கடந்த இருபது வருடமாக சென்னையில் வாடகை வீட்டில் வசித்து வரும் நான் சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்று எண்ணி பார்த்தது கூட கிடையாது. காரணம் நான் பணத்தை நாளைக்கென்று சேமித்து வைப்பது கிடையாது அத்தோடு யாரிடமும் கடன் வாங்க விரும்புவதும் இல்லை, யாரிடம் இருந்து இலவசமாக எதையும் வாங்க விரும்புவதும் இல்லை.
இப்படி பட்ட நிலையில் எங்கள் பூர்விக சொத்தை விற்று அதில் வந்த ஒரு சிறிய பங்கு பணத்தை வீணே செலவழிக்க விரும்பாமல் எனது மனைவியின் பிடிவாதமான தூண்டுதலின் பேரில் வங்கியில் லோன் வாங்கி சிறிதாக ஒரு வீடு வாங்க முடிவு செய்தோம்.
கடன் வாங்குவதில் எனக்கு எள்ளளவேனும் விருப்பம் இல்லாத காரணத்தால் இது சம்பதமாக ஆண்டவரிடம் மற்றாடி ஜெபித்தேன் "தேவனே இந்த உலகத்தில் யாரிடமும் என்னை கடன்காரனாக ஆக்கவேண்டாம். உங்களுக்கு இந்த திட்டத்தில் விருப்பம் இல்லை என்றால் எனக்கு எந்த வங்கியில் இருந்தும் கடன் கிடைக்காதபடி செய்துவிடும்" என்று பலமுறை ஜெபித்து இறுதியில் ஒரு வங்கி கடன் கொடுக்க, ஆண்டவரும் அனுமதி கொடுத்துவிட்டார் என்று எண்ணி வீட்டை வாங்கி அங்கு குடிஏறி இருக்கிறோம்.
அந்த வீடு தேவன் எங்களுக்கு தற்காலிகமாக தங்குவதற்கு தந்த வீடேயன்றி அது சொந்த வீடு என்ற எண்ணமே என் மனதில் வரவில்லை காரணம் எனக்கு அதில் பெரிய சந்தோசம் எதுவும் இல்லை மேலும் மாத வாடகை கொடுப்பதுபோல் வங்கிகடனை சரியாக திரும்ப செலுத்தவேண்டும் வீடு எனது பெயரில் வாங்கபட்டாலும் அதற்க்கான மாத தொகையை வங்கிக்கு செலுத்தாவிட்டால் எந்நேரமும் அவர்கள் பிடுங்கி கொள்ளலாம் அதற்க்கான அனுமதி பத்திரம் அவர்களிடம் உண்டு.
தேவன் விரும்பினால் அதை என்னைவிட்டு பிடுங்கி கொள்ளலாம் அதே நேரத்தில் தேவன் கருணை கொண்டால் வாங்கிய மொத்த கடனையும் திருப்பிகொடுத்து என்னை வீட்டுக்கு உரிமையாளனாக உயர்த்தவும் முடியும்.
தேவன் எதை செய்தாலும் அதை சந்தோசமாக ஏற்றுக்கொள்ள முழு மனதாக இருக்கிறேன்! ஏனெனில் தேவனின் சித்தம் ஓன்று மட்டுமே இந்த பூமியில் நிறைவேற வேண்டும் என்று வாஞ்சிக்கிறேன்!
அண்ணா கடன் வாங்குவது ஒருபோதும் தேவனுடைய சித்தம் இல்லை என்று நினைக்கிறேன் அண்ணா. ஏனென்றால் உபாகமம் 28:01-02 இன்படி கர்த்தருக்கு கீழ்ப்படிந்து வாழ்பவன் கடன் படாதபடி தேவன் அவனை ஆசீர்வதிப்பதாக வாக்கு கொடுத்திருக்கிறார்
உபாகமம் 15:6 உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொன்னபடி உன்னை ஆசீர்வதிப்பதினால், நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன் கொடுப்பாய், நீயோ கடன் வாங்குவதில்லை; நீ அநேகம் ஜாதிகளை ஆளுவாய், உன்னையோ அவர்கள் ஆளுவதில்லை.
உபாகமம் 28:12 ஏற்றகாலத்தில் உன் தேசத்திலே மழை பெய்யவும், நீ கையிட்டுச்செய்யும் வேலைகளையெல்லாம் ஆசீர்வதிக்கவும், கர்த்தர் உனக்குத் தமது நல்ல பொக்கிஷசாலையாகிய வானத்தைத் திறப்பார்; நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன்கொடுப்பாய். நீயோ கடன் வாங்காதிருப்பாய்.
