இப்படி மாற்றி மாற்றி கேள்விகளை கேட்டு கேட்டுத்தான் எல்லோரும் பெரிய அறிவு ஜீவிகளாகி ஆண்டவரின் வார்த்தைக்கு வேறு அர்த்தத்தை கர்ப்பித்து அவர் கற்பனைகளை தள்ளிவிட்டுவிட்டொம்
"ஓய்வுநாளில் நெருப்பு மூடிடாதே" என்றால் ஒரு சிறு பிள்ளைக்கும் புரியும். அதை அப்படியேய் கடைப்பிடிப்பதில் நமக்கு கடினம் எனவே அதை எப்படிஎல்லாமோ மாற்றி கேள்விகள் கேட்டு இறுதியில் அது இது அல்ல என்று முடித்து விடுகிறோம்.
இதை ஆண்டவராகிய இயேசு ஒரு அருமையான உதாரணமாக சொல்லுவார்.
மத்தேயு 15:4உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்றும்; தகப்பனையாவது தாயையாவது நிந்திக்கிறவன் கொல்லப்படவேண்டும் என்றும், தேவன் கற்பித்திருக்கிறாரே.
11. நீங்களோ, ஒருவன் தன் தகப்பனையாவது தாயையாவது நோக்கி: உனக்கு நான் செய்யத்தக்க உதவி எது உண்டோ, அதைக் கொர்பான் என்னும் காணிக்கையாகக் கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டால் அவனுடைய கடமை தீர்ந்தது என்று சொல்லி,
12. அவனை இனி தன் தகப்பனுக்காவது தன் தாய்க்காவது யாதொரு உதவியும் செய்ய ஒட்டாமல்;
13. நீங்கள் போதித்த உங்கள் பாரம்பரியத்தினால் தேவ வசனத்தை அவமாக்குகிறீர்கள். இதுபோலவே நீங்கள் மற்றும் அநேக காரியங்களையும் செய்கிறீர்கள் என்று சொன்னார்.
அதாவது இனி தெள்ள தெளிவாக நீங்கள் ஒய்வு நாளில் அடுப்பிலோ கேஸ் ஸ்டவ்விலோ அல்லது வேறு எந்த விதமாகவும் நெருப்பை உண்டாக்க கூடாது என்று சொல்ல வேண்டுமோ?
மேலும் அண்ணா நாம் ஒய்வு நாளில் சமைக்கவும் கூடாது அத்தோடு அந்நாளில் வியாபாரம் செய்பவர்களையும் ஊக்குவிக்க கூடாது எனவே அன்று ஒய்வு நாட்களில் நாம் எப்படி சாப்பிடுவது?
முந்தைய நாள் செய்து வைத்தல் மறுநாள் கேட்டு போய்விடுமே?
சிஸ்ட்டர் இதுவரை யாரும் இந்த அளவுக்கு ஆழமாக ஓய்வுநாள் கைக்கொள்வது பற்றி கேட்டது இல்லை.
இங்கு வந்து படிக்கும் அனைவரும் அறியவேண்டும் இந்த காரியம் வெளியார்ங்கமாக அனைவருக்கும் தெரிய வேண்டும் என்ற காரணத்துக்காக கர்த்தரே உங்களை அனுமதித்திருக்கிறார் என்று எண்ணுகிறேன்.
இந்த கற்பனையை கைக்கொள்வதற்கு மிகுந்த அர்ப்பணிப்பு வேண்டும். அதனால் மிகப்பெரிய நன்மைகள் உண்டு. நோய் நொடி வருவது விபத்து வருவது தேவையற்ற செலவு வருவது பிறரிடம் திட்டு வாங்குவது எல்லாமே தேவனால் தடுக்கப்படும்
நீங்கள் முதலில் பணம் சம்பாதிப்பது செலவழிப்பது மற்றும் நமக்கு பிரியமானதை செய்யாமல் இருப்பது சொந்த வேலைகளை செய்யாமல் தவிர்ப்பது போன்ற காரியங்களை கைக்கொட்டு நடக்க பிரயாசம் எடுங்கள்.
சமைப்பது சம்பந்தமான காரியங்களை நாங்கள் எப்படி கையாளுகிறோம் என்று தொடர்ந்து சொல்கிறேன்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
ஒய்வு நாள் கட்பனைகளை கைக்கொள்வதில் எனக்கு இப்போ மிகுந்த விருப்பம் உள்ளது.
என் மூலம் கர்த்தர் அனுமதிக்கிறார் என்று நீங்கள் கூறும் போது மிகுந்த சந்தோசமாகவும் சமாதானமாகவும் இருக்கிறது.
