இந்த தளம் இந்த உலகத்திற்கு வந்துள்ள வாதையின் நிமித்தம் அநேக நாட்களாக அமைதி காத்துள்ளது.. தளத்தில் பதிவிட பலருக்கு சிரமம் ஏற்பட்டிருக்கலாம் ஆனால் இந்த தளத்தின் மூலம் அநேகர் பயனடைவதுண்டு தேவன் இந்த தளத்தின் மூலம் கிரியை செய்கிறார். எனவே யாவரும் மீண்டும் இந்த தளத்திற்கு வந்து பயனடையும்படியாக மறுபடியும் பதிவுகளை மேற்கொள்ளுபடியாக பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.. யாவரும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்வதுடன் தங்கள் சந்தேகங்களையும் பதிவிட்டு தீர்த்துக்கொள்ளலாம்.. மற்றவர்களின் விசுவாசத்தை தூண்டும் சாட்சிகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.. சகோதரர்களாக ஒன்றாக இணைந்து தேவ நாமத்தை மகிமைப்படுத்துவதோடு ஒருவரை ஒருவர் தாங்கி நடப்போமாக..
அன்பான சுந்தர் அண்ணா உங்களின் பதிவுகள் மூலம் அநேகர் பயனடைகிறார்கள் அதில் நானும் ஒருத்தி..
தொடர்ந்து முடிந்த நேரமெல்லாம் எழுத்தும்படியாக கேட்டுக்கொள்கிறேன்.