மேலும் கீழ்ப்படியாதவனுக்கு தண்டணையாகத்தான் கடன்படுவாய் என்கிறார்.
உபாகமம் 28:44 அவன் உன்னிடத்தில் கடன்படான்; நீ அவனிடத்தில் கடன்படுவாய்; அவன் தலையாயிருப்பான், நீ வாலாயிருப்பாய்.
அதன்படி பார்த்தால் நீங்கள் கடன் படுகிறீர்கள் என்றால்
ஒன்று நீங்கள் கர்த்தருக்கு பிரியமாக நடக்கவில்லை என்று அர்த்தம் அல்லது கர்த்தரின் வார்த்தை பொய் என்று அர்த்தம்.
மேலும் கடன் என்பது கர்த்தருடைய ஆசீர்வாதம் ஒருமனிதனுடைய வாழ்க்கையில் இல்லாமல் போவதால் வருகிறது என்று நினைக்கிறேன்.
அதைவிட கடன் என்பது பிசாசு நம்மை தனக்கு அடிமைப்படுத்துவதற்காக பாவிக்கும் ஒரு தந்திரம்.
நீதிமொழிகள் 22:7 ஐசுவரியவான் தரித்திரனை ஆளுகிறான்; கடன் வாங்கினவன் கடன் கொடுத்தவனுக்கு அடிமை.
//////இப்படி பட்ட நிலையில் எங்கள் பூர்விக சொத்தை விற்று அதில் வந்த ஒரு சிறிய பங்கு பணத்தை வீணே செலவழிக்க விரும்பாமல் ////
உங்கள் சொத்தை விற்று வாங்குவதில் கர்த்தர் சங்தோஷப்படுவார்
/////// இது சம்பதமாக ஆண்டவரிடம் மற்றாடி ஜெபித்தேன் "தேவனே இந்த உலகத்தில் யாரிடமும் என்னை கடன்காரனாக ஆக்கவேண்டாம். உங்களுக்கு இந்த திட்டத்தில் விருப்பம் இல்லை என்றால் எனக்கு எந்த வங்கியில் இருந்தும் கடன் கிடைக்காதபடி செய்துவிடும்" என்று பலமுறை ஜெபித்து இறுதியில் ஒரு வங்கி கடன் கொடுக்க, ஆண்டவரும் அனுமதி கொடுத்துவிட்டார் என்று எண்ணி வீட்டை வாங்கி அங்கு குடிஏறி இருக்கிறோம்.//////
உள்ளத்தில் ஒரு காரியத்தை செய்ய முடிவு செய்து விட்டு ஆண்டவரே உமக்கு பிரியமில்லாவிட்டால் தடுத்து நிறுத்தும் என்று கூறலாமா? அண்ணா?
அண்ணா கடன் வாங்குவது ஒருபோதும் தேவனுடைய சித்தம் இல்லை என்று நினைக்கிறேன் அண்ணா. ஏனென்றால் உபாகமம் 28:01-02 இன்படி கர்த்தருக்கு கீழ்ப்படிந்து வாழ்பவன் கடன் படாதபடி தேவன் அவனை ஆசீர்வதிப்பதாக வாக்கு கொடுத்திருக்கிறார்
உபாகமம் 15:6 உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொன்னபடி உன்னை ஆசீர்வதிப்பதினால், நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன் கொடுப்பாய், நீயோ கடன் வாங்குவதில்லை; நீ அநேகம் ஜாதிகளை ஆளுவாய், உன்னையோ அவர்கள் ஆளுவதில்லை.
உபாகமம் 28:12 ஏற்றகாலத்தில் உன் தேசத்திலே மழை பெய்யவும், நீ கையிட்டுச்செய்யும் வேலைகளையெல்லாம் ஆசீர்வதிக்கவும், கர்த்தர் உனக்குத் தமது நல்ல பொக்கிஷசாலையாகிய வானத்தைத் திறப்பார்; நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன்கொடுப்பாய். நீயோ கடன் வாங்காதிருப்பாய்.
மேலும் கீழ்ப்படியாதவனுக்கு தண்டணையாகத்தான் கடன்படுவாய் என்கிறார்.
உபாகமம் 28:44 அவன் உன்னிடத்தில் கடன்படான்; நீ அவனிடத்தில் கடன்படுவாய்; அவன் தலையாயிருப்பான், நீ வாலாயிருப்பாய்.
அதன்படி பார்த்தால் நீங்கள் கடன் படுகிறீர்கள் என்றால்
ஒன்று நீங்கள் கர்த்தருக்கு பிரியமாக நடக்கவில்லை என்று அர்த்தம் அல்லது கர்த்தரின் வார்த்தை பொய் என்று அர்த்தம்.
