திருத்தலாமே.
ஏசாயா 30:21நீங்கள் வலதுபுறமாய்ச் சாயும் போதும், இடதுபுறமாய்ச் சாயும்போதும்: வழி
இதுவே, இதிலே நடவுங்கள் என்று உங்களுக்குப் பின்னாலே சொல்லும் வார்த்தையை உங்கள் காதுகள் கேட்கும்.
என்று வேதம் நமக்கு வாக்கு பண்ணுகிறதே.
.
அடுத்து தாங்கள் சுட்டியுள்ள வசனத்தின்படியே நானும் விசுவாசிக்க்றேன்:
தேவன் நினைத்தால் எல்லா கால நேரங்களையும் நமக்கு சாதகமாக மாற்றமுடியும்.
Bro. John12 Wrote
///அணைத்து நாளிலும் தேவனை ஆராதிக்க கிருபை பெற்றவர்கள் நாம். ஆனாலும் ஓய்வு நாளை அனுசரிக்க தேவ நியமங்களையும்,காலங்களையும்,பிரமாணங்களையும் தேவ சமூகத்தில் ஆராய்ந்து அறியும் படியான நிலையில் தான் நாம் உள்ளோம் என்பதை சகோதரர்கள் அறிவார்களாக..
கொலோசெயர் 2 :16 ,17 ஆகையால், போஜனத்தையும் பானத்தையும் குறித்தாவது, பண்டிகைநாளையும் மாதப்பிறப்பையும் ஓய்வுநாட்களையுங்குறித்தாவது, ஒருவனும் உங்களைக் குற்றப்படுத்தாதிருப்பானாக. அவைகள் வருங்காரியங்களுக்கு நிழலாயிருக்கிறது; அவைகளின் பொருள் கிறிஸ்துவைப்பற்றினது.
வரும் காலத்தின் நிழலாகவும்,கிறிஸ்துவை பொருளாகவும் கொண்டுள்ள ஓய்வு நாளின் காரியங்களை நாம் எப்படி நமக்குள் நிச்சயித்து ஆசாரிக்கிறோம் என்பதும் முக்கியமல்லவா..
சரியான 'சபாத்' எனபடுகிற நம் தேவனின் ஓய்வு நாள் ஆசாரிப்பை சரியானபடி நியமித்து வேதத்தின் படி கைகொள்ள வேண்டியதை மிக அவசியமாக கருதியே இத்திரியை தொடங்கினேன்..///
நானும்கூட இந்த ஓய்வுநாள் காரியங்களை மிகமுக்கியமாக கருதி அதிகம் அறிந்துகொள்ளும் ஆவலில் இருக்கிறேன்.
தாங்கள் தேவனிடம் விசாரித்து அறிந்த மேலதிக விளக்கங்கள் இருக்குமாயின் தயவுசெய்து தெரிவிக்கவும்.
-- Edited by SUNDAR on Wednesday 20th of June 2012 08:48:06 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
நம் வேதத்தில் இறுதி காலத்தின் தீர்க்கதரிசனங்கள் அனைத்தும் 'இஸ்ரவேல்' எனப்பட்ட யாகோபின் மரபு வந்தவர்களின் வாயிலாகவே தரப்பட்டுள்ளது..
வேதத்தில் 'பிலேயாம்',பெயர் குறிபிடாத புறஜாதி தீர்க்க தரிசிகள் சிலர் இருந்தாலும் அவர்கள் மற்ற பணிக்கு அனுப்பப்பட்டர்களே அல்லாமல் இறுதி காலத்தை பற்றிய தீர்க்கதரிசனங்களை சொல்ல அவர்களுக்கு அருளப்படவில்லை!!!
காரணம் தீர்க்கதரிசனம் உரைபவர்களாய் நாம் இருந்தாலும் நம் அறிவு குறைவுள்ளது...
I கொரிந்தியர் 13:9நம்முடைய அறிவுகுறைவுள்ளது, நாம் தீர்க்கதரிசனஞ் சொல்லுதலும் குறைவுள்ளது.
புறஜாதிகளின் தெய்வங்கள்,காலநிலைகள்,பாரம்பரியம்,பண்டிகளிகள்,பழக்கவழக்கங்கள் ,ஒழுங்கங்கள் வேறாய் இருந்ததால் புறஜாதிகளின் கால நியமங்கள் வேறாய் இருந்ததில் ஆச்சர்யம் இல்லை..
