அன்பான அண்ணன்மார்களே திருவெளிப்பாட்டில் இருக்கும் இந்த வசனத்தை கொஞ்சம் கவனியுங்கள்
வெளி 21:8பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும்,
சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார்.
பயப்படுகிரவர்களை அவிசுவாசிகலோடும் கொலை பாதகரோடும் சேர்த்து இரண்டாம் மரணத்துக்கு பாத்திரவான் என்று வேதம் தீர்க்கிறதே. எதற்குமே பயப்படாத மனுஷன் யாரும் உலகத்தில் உள்ளனரா?
இந்த வசனம் சொல்லும் பயப்படுகிறவர்கள் என்பவர்கள் யார்?
ஒருவன் பயப்படுகிறவன் என்றால் அவன் அன்பில் பூரணபட்டவன் அல்ல என வேதம் கூறுகிறது..
I யோவான் 4:18 அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்; பயமானது வேதனையுள்ளது, பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் அல்ல.
பயப்படுகிறவன் அன்பை அறியாதவன் என வேதம் கூறாமல் அன்பில் பூரணப்படாதவன் என கூற காரணம் உண்டு!!!
அன்பை அறியாதவனின் பூரணமாதலை வேதம் பேசவில்லை. அன்பை அறிந்து அந்த அன்பில் பூரணப்படாதவர்கள் தான் இந்த 'பயப்படுகிறவர்கள்'. இவர்கள் பின்மாற்றக்காரர்கள். ஆகவே ,இந்த பயப்படுகிற அனைவருக்கும் தனக்குரிய இடத்தை பெற முன்னதாகவே ஓடி பெற்றுக்கொள்ளுகிறார்கள். (தங்களுக்குரிய இடத்தை விட்டுவிட்டவர்களும், முன்னமே தனக்குரிய இடத்திற்கு போனவர்களும் வேதத்தில் சொல்லப்பட்டுள்ளார்கள் )
நாம் யாருக்கு பயப்பட வேண்டி உள்ளதோ அவர் நம்முடனே இருக்கிறார். அவர் வேதத்தில் பல இடங்களில் லங்காதே,திடமானதாய்யிரு,பயப்படாதே என்பதாக கூறியிருக்க இன்னமும் உலகத்திற்கு பயந்து இருப்போமானால் அது ஒரு நியாயமற்ற செயலாகும்.
நாம் வாயினால் தேவன் நம்மோடு இருக்கிறார் என அறிக்கை இட்டு, செயலில் உலகத்தில் இருக்கிறவன் நாம் தேவனை பார்க்கிலும் பெரியன் என அறிக்கை செய்கிறவர்களாய் இருப்போம். தேவனுக்கு பயப்படுகிற பயம் எவ்வாறு ஞானத்திற்கு ஆரம்பமாய் இருக்கிறதோ அதைப்போல உலகத்திற்கு பயப்படுகிற பயம் அஞ்ஞானத்திற்கு ஆரம்பமாய் இருக்கிறது.
உலகத்திற்க்கும் கர்த்தருக்கும் ஒருங்கே கீழ்படிய இயலாது.ஒன்றை பற்றி இன்னொன்றை அசட்டை செய்தாக வேண்டும்..
மத்தேயு 6:24 இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்ய ஒருவனாலும் கூடாது; ஒருவனைப் பகைத்து ஒருவனைச் சிநேகிப்பான். அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு மற்றவனை அசட்டைபண்ணுவான்; தேவனுக்கும் உலகப் பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது.
உலகத்தை இவ்வாறாக ஒருவன் தேவனை பற்றிய பின் அசட்டை செய்வானானால் அவன் தேவனுடன் இருப்பான். அவ்வாறில்லாது அவன் உலகத்தை பற்றிகொண்டு தேவனை அசட்டை செய்வானானால் அவன் 'பின்மாற்றக்காரன்', இந்த 'பின்மாற்றம்' தேவனுக்கு பயப்படுத்தலைப் பார்க்கிலும் உலகத்திற்க்கு பயப்படுதலினால் வருவதால் முடிவு விபரீதமாய் இருப்பதில் ஆச்சர்யம் இருக்கத்தேவையில்லை.
I யோவான் 4:18 ..அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்..
என்கிற வார்த்தையின் படி, பூரண அன்பான தேவன் அவனுக்கு அக்கினி கடலிலே தேவன் சரிகட்ட வல்லவர்!!! அதற்காக தேவனுக்கு ஸ்தோத்திரம்..
அவர் யாருக்கு எவ்வாறு தீர்க்க வேண்டும் என்று தமது மிகுதியான நியாயங்களில் இருந்து தீர்ப்பை வெளிபடுத்துகிறார்!!! தேவனை தம் நன்மையான் நாட்களில் அறியாத ஒருவர் கூட அவரது நியாய தீர்ப்புகளை முன்னிட்டு அவரை துதிக்க செய்கிறார். வேதத்தில் இதற்க்கு ஆதாரம் உண்டு!!
இன்றும் கூட தேவனை தேடுகிற சிலர். அவரது நியாயத்தீர்ப்புகளின் ஆழங்களை அறியாமல், தேவன் அவ்வாறு செய்ய நிச்சயம் காரணம் இருக்கும், வேறு காரணம் இருக்கும் ,தாங்கள் மரிக்கும் மட்டும் காரணங்கள் இருந்து கொண்டே இருக்கும் என தங்கள் மனதில் உள்ளவைகளுக்கு முக்கியத்துவம் தந்து தேவனின் நியாயாயத்தீர்ப்பை அவற்றை ஏற்றுகொள்ளாமல், அவரை ஜீவநாளில் ஒருமுறையேனும் அவரது நியாயதீர்ப்பை முன்னிட்டு துதிக்கிறதில்லை. அவர்கள் தேவனை அறிந்து கொண்ட விதம் இன்னும் அவர்களுக்கு விக்கிரகமாய் இருக்கிறது..
ஆனால் உண்மையான தேவ பிள்ளை அவரது நியாயதீர்புகளை சந்தேகிக்காமல் அவரை நியாயதீர்புகை முன்னிட்டு மகிமை படுத்த வேண்டும்..தேவனுடைய தாசன் பின்வருமாறு பாடுகிறார்!!