கடன் வாங்கியவனுக்கு அடமானத்தை திருப்ப கொடுத்து:
இன்றைய உலகில் . பணத்தை கடனாக கொடுக்கும் முன் அதன் மதிப்புக்கு ஏற்றார் போல் பொருளை அடமானமாக வாங்கிக்கொள்வது பரவலாக எல்லா இடங்களிலும் காணப்படுகிறது.
தங்கநகைகள், வீடு, மனை, பாத்திரங்கள், வயல்கள் மற்றும் அனேக பொருட்களின் அடமானத்தின் பேரில் கடன் வழங்கப்படுகிறது. இப்படி கடன் வாங்கியவர் ஒருவேளை அந்த கடனை திரும்ப தரமுடியாவிட்டால் அடமானம் வைக்கப்பட்ட பொருள் கடன் கொடுத்தவர் எடுத்துகொள்ளவோ, அல்லது விற்று பணம் பண்ணவோ அவருக்கு உரிமை உள்ளது.
ஆனால் ஒருவன் கர்த்தரின் வழியில் சரியாக நடக்க வேண்டுமென்றால் தான் அடமானமாக பெற்ற பொருளை எக்காரணத்தை கொண்டும் வைத்துக்கொள்ளாமல் உரியவனிடம் திருப்பி கொடுத்துவிட வேண்டும். அவன் ஒருவேளை கடனை திருப்பி தராமல் போனாலும் அந்த பொருள் கடன் கொடுத்தவனை சாராது. ஆம் உலக நீதிக்கும் இறைவனின் நீதிக்கும் அனேக வித்தியாசங்கள் உள்ளது
எனவே அடமானமாக பெற்ற பொருள் எதுவும் தன்னிடத்தில் இருந்தால் உடனே அதை திருப்பி கொடுக்க கடவன்