எனவே புறஜாதி வழி வந்தும் அனுபவரீதியாக மெய் தேவனை கண்டுகொண்ட புறஜாதி மனிதர்களும்,புறஜாதி வழி வந்த நம் தேவனின் தீர்க்கதரிசிமாரும், தேவன் மோசேவை கொண்டு அருளிய கால நியமங்களை ஆசாரிக்க அறியாதிருந்தார்கள் என நாம் அறிய முடியும்...
இவர்கள் தேவன் ஏற்படுத்தின கால நியமங்களை அறியாமல் குறைவுற்ற அறிவினை உடையவர்களாய் இருந்திருக்கக்கூடும்...
எனவே தான் கடைசிகால சம்பவங்களை,எ ச்சரிப்புகளை இவர்களை கொண்டு நம் தேவன் அறிவிக்காது... தேவநியமங்களை தேவன் நியமித்தவாறு கடைபிடிக்கும் இஸ்ரவேலின் தீர்க்கதரிசிகளை கொண்டு கடைசி கால நியமங்களை அறிவித்தார் என்பதை நாம் அறிவோமாக!!!
இக்காலங்களில் ஆவிக்குரிய இஸ்ரவேலரை வாழும் நமக்கும் ஓய்வு நாள் நியமங்களை சரிவர தேவன் நியமிதபடி அனுசரிக்க சித்தமிருந்தால் நாம் கடைபிடிக்கவேண்டிய நாட்காட்டியானது தற்கால யூதர்கள் பயன்படுத்தும் எபிரேய நாட்காட்டி. ஆனால் இன்னால்காடியானது லூனி-சோலார் முறைப்படி அல்லாது சூரிய நாள்காடிகளை போல கிரிகோரியன் நாட்காட்டியின் சினி கிழமைகளை சபாத் என காண்பிக்கும். ஆகவே இது சரியற்றது என நம்மால் எளிதாய் கருத இயலும்.
சங்கீதம் 104:19சந்திரனைக் காலக்குறிப்புகளுக்காகப் படைத்தார்; சூரியன் தன் அஸ்தமனத்தை அறியும்.
இதனை பின்பற்றும் போது சரியான சபாத்தை கண்டுகொள்ள இயலும்.அனேக தளங்களில் லூனி-சோலார் நாட்காட்டிகள் கொடுக்கப்பட்டு இருந்தாலும் அதிகமான தங்களை சனி கிழமையை சபாத் என கூறும் கிரிகோரிய நாட்காட்டியை அடிப்படையில் தான் உள்ளன. ஆனால் நாட்டுக்கு வேறுபடும் சூரிய சந்திரனின் ஆல்ட்டிடூட்களை கணக்கில் கொண்டு நிர்மாணிக்க பட்ட லூனி-சோலார் நாட்காடியானதே சரியானதாய் இருக்க முடியும்.
மேற்குறிப்பிட்ட நாள் காட்டியானது அனைத்து வேத ஆசாரிப்புகளையும்,பந்திகளையும்,சபாத் நாட்களையும்,பெளணர்மி,அமாவசை நாட்களையும் உபவாச ஆசாரிப்புகளையும் வேத அடிப்படையில் தருவதாக இருகின்றது.
இந்த நாட்காடியும் எந்த அளவிற்கு சரி என்று ஒட்ட வெய்க்கபட்டுள்ள காட்டோலிவமரமாகிய எனக்கும் தெளிவாய் தெரியவில்லை .
ஆனாலும் தேவனை அறிகிற அறிவு நம்மை நிச்சயம் நித்திய ஜீவனுக்கே இட்டுசெல்லும் என்ற தேவனுகுள்ளான நிச்சயத்தோடு இக்கருத்தை என்னால் பதிய இயன்றது..
தேவ கிருபை நம்மோடு இருப்பதாக!!!
சிங்காசனத்தின் மத்தியில் வீற்றிருக்கும் ஆட்டுக்குட்டியானவர் மகிமை அடைவாராக!!
நம் வேதத்தில் இறுதி காலத்தின் தீர்க்கதரிசனங்கள் அனைத்தும் 'இஸ்ரவேல்' எனப்பட்ட யாகோபின் மரபு வந்தவர்களின் வாயிலாகவே தரப்பட்டுள்ளது..