மேலும் கடன் என்பது கர்த்தருடைய ஆசீர்வாதம் ஒருமனிதனுடைய வாழ்க்கையில் இல்லாமல் போவதால் வருகிறது என்று நினைக்கிறேன்.
அதைவிட கடன் என்பது பிசாசு நம்மை தனக்கு அடிமைப்படுத்துவதற்காக பாவிக்கும் ஒரு தந்திரம்.
நீதிமொழிகள் 22:7 ஐசுவரியவான் தரித்திரனை ஆளுகிறான்; கடன் வாங்கினவன் கடன் கொடுத்தவனுக்கு அடிமை.
/////// இது சம்பதமாக ஆண்டவரிடம் மற்றாடி ஜெபித்தேன் "தேவனே இந்த உலகத்தில் யாரிடமும் என்னை கடன்காரனாக ஆக்கவேண்டாம். உங்களுக்கு இந்த திட்டத்தில் விருப்பம் இல்லை என்றால் எனக்கு எந்த வங்கியில் இருந்தும் கடன் கிடைக்காதபடி செய்துவிடும்" என்று பலமுறை ஜெபித்து இறுதியில் ஒரு வங்கி கடன் கொடுக்க, ஆண்டவரும் அனுமதி கொடுத்துவிட்டார் என்று எண்ணி வீட்டை வாங்கி அங்கு குடிஏறி இருக்கிறோம்.//////
உள்ளத்தில் ஒரு காரியத்தை செய்ய முடிவு செய்து விட்டு ஆண்டவரே உமக்கு பிரியமில்லாவிட்டால் தடுத்து நிறுத்தும் என்று கூறலாமா? அண்ணா?
அன்பான சகோதரரே, தங்களின் வார்த்தைகள் என்னை சற்றும் காயப்படுத்தவில்லை, மாறாக இப்படி சரியாக புத்திசொல்லும் ஒரு அன்பு சகோதரரை எனக்கு அறிமுகம் செய்து வைத்ததினால் இன்னும் அதிகமாக கர்த்தருக்கு நன்றியும் ஸ்தோத்திரமும் செலுத்துகிறேன்.
நீங்கள் சுட்டியுள்ள வசனங்களை எல்லாம் நானும் என்னுடைய மனதில் போட்டு பலமுறை சிந்தித்து "இந்த சொந்த வீட்டு கதை" எல்லாம் வேண்டவே வேண்டாம் என்று பிடிவாதமாகதான் இருந்தேன் ஆனால் மற்ற மனிதர்களின் வார்த்தைகளை விட, கூடவே இருந்து கொண்டு சமயம் கிடைக்கும்போதெல்லாம் குத்தூசியாய் குத்திக் கொண்டு இருக்கும் மனைவியின் வார்த்தைகளை எத்தனை நாள் கேட்டுக் கொண்டு இருக்க முடியும்?
அவளும் அபிஷேகம் பெற்றவள்தான் ஆண்டவரின் வார்த்தைகளை அடிக்கடி கேட்பவள்தான் ஆனால் பெண்கள் பலவீனமான பாண்டம் என்று சொன்னபடி, இந்த உலகத்தில் எந்த சொத்தும் வேண்டாம் என்று உதறி தள்ளி என்னுடன் சேர்ந்து உறுதியாக நடந்து வர முடியாமல் அடிக்கடி உலகத்தால் ஈர்க்கபட்டு என்னை சில நேரங்களில் யோபுவின் மனைவி பேசியதைவிட கீழ்த்தரமாக பெசிவிடுகிறாள். இருபது வருடம் எல்லாவற்றையும் சகித்து என் பிடிவாதத்தில் கொஞ்சமும் அசையாமல் இருந்தேன் ஆனால் இப்பொழுது மகன் மகள் எல்லோருமே பெரியவர்களாகிவிட்டார்கள் அவர்கள் என்னுடைய வார்த்தைக்கு கட்டுபட்டவர்கள்தான் என்றாலும் "நமக்கென்று ஒரு சொந்த வீடு இருந்தால் நல்லதுதானே" என்று எண்ணுகிறார்கள்.என் நிலைமை மற்றும் நிர்பந்தம் தேவனுக்கு நிச்சயம் தெரியும். என் மாம்ச பெளத்தை கொண்டு கொண்டு எவ்வளவோ போராடிவிட்டு தேவனிடமும் முறையிட்டுவிட்டு இறுதியில்தான் வீடு வாங்கும் முடிவுக்கு வந்துள்ளேன்.
நான் யாரையும் காரணம் காட்டி அவர்களால்தான் இதை செய்தேன் என்று சொல்லி என்னை நியாயப்படுத்த விரும்பவில்லை. காரணம் அன்று ஏவாளின் சொல்லை கேட்டு கனியை புசித்த ஆதாமுக்கும் தண்டனை கிடைக்காமல் இல்லை.