//////////////////////////////சிஸ்ட்டர் இதுவரை யாரும் இந்த அளவுக்கு ஆழமாக ஓய்வுநாள் கைக்கொள்வது பற்றி கேட்டது இல்லை.
இங்கு வந்து படிக்கும் அனைவரும் அறியவேண்டும் இந்த காரியம் வெளியார்ங்கமாக அனைவருக்கும் தெரிய வேண்டும் என்ற காரணத்துக்காக கர்த்தரே உங்களை அனுமதித்திருக்கிறார் என்று எண்ணுகிறேன். ///////////////////
கர்த்தருக்கே மகிமை
மேலும் உணவு விடயத்தை தொடர்ந்து சீக்கிரம் எழுதுங்கள் அண்ணா.
ஓய்வுநாள் என்பது முந்திய நாள் சாயங்காலம் ஆரம்பித்து ஆதாவது நாம் ஞாயிற்று கிழமையை ஓய்வுநாளாக ஆசாரித்தால் சனிகிழமை சாயங்காலத்தில் இருந்து ஞாயிறு சாயங்காலம்வரை 24 மணி நேரம் ஆகும். சாயங்காலத்தில் எந்த மணி நேரத்திலும் ஆரம்பிக்கலாம். 6 நாள் வேலை செய்தபின் உங்களுக்கு விடுமுறை கிடைக்கும் எந்த ஒரு நாளை வேண்டுமானாலும் ஓய்வுநாளாக தெரிவு செய்துகொள்ளலாம்.
லேவியராகமம் 23:32சாயங்காலம் துவக்கி, மறுநாள் சாயங்காலம்மட்டும் உங்கள் ஓய்வை ஆசரிக்கக்கடவீர்கள் என்றார்.
எந்த ஒரு பாவம் செய்தவனும் சாயங்காலம் மட்டும் தீட்டு பட்டிருப்பான் என்று வசனம் அநேக இடங்களில் சொல்கிறது
லேவியராகமம் 14:46வீடு அடைக்கப்பட்டிருக்கும் நாட்களில் அதற்குள் பிரவேசிக்கிறவன்
சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.
எனவே சாயங்காலத்தோடு அந்த நாள் முடிவடைகிறது.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
எங்கள் வழக்கப்படி நாங்கள் சனிக்கிழமை சாயங்காலம் 6-61/2 மணிக்குள் ஓய்வுநாளை துவங்குவோம். அதற்க்கு முன்னர் சமைக்க வேண்டியதை சமைத்து அவிக்க வேண்டியதை அவித்து மறுநாளுக்காக சேர்த்து வைத்துகொள்வோம
மறுநாள் கேட்டு போகாத பதார்த்தங்கள் சிலவற்றை சமைத்து வைத்துகொள்வோம்
இட்டிலி கெட்டுப்போகாது - தேவையான சட்டினி/துவையல் மறுநாள் அரைத்து கொள்வோம் , இட்லிப்பொடி போன்றவை கெட்டுப்போகாது
பிரட் வாங்கி வைத்து சந்திவிச் செய்து சாப்பிடலாம்/ ஜாம் தடவி சாப்பிடலாம்
பொதுவாக ஒரே ஒரு நேரம் சாப்பிடுவோம் மறுநேரம் தேவைபடடால் கஞ்சி சாப்பிடுவோம்.
சனி இரவு டிவி / செல்போன் எதுவும் ஓடாது சமையல் கிடையாது. நாங்கள் குடும்பத்தோடு அமர்ந்து ஆண்டவரின் காரியங்கள் குறித்தும் சில ஜெனெரலான காரியங்கள் குறித்தும் பேசிக்கொண்டு இருப்போம். மறுநாள் லேடடாக எழுந்து 10மணி சபைக்கு போய்விட்டு மதியம் 12 மணிக்கு வந்து சிறிது நேரம் பேசிவிட்டு ஒரு தூக்கம் போட்டுவிட்டு சாயங்காலம் ஒரு குடும்ப ஜெபம் இப்படி ஒருநாள் சுலபமாக கடந்துவிடும்.
தொடக்கத்தில் சற்று கடினமாக தெரியும். ஆண்டவர் சொல்லியிருக்கிறார் என்று உறுதியாக இருந்தால் பின்னர் அது சுலபமாகிவிடு . எங்களுக்கு அது வழக்கமாகிவிடடது.
