கடந்த நாள் நான் அலுவலகம் புறப்பட்டு வந்தபோது எலும்பும் தோலுமாக உடம்பெல்லாம் சொறியோடு அலைந்த ஒரு சிறிய நாய் குட்டியை பார்த்து மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.
அந்த நாய்குட்டியாக ஒருவளை நான் இருந்திருந்தால்!!!!!! என்ன செய்திருப்பேன் என்று யோசித்து பார்த்தேன்.
குட்டிநாய் தன்னை பெற்றுபோட்ட தாய் நாயிடம் போய்: என்னை பெற்ற தாயே! உனக்கே சோறில்லாமல் தெரு தெருவாய் அலைந்து தோலாகிபோய் இருக்கிறாய் பிறகு என்னை எதற்கு பெற்றாய் தாயே? சரி பெற்றதுதான் பெற்றாயே எனக்கு உணவு தர உன்னால் முடிகிறதா? அடுத்த வீட்டில் கொட்டும் எச்சில்களை பொறுக்க ஆவலோடு நான் ஓடினால் எனக்கு முன்னே நீ ஓடி தின்றுவிட்டு என்னை பார்த்து முறைக்கிறாய். உன் பாட்டுக்கு கிடைத்ததை தின்றுவிட்டு ஒத்தையில் வாழ்ந்து செத்து போகவேண்டியதுதானே என்னை ஏன் பெற்றாய்? சொல் தாயே சொல்!
தாய் நாய் : உன்னை பெற்றதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது மகளே. நான் எவ்வளவோ விலகி ஓடியும் என்னை விடாமல் துரத்தி வந்து கெடுத்துவிட்டு அவன்பாட்டுக்கு போய்விட்டான் உனது அப்பன் . ஒரு பாவமும் அறியாத நான் உன்னை சுமது கஷ்டபட்டு பெற்று எனக்கு உணவில்லாத போதும் உனக்கு பால்கொடுத்து வளர்த்து விட்டிருக்கிறேன். உன்னை பெற்றதற்கு நான் பொறுப்பல்ல. அதோ ரோட்டில் படுத்து கிடக்கிறான் பார் உன் கிழட்டு அப்பன் அவனை போய் கேள்!
குட்டிநாய் தன தகப்பனிடம் சென்று : ஏய் கிழட்டு டாடி. உனக்குத்தான் வயசாகிவிட்டது எழுந்து கூட நடக்க முடியாமல் படுத்து கிடக்கிறாய். ஒரு வேளை உணவுக்கு வழியில்லாமல் அல்லாடுகிறாய். ஆகினும் எனது தாயை கெடுத்து ஏன் என்னை பிறக்க வைத்தாய். நான் இப்பொழுது உன்னால் எவ்வளவு கஷ்டபடுகிறேன் பார். உண்ண உணவில்லை/ மழை வந்தால் ஒதுங்க இடமில்லை எங்கு போனாலும் என் சொறியை பார்த்து எல்லோரும் விரட்டுகிறார்கள் ஏன் இப்படி செய்தாய்?
தகப்பன் நாய்:நான் என்ன செய்வது மகளே! எனக்கு வயதாகி விட்டதுதான். அங்கு இங்கு வேகமாக ஓட முடியவில்லைதான் ஆனால் ஒரு குறிப்பிட்ட காலம் வரும்போது எனக்கு எதோ ஒரு வேகம் வந்து விடுகிறது. என் வலிகளை கூட பொருட்படுத்தாமல் உன் அம்மாவின் பின் ஓடுகிறேன் அவள் எவ்வளவோ "வள்" "வள்" என்று திட்டிவும் விலகி ஓடியும் விடாமல் விரட்டி தப்பு பண்ணிவிடுகிறேன். உண்மையில் யோசித்து பார்த்தால் எனக்குகூட அவமானகாகதான் இருக்கிறது! ஆனால் நான் என்னை செய்ய மகளே? என்னை கடவுள் இப்படி படைத்து வைத்திருக்கிறார். இந்த இந்த காலத்தில் இது இது நடக்கவேண்டும் என்று அவர் செய்திருக்கிறார் அதற்க்கு நான் என்ன செய் முடியும்? நீ வேண்டுமானால் நாம் எல்லோரையும் உண்டாக்கிய கடவுளை போய் கேட்டுப்பார்.
குட்டிநாய் கடவுளிடம் சென்று: எல்லாவற்றையும் படைத்த என் ஆண்டவரே. படைத்த்ததை சரியாக பாதுகாக்க உண்மைக்கு தெரியாதா? என்னை ஏன் படைத்தீர்? எந்த பாவமும் செய்த ஞாபகம் எனக்கு இல்லை! யாரையும் கெடுத்ததாக எனக்கு நினைவில்லை. ஏனென்பதே தெரியாமல் நான் இவ்வளவு பாடுகளை அனுபவிக்கிறேனே? உணவில்லாமல் நான் எலும்பும் தொலியுமாக இருக்கிறேன். உடம்பெல்லாம் சொறி! சொரிந்து சொரிந்து இளைத்து போனேன்! எங்கு படுத்தாலும் ஈ கொசு தொல்லை தாங்க முடியவில்லை அநேகர் கல்லெடுத்து எறிகிறார்கள் கண்டதையும் தூக்கி அடிக்கிறார்கள். இந்த தெருவை விட்டு அடுத்த தெருவுக்கு போகமுடியவில்லை கண்ட நாய்கள் எல்லாம் என்னை கடித்து விடுகிறது. இன்னும் நான் பெரிதானால் கண்ட ஆண் நாய்களும் என்னை விரட்டும் பிறகு நானும் என் தாய் செய்த அதே தவறை செய்து குட்டிபோட வேண்டும். ஐயோ நினைத்து பார்க்கவே பயமாக இருக்கிறது! என் வேதனை சொல்லி முடியாது! என்னை ஏன் படைத்தீர் ஆண்டவரே? இப்பொழுதே எனக்கு பதில் வேண்டும் ஐயா!
ஆண்டவரின் பதில் என்னவாக இருக்கும்! தெரிந்தவர்கள் ஆராய்ந்து சொல்லுங்கள் சகோதரர்களே!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)