ஆகினும் நான் அளவுக்கு அதிகமாக ஆசைப்பட்டு தேவையற்ற எதையும் வாங்கவும் இல்லை! "இப்பொழுதும் கர்த்தர் உனக்கு ஒரு வீட்டை கட்டுவார்" என்ற வார்த்தைக்கு ஏற்ப தங்குவதற்கு ஒரு வீட்டைதான் வாங்கியிருக்கிறேன். "வெள்ளியும் என்னுடையது பொன்னும் என்னுடையது" என்று சொல்லும் கர்த்தர் நினைத்தால் எனது கடனை சீக்கிரம் அடைக்க அவரால் வழி செய்ய முடியும் என்று விசுவாசிக்கிறேன். இல்லை நான் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று அவர் தீர்மானித்தால் அதை ஏனென்று கேட்பதற்கு நான் எம்மாத்திரம்?
"கடன் வாங்கியவன் கடன் கொடுத்தவனுக்கு அடிமை" என்பது உண்மையான வார்த்தை! ஆகினும் அந்த கடன் கொடுத்தவனுக்கு என்னிடம் இருந்து எடுத்துகொள்ள அவனின் கடன் மதிப்புக்கு போதுமான பொருள் இல்லை என்றால் மட்டுமே அன்று மோசேயின் சரீரத்தை குறித்து தர்க்கித்ததுபோல தேவனிடம் என்னை குறித்து தர்க்கிக்க முடியும்! ஆனால் என்னை பொருத்தவரை நான் வாங்கியிருக்கும் வீட்டின் மொத்த உரிமை மற்றும் அங்கீகாரம் எல்லாவறையும் கடன் கொடுத்த வங்கிக்கு எழுதி கொடுத்துவிட்டேன் எனவே அவர்கள் கொடுத்த கடனைவிட அதிக மதிப்புள்ள உலக பொருள் அவர்கள் கையில் இருக்கிறது. நான் கடனை திருப்பி செலுத்தா விட்டால் அவர்கள் என்னை கேட்காமலே அந்த வீட்டை விற்று அவர்களுக்கு தேவையான பணத்தைவிட அதிகமான பணத்தை எடுத்துகொள்ள நான் அதிகாரம் அளித்திருக்கிறேன் எனவே அவர்கள் என்னை குறித்து தேவனிடம் பிராது பண்ண வேண்டிய அவசியம் இருக்காது என்று தீர ஆராய்ந்து தீர்மானித்த பின்னரே வீடு வாங்கும் முடிவை எடுத்தேன். தேவனும் அதை அங்கீகரித்திருக்கிறார் என்று கர்த்தருக்குள் நம்புகிறேன்! கர்த்தர் என்மேல் பிரியமாக இருப்பாராகில் என்னை அதில் இருந்து விடுவிக்க கர்த்தருக்கு கண நேரம் போதும்!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
இந்தியாவும் இலங்கையும் கடனில் தான் உள்ளது. நாடு என்பது மக்களையும் சேர்த்து தான் என்பார்கள்...
ஏற்கனவே அறிந்தோ அறியாமலோ கடன் என்கிற சாபத்தில் தான் நாம் அனைவரும்(கடன் சரி என்பவர்களும்,தவறு என்பவர்களும்) இருக்கிறோம். தேவ கிருபையில் டெட்ராயிடு போன்ற சில நகரங்களை போல நமது நாடுகள் திவால்களை சந்திக்கவில்லை என்பது தேவ கிருபையே !!!
நானும் வீட்டில் இருப்பவர்களால் சென்னையில் வீடு வாங்க ஏவப்பட்டேன். வங்கியில் sanction letter பெற்ற பின் லோன் போட அனுமதியாமல் ,பின் வீட்டில் இருப்பவர்களே உதவி செய்து வாங்கசெய்தார்கள். ஒவ்வொரு மாதமும் வட்டி இல்லாமல் திரும்ப செலுத்துகிறேன். ஆனால் இதுவும் கடன் தான். இதில் எனக்கு சிரமம் உண்டு தான். ஜெபத்தில் வைத்த பின் உபத்திரவதோடு தான் வீட்டில் இருக்கிறவர்கள் சொல்வதற்காக ஒப்புக்கொண்டேன்..
ஆனால் தேவனை தவிர நமக்கு வேறு யாரும் அதிக நல விரும்பியை இருக்க இயலாது என முன்னே இருந்ததை விட இப்போது அதிகம் உணர ஒரு வாய்பாகவே இக்காரியம் அமைந்தது .
