அநேக ஊழியங்களை செய்யும் ஒரு தேறின ஆவிக்குரிய சகோதரி சைதாபேதடையில் நடந்துகொண்டு இருக்கும்போது அவருக்கு வந்த போன் காலில் பேசுபவருக்கு "நான் பெசன்ட் நகரில் இருக்கிறேன்" என்று ரொம்ப சாதாரணமாக பொய் சொன்னால், அவர்கள் தேவனின் வார்த்தைகளுக்கு கொடுக்கும் மதிப்புதான் என்ன?
பொய்யைக் களைந்து, அவனவன் பிறனுடனே மெய்யைப் பேசக்கடவன். - பவுல் - எபேசியர்
உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள் - ஆண்டவராகிய இயேசு
இப்படி அநேகரால் அதிகமாக வலியுறுத்தப்படும் இந்த "பொய் சொல்லக்கூடாது" என்ற காரியம் யாருக்குதான் தெரியாது? ஒரு சிறு பிள்ளையை அழைத்து கேடடாலும் பொய் சொல்வது தவறு என்று சொல்லும் அது அவரவர் மனசாட்சிக்கே தெரியும்.
ஆனாலும் அநேகர் பொய்ச்சொல்வதை ஒரு பாவமாகவே கருதுவது இல்லை. கேடடால் ஒரு பொய்கூட சொல்லாமல் இந்த காலத்தில் வாழ்வது கடினம் என்கிறார்கள்.
எதோ ஆண்டவர் இந்த காலத்தை பற்றி ஏதும் அறியாமல் அன்று சொல்லிவிடடார்போல் இருக்கிறது அவர்களின் பதில்.
தேவனின் வார்த்தைகள் எதுவாக இருந்தாலும் அதை அறிந்தும் மீறுபவர்களுக்கு அதற்க்கான தண்டனை நிச்சயம் உண்டு . இப்படி துணிந்து வார்த்தைகளை மீறி சாதாரணமாக பொய் சொல்லிவிட்டு பிறகு பிரச்சனை வரும்போது "ஐயோ நான் எந்த தப்புமே செய்யலியே எனக்கு ஏன் இவ்வளவு பிரச்சனை ஆண்டவர் ஏன் என்னை சோதிக்கிறார்" என்றெல்லாம் புலம்புவதில் அர்த்தமே இல்லை.
சில வருடங்களுக்கு முன்னர் என் மகன் குழந்தையாக இருந்தபோது அவனுக்கு மிக அதிகமாக சளி பிடித்து சுவாசிக்க முடியாமல் திணற ஆரம்பித்தான் எத்தனையோ மருந்துகள் பார்த்தும் சரியாகவே இல்லை. என்ன செய்வது என்று தெரியாமல் ஆண்டவரிடம் சென்று நீண்ட நேரம் அமர்ந்து ஜெபித்து இந்த சளி எதனால் வந்தது என்று கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும் என்று ஜெபித்தேன். நீண்ட நேரத்துக்கு பிறகு நான் எங்கள் கணக்குகள் தணிக்கை செய்யும்போது ஆடிட்டரிடம் ஒரு பொய் சொன்னதை ஆண்டவர் உணர்த்தினார். உடனே அவரிடம் போன் செய்து உண்மையை செல்லும்படியும் வலியுறுத்தினார். உடனே அவரிடம் போன் செய்து மன்னிப்பு கேட்ட்டேன். மனம்சமாதானமானது.
அதன் பின்னர் எங்கள் அலுவலகத்தில் உள்ள ஒருவர் சொன்ன ஒரு சாதாரண மருந்தை தேவன் ஞாபகப்படுத்தினார். அதாவது சூடத்தை தேங்காய் எண்ணெயில் காய்த்து நெஞ்சு உடம்பில் தடவியபோது சளி முற்றிலும் நீங்கிவிட்ட்து
இதுபோல் நாம் தேவனின் வார்த்தைகளை மீறி செய்யும் பாவமானது நமக்கு எங்காவது பிரச்னையை கொண்டுவருவது உறுதி. எனவே நம் வாயின் வார்த்தைகளில் கவனம் வைத்து பொய் சொல்வதை முற்றிலும் களைய முயற்சி செய்தால் அநேக பிரச்சனைகள் நம்மைவிட்டு தானாகவே தூர ஓடிப்போகும்.
Please Try
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)