கர்த்தருக்கென்று ஒருநாள் ஒருவேளை சாப்பாட்டொடு இருக்கலாம் அல்லது சிலநாள் கெட்டுபோய்விட்ட்து என்றால் சாப்பிடாமல் உபவாசம்கூட இருக்கலாமே என்று இருந்துவிடுவோம்.
-- Edited by SUNDAR on Monday 19th of August 2019 11:58:27 AM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
///////////////////////லேவியராகமம் 23:32 சாயங்காலம் துவக்கி, மறுநாள் சாயங்காலம்மட்டும் உங்கள் ஓய்வை ஆசரிக்கக்கடவீர்கள் என்றார்///////////////////////
இவ்வசனத்தின் ஆரம்பத்தில் அது உங்களுக்கு விசேஷித்த ஒய்வு நாள் அன்று கூறப்படுகிறது .. அப்படியாயின் சாயங்காலம் தொடங்கி மறுநாள் சாயங்காலம் என்று சொல்லப்படுவது அந்த விசேஷ ஒய்வு நாளுக்கு மட்டுமா?
32. அது உங்களுக்கு விசேஷித்த ஓய்வுநாள்; அதில் உங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப்படுத்தவேண்டும்; அந்த மாதத்தின் ஒன்பதாந்தேதி சாயங்காலம் துவக்கி, மறுநாள் சாயங்காலம்மட்டும் உங்கள் ஓய்வை ஆசரிக்கக்கடவீர்கள் என்றார்.
///////////////////////லேவியராகமம் 23:32 சாயங்காலம் துவக்கி, மறுநாள் சாயங்காலம்மட்டும் உங்கள் ஓய்வை ஆசரிக்கக்கடவீர்கள் என்றார்///////////////////////
இவ்வசனத்தின் ஆரம்பத்தில் அது உங்களுக்கு விசேஷித்த ஒய்வு நாள் அன்று கூறப்படுகிறது .. அப்படியாயின் சாயங்காலம் தொடங்கி மறுநாள் சாயங்காலம் என்று சொல்லப்படுவது அந்த விசேஷ ஒய்வு நாளுக்கு மட்டுமா?
32. அது உங்களுக்கு விசேஷித்த ஓய்வுநாள்; அதில் உங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப்படுத்தவேண்டும்; அந்த மாதத்தின் ஒன்பதாந்தேதி சாயங்காலம் துவக்கி, மறுநாள் சாயங்காலம்மட்டும் உங்கள் ஓய்வை ஆசரிக்கக்கடவீர்கள் என்றார்.
மற்ற நாட்களில் எப்படி ஆசாரிப்பது ?
சூரியன் அஸ்தமிக்கும் நேரம்தான் நாள் முடியும் நேரம் என்று பைபிள் அடிப்படியில் கணிக்கப்படுகிறது.
"We should observe the seventh day of the week ), from even to even, as the Sabbath of the Lord our God. Evening is at sunset when day ends and another day begins."
மேலும்
யூதர்கள் எல்லா ஓய்வுநாளையும் சாயங்காலம் தொடங்கி சாயங்காலம்தான் ஆசாரிக்கிறார்கள்
அடுத்து
வேதத்தில் இந்த ஒரு இடம் தவிர வேறு இடத்தில் ஓய்வுநாளுக்கான நேர கணக்கு சரியாக சொல்லப்படவில்லை எனவே அதில் சொல்லப்படடபடியே எல்லா ஓய்வுநாளையும் ஆசாரிப்பது ஏற்றதுதான்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
சாயங்காலம் என்று வசனம் சொல்வதால் 4 மணிக்குமேல் ஓய்வுநாள் எடுக்கலாம் என்றே எண்ணுகிறேன் நாங்களும் முதலில் 5 மணிக்குமேல்தான் எடுத்தோம்.
அனால் தற்போது என்னுடைய கணிப்புபடி சூரியன் அஸ்தமித்த பிறகே ஒரு நாள் முடிந்து இன்னொருநாள் ஆரம்பமாகிறது என்ற கணக்கில் எடுக்கிறோம்.
சிஸ்ட்டர் உங்களால் முடிந்ததை செய்யுங்கள் நீங்கள் இவ்வளவு தூரம் ஏற்றுக்கொண்டு கைக்கொள்ள முடிவு எடுத்ததே பெரிய காரியம் ஆண்டவரிடம் கேளுங்கள் நிச்சயம் அவர் இடைப்பட்டு சரியான வழியை காட்டுவார்.
சகலத்தையும் உங்கள் கஷட நஷடத்தையும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஆண்டவரிடம் சொல்லிக்கொண்டே இருங்கள்
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)