தற்போது வீட்டை கட்டிக்கொண்டு இருக்கிறார்கள் .இன்னும் குடியேறவில்லை .என்னால் ஒருவேளை கடனை சரிவர செலுத்த இயலாவிட்டால் வீட்டில் இருப்பவர்களுக்கு வேட்டை மாற்றி கொடுத்துவிடுவேன்.அது என்னால் முடியும்.
எனக்கு தேவன் மாத்திரமே லாபம் எப்போதும்!!! தேவன் வீட்டை எனக்கு தர விருப்பமில்லாமல் இருப்பாரானாலும் அதனை விட்டுவிடுவது எனக்கு பாரமாய் இருக்கபோவதில்லை!!!
அடுத்த மாதம் எனக்கு திருமணம் நடக்கவிருக்கிறது!! எனக்காக ஜெபித்துக்கொள்ளுங்கள்!!
சுந்தர் அண்ணா மன்னிக்கவும். உங்களுக்கு புத்தி சொல்லுமளவிற்கு நான் ஒன்றும் பெரியவன் இல்லை. ஆனாலும் நான் சொல்வதை தாழ்மையாக வரவேற்றீர்களே இது சிறந்த முன்மாதிரி. நன்றி அண்ணா.
////அன்பான சகோதரரே, தங்களின் வார்த்தைகள் என்னை சற்றும் காயப்படுத்தவில்லை, மாறாக இப்படி சரியாக புத்திசொல்லும் ஒரு அன்பு சகோதரரை எனக்கு அறிமுகம் செய்து வைத்ததினால் இன்னும் அதிகமாக கர்த்தருக்கு நன்றியும் ஸ்தோத்திரமும் செலுத்துகிறேன். ////
brother john12தங்களுக்கு என் அன்பின் வாழ்த்துக்கள் திருமண வாழ்வு சிறக்க ஜெபிக்கிறேன்.
////எனக்கு தேவன் மாத்திரமே லாபம் எப்போதும்!!! தேவன் வீட்டை எனக்கு தர விருப்பமில்லாமல் இருப்பாரானாலும் அதனை விட்டுவிடுவது எனக்கு பாரமாய் இருக்கபோவதில்லை!!!////
இந்த உறுதி போதும் கர்த்தர் பெரிய காரியம் செய்வார்.
//கடன் வாங்குவதில் எனக்கு எள்ளளவேனும் விருப்பம் இல்லாத காரணத்தால் இது சம்பதமாக ஆண்டவரிடம் மற்றாடி ஜெபித்தேன் "தேவனே இந்த உலகத்தில் யாரிடமும் என்னை கடன்காரனாக ஆக்கவேண்டாம். உங்களுக்கு இந்த திட்டத்தில் விருப்பம் இல்லை என்றால் எனக்கு எந்த வங்கியில் இருந்தும் கடன் கிடைக்காதபடி செய்துவிடும்" என்று பலமுறை ஜெபித்து இறுதியில் ஒரு வங்கி கடன் கொடுக்க, ஆண்டவரும் அனுமதி கொடுத்துவிட்டார் என்று எண்ணி வீட்டை வாங்கி அங்கு குடிஏறி இருக்கிறோம்.//
சகோ.சுந்தர் அவர்களே! சொந்தவீடு வாங்கின உங்களுக்கு முதலாவது என் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.
கடன் வாங்கி வீடு விஷயத்தில் உங்கள் ஜெபம் சற்று குழப்பமானதாகவே உள்ளது. ஒருவரைக் கொலைசெய்வதற்கு ஒருபுறம் நடவடிக்கை எடுத்துக்கொண்டு, மறுபுறம் என்னைக் கொலைகாரனாக்க வேண்டாம் என ஜெபிப்பது போலத்தான் உங்கள் ஜெபமும் இருக்கிறது. கொலைசெய்வதற்கு முயற்சி எடுத்துக்கொண்டு, நான் கொலைசெய்வது உமக்கு விருப்பமில்லையென்றால் அதைச் செய்யமுடியாதபடி ஆக்கிவிடும் என்பது போலத்தான் உங்கள் ஜெபமும் உள்ளது.
குடும்பத்தாரின் நியாயமான கோரிக்கையை ஏற்பது, அதேசமயம் கடன்காரனாகக்கூடாது என்ற எண்ணம், கடன்காரனாவது பாவம் என்ற குற்ற உணர்ச்சி, இவையெல்லாம் சேர்ந்து உங்களைக் குழப்பியுள்ளதால், இப்படியொரு குழப்பமான ஜெபத்தை ஏறெடுத்துள்ளீர்கள்.