அநேகரால் சாதாரணமாக எண்ணப்படும் ஒய்வு நாள் குறித்த பல முக்கியமான காரியங்களை தங்கள் பதிவின் மூலமும் இந்த திரியின் மூலமும் அறிந்து கொள்ள முடிந்தது சகோதரரே. மிக்க நன்றி.
ஆகினும் யூதர் முறைப்படி சனிக்கிழமையை ஒய்வுநாளாக அனுசரிப்பதா அல்லது நமது நாட்டில் எல்லோரும் அனுசரிப்பதுபோல் ஞாயிற்று கிழமைதான் ஒய்வுநாளா? எது சரியானது
ஓய்வுநாள் குறித்து முடிவாய் நிதானித்து அறிந்து நடக்கவேண்டிய காரியங்கள் என்னவென்பதை தெளிவாக தெரிவித்தால் பலருக்கு பயனுள்ளதாக அமையும்
இறுதி காலத்தின் தீர்க்க தரிசனங்களை புரிந்து கொள்ள, வேதத்தின் கால நியம ஆசாரிப்புகளை வழங்கும் சரியான நாட்காட்டி நமக்கு தேவை என்பதை மறுப்போர் இருக்க இயலாது..ஆகவே சரியான நாள்காட்டி என முடிவாய் லுனி-சோலார் நாள் காட்டியை கூறமுடியும்..(லூனி என்றால் சந்திரன், சோலார்-சூரியன்)
இத்தகைய நாள்காட்டியாது கர்த்தரால் இஸ்ரவேலருக்கு மாத்திரம் வழங்கபட்டிருப்பதை வேதத்தில் இருந்து அறிய முடிகிறது..
இறுதி காலத்தின் தீர்க்க தரிசனத்தின் காலத்திட்டங்கள் கர்த்தர் ஏற்படுத்தின் நாள் திட்டத்தின் இருக்குமே அன்றி., நமக்கு நாமே ஏற்படுத்திகொண்ட கிரிகோரியன் நாள் காட்டியின் படி இருக்காது..எனவே புதிய ஏற்பாட்டு காலத்தில் வாழ்கிறோம் என்று ஓய்வு நாள்,மற்றும் கால ஆசாரிப்புகளை நாம் ஆசாரிக்க தேவை இல்லை என நாம் கர்த்தரின் கிருபையை காட்டி ஒதுங்கி கொள்ள நினைப்பது சரியாகாது..
கர்த்தரின் இளைப்பாறுதலில் பங்கேற்பதை விசுவாசித்து ஒவ்வொரு வாரமும் நாம் இவ்வுலகத்திலேயே பழகக்கொடுக்கப்பட்ட பரிசுத்த ஓய்வு நாளை சரியானபடி ஆசாரிப்போம்..
எபிரெயர் 4:10 ஏனெனில், அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசித்தவன், தேவன் தம்முடைய கிரியைகளை முடித்து ஓய்ந்ததுபோல, தானும் தன் கிரியைகளை முடித்து ஓய்ந்திருப்பான்.
பின்வரும் பூரண இளைபாறுதலின் அடையாளமாய் நம் கர்த்தர் ஏழாம் நாளின் தானே கிரியை செய்து ஓய்ந்து இருந்தார்..இத்தகைய இளைபாறுதலின் காலத்திற்கு முன்பதாகதான் இயேசுவானவர் பூமிக்கு வந்ததாக வேதம் கூறுகிறது..
எபிரெயர் 4:11 ஆகையால், அந்தத் திருஷ்டாந்தத்தின்படி, ஒருவனாகிலும் கீழ்ப்படியாமையினாலே விழுந்துபோகாதபடிக்கு, நாம் இந்தஇளைப்பாறுதலில் பிரவேசிக்க ஜாக்கிரதையாயிருக்கக்கடவோம்.
ஆகவே கொடுக்கப்பட்ட நாற்கடையளவிலான வாழ்நாளில் வேதம் காட்டும் படியான ஓய்வுநாளை கைகொள்வோம்.. நம் வழக்கபடியாய் வரும் ஞாயிற்று கிழமையியும் விசேஷமாய் பரிசுத்தபடுதுவோம்..சபைகூடுதலையும் விடாதிருப்போம்..
சரியான 'சபாத்'தை நமது தற்போதைய இடத்தின் படி, கிரிகோரிய(தற்போதைய) நேரத்தின்படி அறிந்துகொள்ள பின்வரும் தொடுப்பை சொடுக்கவும்..