சிறு குழந்தைகள் உயிரோடு எரிக்கபடுகின்ற்றனர் ஜாதி வெறி பிடித்த அயோக்கியர்களால்
மனுஷர்களில் தலைகள் ஒரு ஆட்டை அறுப்பதுபோல் அறுக்கபடுகின்றன தீவிரவாதிகள் என்ற கொடியவர்களால்
சிறு சிறு குழந்தைகள் சூரையாடபடுகின்றன காம வெறி பிடித்த நாய்களால்
கொடியவர்களின் கைக்கு தப்ப நாட்டை ஓடி, தங்க இடமில்லாது தவியாய் தவிக்கும் ஜனங்கள் ஏராளம் ஏராளம்!
ஒரு இனமே மிக கொடூரமாக சூரையாடபட்ட கொடுமையை தட்டிகேட்க வக்கில்லாத வல்லரசுகள்.
பசி பஞ்சம் பட்டினி ஒரு வேளை உணவுக்கு வழியில்லாத ஏழைகளில் அழுகுரலை கேட்க விரும்பாத அரசியல் கட்சிகள்.
அன்பையும் இரக்கத்தையும் தொலைத்துவிட்ட நிலையில் உலகம்!
கொடுமை கொடுமை எங்கு பார்த்தாலும் தலைவிரித்தாடும் கொடுமை
என்ன முடிவு எப்பொழுது முடிவு? ஏன் தேவன் இன்னும் தாமதிக்கிரீர் என்று கேட்டாலும் அவரின் நீண்ட மௌனத்தால் பதிலரியாது
நானும் சேர்ந்தே தவிக்கிறேன்!
அத்தனை கஷ்டங்களையும் ஆவியில் நொறுங்கி சொல்லி இன்னுமா நீங்கள் வர தாமதிக்கிறீர்கள் என்று ஆண்டவரிக்டம் கேட்டால்.
"என் கண்கள் முன்னே என் பிள்ளைகள் கொடிய வேதனைபடுவதை
பார்க்கும் நான் அதை தடுக்க முடிந்தால் உடனே செய்யாமல் இருப்பேனா? என்பதுபோல் அவர் உணர்த்துகிறார் அதை கேட்டு என் கண்கள் கண்ணீரால் கலங்குகின்றன.
அவரால் படைக்கபட்ட நமக்கே இந்த வேதனைகளை பார்த்து சகிக்க முடியவில்லையே! நம்மைவிட எத்தனையோ மடங்கு மகா
இரக்கமுள்ள தேவன் இன்னும் தாமதிக்கிறார் என்றால் அதற்க்கு எதோ மிக முக்கிய காரியம் இருக்கிறது என்பதை மாத்திரம் அறிய முடிகிறது
நிச்சயமாகவே முடிவு உண்டு அது எல்லோருக்கும் சமாதானமான முடிவாக இருக்கவேண்டும் என்பதே தேவனின் தாமதத்திற்கு முக்கிய காரணம் என்பதை நிச்சயம் புரிந்துகொண்டேன் .
எரேமியா 29:11நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்கு கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்றுகர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே.
-- Edited by SUNDAR on Friday 23rd of October 2015 10:04:12 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
True.. ஆம் உண்மை தான் அண்ணா. தற்போது இவ் உலகில் மனிதனின் கொடுமைகளை சகிக்க முடியவில்லை அந்த அளவுக்கு மனிதன் கொடூரமாய் செயட்படுகிறான். செய்திகளிலும் பத்திரிகைகளிலும் நடக்கிறவைகளை கேள்விப்படும் போது உள்ளம் கொதிக்கிறது. மனிதனின் பல கொடூரமான செய்கைகளை நிமித்தம் ஒருசில நல்ல மனிதர்களையும் கண்கள் நம்ப மறுக்கிறது.