உண்மையில், கடன்வாங்கி வீடு கட்டுவதில் நீங்கள் சற்றும் குற்ற உணர்ச்சி கொள்ளவேண்டியதில்லை. உங்களைக் குற்ற உணர்ச்சிக்குள்ளாக்கும் வேதவசனங்களில் ஒன்று இப்படிச் சொல்கிறது.
உபாகமம் 15:6 உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொன்னபடி உன்னை ஆசீர்வதிப்பதினால், நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன் கொடுப்பாய், நீயோ கடன் வாங்குவதில்லை; நீ அநேகம் ஜாதிகளை ஆளுவாய், உன்னையோ அவர்கள் ஆளுவதில்லை.
இவ்வசனம் கூறுகிற ஆசீர்வாதங்கள், இஸ்ரவேல் ஜாதியினருக்கான ஒட்டுமொத்த ஆசீர்வாதங்கள். இஸ்ரவேலர்கள் அநேக ஜாதியினருக்குக் கடன் கொடுப்பார்கள், ஆனால் இஸ்ரவேலரோ வேறெந்த ஜாதியினரிடமும் கடன் வாங்கமாட்டார்கள்; இஸ்ரவேலர்கள் வேறே ஜாதிகளை ஆளுவார்கள், ஆனால் அவர்களை வேறே ஜாதியினர் ஆளுவதில்லை என்பதே அந்த ஆசீர்வாதங்கள்.
ஒட்டுமொத்த இஸ்ரவேருக்கு மேற்கூறிய ஆசீர்வாதங்களை வாக்களித்த தேவன், அவ்வசனத்திற்கு அடுத்த வசனங்களில் கூறுவதைச் சற்றுக் கவனியுங்கள்.
உபாகமம் 15:7 உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தின் எந்த வாசலிலும் உன் சகோதரரில் எளியவனான ஒருவன் இருந்தால், எளியவனாகிய உன் சகோதரனுக்கு உன் இருதயத்தை நீ கடினமாக்காமலும், உன் கையை மூடாமலும், 8 அவனுக்கு உன் கையைத் தாராளமாய்த் திறந்து, அவனுடைய அவசரத்தினிமித்தம் அவனுக்குத் தேவையானதைக் கடன்கொடுப்பாயாக.
இஸ்ரவேலர் ஒருவருக்கொருவர் கடன்கொடுத்து ஒருவரையொருவர் ஆதரிக்கவேண்டும் என இவ்வசனங்களில் தேவன் கூறுகிறார். பின்வரும் வசனத்தையும் சற்று கவனியுங்கள்.
2 ராஜா. 4:1 தீர்க்கதரிசிகளுடைய புத்திரரில் ஒருவனுக்கு மனைவியாயிருந்த ஒரு ஸ்திரீ எலிசாவைப் பார்த்து: உமது அடியானாகிய என் புருஷன் இறந்துபோனான்; உமது அடியான் கர்த்தருக்குப் பயந்து நடந்தான் என்பதை அறிவீர்; கடன்கொடுத்தவன் இப்போது என் இரண்டு குமாரரையும் தனக்கு அடிமைகளாக்கிக்கொள்ள வந்தான் என்றாள்.
கர்த்தருக்குப் பயந்து நடந்த ஒருவன் கடன்பட்டிருந்ததாக இவ்வசனம் கூறுகிறது. அதுவும் அவன் தீர்க்கதரிசியின் புத்திரனாகவும் இருந்தானாம். அவனைக் ஆசீர்வாதக் குறைவுள்ளவன் எனச் சொல்லமுடியுமா? நிச்சயம் முடியாது. எனவே கடன் வாங்குவது ஆசீர்வாதக் குறைவும் அல்ல, பாவமும் அல்ல.
ஆயினும் கடன் வாங்குவதில் ஒரு நிதானம் இருக்கவேண்டும். ஆடம்பரவாழ்வுக்காகக் கடன்வாங்குவது நிச்சயம் உசிதமானதல்ல. சொந்தவீடு வாங்குவதென்வது அவசியமான ஒரு தேவைதான். நம் தேவைக்கு மிஞ்சினதாக இராமல், ஆடம்பரமும் இல்லாமல், ஒரு சொந்த வீடு கட்டவோ வாங்கவோ நினைப்பது நல்லதுதான்; அது அவசியமானதும்தான். அதற்காக கடன் வாங்குவது, அதுவும் கட்டவிருக்கிற வீடை அடமானம் வைத்து கடன் வாங்குவது நிச்சயம் தவறோ ஆசீர்வாதக் குறைவோ அல்ல.
வங்கிபெயரில் வீடு அடமானமாக இருக்கும்வரை, அந்த வீடு நமக்குச் சொந்தமானது கிடையாது. வங்கிக்கே சொந்தமானது. எனவே இம்மாதிரி கடன் சற்று வித்தியாசமானது. மற்ற கடன்காரரைப் போல, கடன்வாங்கினவர் கடன்கொடுத்த வங்கியாளருக்கு அடிமையாவதில்லை.
ஒருவேளை தனிப்பட்ட ஒரு மனிதரிடம் வீடு அடமானத்தின் பேரில் கடன் வாங்கினால்கூட, கடன் வாங்கினவர் கடன் கொடுத்தவருக்கு அடிமையாவதில்லை. எனவே நீதி. 22:7- வசனத்தினிமித்தமும் நீங்கள் குற்ற உணர்ச்சிக்குள்ளாக வேண்டியதில்லை.
-- Edited by anbu57 on Monday 29th of July 2013 11:30:24 PM
சகோ. அன்பு அவர்களின் பதிவை நீண்ட நாட்களுக்கு பின்னர் தளத்தில் பார்ப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
வேத வசனத்தோடு கூடிய தங்கள் பதிலுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.
சகோ. அன்பு எழுதியது:
////கடன் வாங்கி வீடு விஷயத்தில் உங்கள் ஜெபம் சற்று குழப்பமானதாகவே உள்ளது. ஒருவரைக் கொலைசெய்வதற்கு ஒருபுறம் நடவடிக்கை எடுத்துக்கொண்டு, மறுபுறம் என்னைக் கொலைகாரனாக்க வேண்டாம் என ஜெபிப்பது போலத்தான் உங்கள் ஜெபமும் இருக்கிறது. கொலைசெய்வதற்கு முயற்சி எடுத்துக்கொண்டு, நான் கொலைசெய்வது உமக்கு விருப்பமில்லையென்றால் அதைச் செய்யமுடியாதபடி ஆக்கிவிடும் என்பது போலத்தான் உங்கள் ஜெபமும் உள்ளது.
குடும்பத்தாரின் நியாயமான கோரிக்கையை ஏற்பது, அதேசமயம் கடன்காரனாகக்கூடாது என்ற எண்ணம், கடன்காரனாவது பாவம் என்ற குற்ற உணர்ச்சி, இவையெல்லாம் சேர்ந்து உங்களைக் குழப்பியுள்ளதால், இப்படியொரு குழப்பமான ஜெபத்தை ஏறெடுத்துள்ளீர்கள்.///
அன்பான சகோதரர் அவர்களே நாம் வாழும் இந்த பூமியில் சில காரியங்களை சரியா தவறா என்று முழுமையாக தீர்மானிக்க முடியாத நிலையில் இருக்கிறோம்.
"கொலை செய்யாதிருப்பாயாக" என்று தேவன் சொன்னதுபோல் "கடன் வாங்காதிருப்பாயாக" என்று திட்டமாக சொல்லியிருந்தால் இந்த ஜெபம் எறேடுப்பதையும் கடன் வாங்க நினைப்பதையும் கூட ஓரத்தில் தள்ளி வைத்திருப்பேன்.
ஆனால் வசனம் அவ்வாறு திடமாக சொல்லவில்லை என்றாலும் ஒருவன் கடன் வாங்குவதில் தேவனுக்கு விருப்பம் இல்லை என்பது போலும் சொல்கிறது. இந்நிலையில் எவ்விதமான கடன் வாங்கலாம் எந்த விதமாக கடன் வாங்க கூடாது என்பது குறித்த சரியான விளக்கம் வேதத்தில் இல்லை. இதுபோன்ற சூழ்நிலைகளில் தேவனின் கையில் ஒரு காரியத்தை ஒப்புகொடுத்து ஜெபித்துதான் அதன் உண்மை தன்மையை அறியமுடியும்.
இதுபோல் பல நேரங்களில் வேதத்தின் அடிப்படையில் சரியா தவறா என்று தெரியாமல் செய்ய துணிந்த காரியங்களை தேவன் கையில் ஒப்புகொடுத்து ஜெபித்த போது அதில் உள்ள தவறுகளை ஆவியானவர் உணர்த்தி அதை செய்யவிடாமல் தடை செய்திருக்கிறார்
அதுபோல் தெளிவான உண்மை தெரியாத நேரங்களில் "பாவங்களை கண்டித்து உணர்த்தும் ஆவியானவரிடம் ஒப்புகொடுத்து ஜெபித்து உண்மையை அறிவதில் எந்த தவறும் இல்லை மட்டுமல்ல அது மிக மிக அவசியமான ஒன்றும் ஆகும். அவர் நினைத்தால் எந்த நிலையிலும் எந்த ஒரு காரியத்தையும் தடை செய்திருக்க முடியும்.
எனது கணிப்புப்படி ஆதாமிடம் ஏவாள் அந்த பாவ கனியை கொண்டு வந்து கொடுத்து புசிக்க சொன்னபோது அவன் தன்னோடு அடிக்கடி உலாவ வரும் ஆண்டவரை நோக்கி கூப்பிட்டு "ஆண்டவரே நீர் எனக்கு விலக்கிய கனியை என்னோடிருக்க நீர் கொடுத்த ஸ்திரியானவள் உண்ண சொல்லி தருகிறாள் நான் உண்ணலாமா? என்று ஒரு வார்த்தை கேட்டிருந்தால் அவன் நிலையே மாறியிருக்கலாம் அங்கு தேவன் கிரியை செய்ய இடம் உண்டாயிருக்கலாம். ஆனால் அவன் அதை செய்யவில்லை தின்றுவிட்டு அதன் பிறகு ஆண்டவரிடம் " என்னுடனே இருக்கும்படி தேவரீர் தந்த ஸ்திரீயானவள் அவ்விருட்சத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள், நான் புசித்தேன் என்றான்"
வேதத்தில் சரியான விளக்கம் இல்லாத பல பாவங்கள் பெருகிவிட்ட இந்த கால கட்டத்தில் ஜெபத்தின் மூலம் பெரும் ஆவியானவரின் வழி நடத்துதல்
இல்லாவிட்டால் நாம் தவற அனேக வாய்ப்பு உண்டு என்பது நிதர்சனமான உண்மை!
ஏன் இன்னும்கூட ஒன்ற நான் இங்கு சொல்ல விரும்புகிறேன்: பாவம்தான் என்று நன்றாக தெரிந்த காரியங்களை கூட சில நேரங்களில் செய்யும்படி நாம் நம் மேலதிகாரிகள் மூலமோ அல்லது சில மனுஷர்கள் மூலமோ தூண்டப்படலாம். அந்நேரங்களிலும் ஆண்டவரை நோக்கி "ஆண்டவரே இந்த பொய் சொல்லும் காரியத்தில் எனக்கு சிறிதேனும் விருப்பமில்லை ஆகினும் இவர்கள் என்னை நிர்பந்தம் பண்ணுகிறார்கள் என்னை எப்படியாது இந்த சூழ்நிலையில் இருந்து விடுவியும் உம்மையே நம்பியிருக்கிறேன்" என்று சொல்லி ஜெபித்தால் அந்த சூழ்நிலையையே மாற்றும் வல்லமை தேவனுக்கு உண்டு!
நம் பெலஹீனமான மாம்ச பெலத்தால் எல்லாவற்றையும் சாதித்துவிட முடியாது என்பது தேவனுக்கே தெரியும் எனவே அவரை சார்ந்துகொள்ளும்போது தேவையற்றதை நம்மைவிட்டு விளக்க அவர் நமக்கு நிச்சயம் உதவி செய்வார். தாங்கள் சொல்வதுபோல் இந்த கடன் வாங்கும் விஷயத்தில் எனக்கு குழப்பம் இருந்ததால் அங்கு தேவனின் உதவிக்காகவே ஜெபித்தேன்.
ஆண்டவராகிய இயேசு கூட சிலுவை மரணத்துக்கு முன்னர் தேவனிடம் போய் ஜெபித்து தன்னுடய நிலையை விளக்கி உதவி கேட்டாரே தேவனும் தம் தூதனை அனுப்பி அவரை திடப்படுத்தினாரே
லுக் 22: 42. பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படிசெய்யும்; ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார். 43. அப்பொழுது வானத்திலிருந்து ஒரு தூதன் தோன்றி, அவரைப் பலப்படுத்தினான்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
சகோ.சுந்தர் அவர்களே தங்களது இந்த அனுபவம் மூலம் தாங்கள் சொன்னது போல //சில காரியங்களை சரியா தவறா என்று முழுமையாக தீர்மானிக்க முடியாத நிலையில் இருக்கிறோம். இதுபோன்ற சூழ்நிலைகளில் தேவனின் கையில் ஒரு காரியத்தை ஒப்புகொடுத்து ஜெபித்துதான் அதன் உண்மை தன்மையை அறியமுடியும்.இதுபோல் பல நேரங்களில் வேதத்தின் அடிப்படையில் சரியா தவறா என்று தெரியாமல் செய்ய துணிந்த காரியங்களை தேவன் கையில் ஒப்புகொடுத்து ஜெபித்த போது அதில் உள்ள தவறுகளை ஆவியானவர் உணர்த்தி அதை செய்யவிடாமல் தடை செய்திருக்கிறார் //இந்த உண்மையை தங்களது வாழ்க்கை அனுபவத்தின் மூலம் எங்களுக்கு தேவன் கற்று தந்திருக்கின்றார் ;தேவனுக்கு நன்றி .